Sunday, March 9, 2014

வறண்ட மண்ணில் ஒற்றை மழைத் துளி – குயில் கூவியது

வறண்ட மண்ணில் ஒற்றை மழைத் துளி – குயில் கூவியது


இன்று அதிகாலை ஓர் அதிசயம் நிகழ்ந்தது, குயிலின் இன்னிசை கொழும்பில் ஒளித்தது, அதைக் காது குளிரக் கேட்டு மனது மகிழ்வினால் நிறைந்தது. விதவிதமான ராகங்களில் குயில் கூவுவதை ஊரில் இருந்த போது ரசித்து மகிழ்ந்து, குயிலுக்குப் பதில் கூவல் நாமும் கொடுத்து அதற்குக் குயிலும் பதில் தந்து இன்பமாய்க் கழிந்த பொழுதுகளின் ஏக்கம் கொழும்பு வாழ்வே கதியென்றான போது நம்மை வாட்டாமல் இல்லை.

ஒலித்தது ஆண் குயிலின் கம்பீரக் குரல், இரண்டுவிதமான ராகங்களில் இடைவெளி விடாமல் அது கூவிக்கொண்டிருக்கும்போதே ஆண் குயில்தான் என்பதைத் தெரிந்து கொள்ள எனக்கு நீண்ட நேரம் தேவைப்படவில்லை, பசுமை குறைந்து குச்சிகளுடன் நிற்கும் பழம் தராத நோஞ்சான் மரங்கள் உள்ள ஒரு பகுதியில், கொரித்துப் பார்க்கப் பழங்களோ விதைப்பருப்புகளோ இல்லாத கட்டடக் காட்டுப் பகுதியில் அந்த ஓசையை ரசிப்பது  நீண்ட நாட்களுக்குப் பின்னர் காதல் ததும்ப மனைவியைச் சந்திப்பதற்கு ஈடானது. அன்பின் ஈர்ப்பு மனது முழுவதும் வியாபித்து ஓர் அமைதி நிலவுமே, அது போல

வாகனங்கள் பேரிரைச்சலும் தேவையில்லாமல் எடுத்ததெற்கெல்லாம் கச்சாபுச்சா என்று சப்தமிடும் சாரதிகளும் ஹோர்ன் அடித்தே செவிப்பறையைச் செயலிழக்கச் செய்யும் செயற்பாடுகளும் நம்மை வெறுப்படையச் செய்து எங்காவது காகம் கரைந்தால் கூட அதையும் ரசிக்கச் செய்யும் வறுமையை விதைத்துவிட்டு நகர வாழ்க்கை நரகத்தின் ஸ்டைலில் கம்பீரமாக நிற்கிறது. 

அமைதியாகப் பேச முடியாதபடியும் நமக்கு மிக அன்மையில் இருப்பவரிடம்கூட சப்தமாய்ப் பேசும் தன்மையினையும் நமக்குப் பரிசளித்துவிட்டு ஆறுதல் கொள்ளும் கொழும்பின் இரைச்சலை எரிச்சலுடன் ஏற்றுக்கொண்டாக வேண்டிய நிர்ப்பந்தத்தை என்னவென்று சொல்லத் தெரியவில்லை. இந்தக் கொடுமையெல்லாம் சகித்துக் கொண்டுதான் வாழ்ந்தாகவேண்டிய துரதிஷ்டத்தை விளக்கிச் சொல்ல என்னிடம் வார்த்தைகளில்லை, 

குயிலின் ராகம் என் செவிகளுக்கு விருந்தானது நான் பெற்ற பெரும் பேறு போலத்தான் தோன்றியது. நரகில் வேதனைப் பட்டுக் கொண்டிருப்பவனைக் கொஞ்ச நேரம் சுவர்க்கத்தில் வீசியெறிந்தது போல இருந்தது. அப்படியொரு ஆறுதல். இந்த வருடம் முழுக்க அந்த இன்பத்தை நினைத்துக் கொண்டே அனைத்தையும் கடந்து சென்றவிடலாம் என்று தோன்றுகின்றது. 

கொழும்பில் குயில்களும் வசிக்கின்றன என்பதை இன்றுதான் ஆதாரபூர்வமாக அனுபவத்தில் கண்டுகொண்டேன். காகங்கள் வசிக்கும் போது கட்டாயம் குயில்களும் வசிக்கத்தானே வேண்டும் என்பது எனது நிலைப்பாடு, அத்தோடு ஒரு சந்தேகமும் இருந்தது, காகங்களுக்கே இங்கே கூடுகள் இல்லை அப்படியிருக்கும போது குயில்கள் இங்கு வசிக்குமா என்பதுதான் அது. ஒரு தசாப்தமாகக் ஊமையாகக் கிடந்த அந்த அந்த சந்தேகம் இன்று ஓரளவுக்குத் தீர்ந்தது, காரணம் கூவியது ஒரு குயில்தானே.

சோடி இழந்து திசை தப்பி வந்து அல்லது கோபித்துக் கொண்டு வந்து இங்கு அது செட்டிலாகி இருக்கலாம், ஆயினும் அதன் குரலில் ஒரு இன்பம் தொனித்தது, அதில் களையிழந்த ராகம் இருக்கவில்லை அப்படியாயின் அது திருப்தியோடுதான் கூவியிருக்க வேண்டும். மகளிர் தினத்துக்கு அடுத்த நாள் இவ்வளவு கம்பீரமாகக் கூவும் அது சிலவேளை தன் துணையிடமிருந்து விடுதலைபெற்று வந்துமிருக்கலாம். அதனால்தான் குடைகளுக்குள் தம்மை மறைத்துக் கொண்டு காமக் களியாட்டம் ஆடும் காதலர்கள் போல ஒரு பெரு மகிழ்வுடன் இருந்தது போலும்.

தொன்னூற்றைந்து வீத வாகனங்கள் மௌனம் உடுத்தி ஓய்வெடுக்கும் பொழுதில் குயில் கூவியது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. சூரியன் உதித்தபின்னர்தான் கண் திறக்கும் அநேகரைப் போல நானும் இருந்திருந்தால் இன்று நான் இந்த இசையை ரசிக்கும் பாக்கியத்தினை இழந்துவிட்டிருப்பேன்.நல்ல வேளை அயர்ந்து தூங்கமால் அரைத் தூக்கத்துடன் புரண்டு கொண்டிருந்தது நல்லதொருவாய்ப்பாகித்தான் போனது.

ஆண் குயில்களைவிடவும் பெண்குயில்கள் மிகவும் இனிமையாகக் கூடுவும். அதில் ஓர் அலாதியான ஈர்ப்பு இயல்பிலேயே இருக்கும், அந்தப் பரவசமூட்டும் தொனியை மறைத்துக் கொண்டு ஆண்களைப் போலக் கூவப் பல குயில்கள் முயன்று வருவதையும் நன்கு அவதானிப்பவர்கள் புரிநது கொள்ள முடியும். இங்கு எந்த ஆதிக்கவாதத்தையும் நான் சொல்லவில்லை வெறுமனே குயில் பற்றியும் அதன் கூவுகை பற்றியும்தான் சொல்கின்றேன். இயல்பாகச் சொல்லப் படும் பலதையும் அது தமக்குத்தான் சொல்லப்படுகின்றது எனக் கருதி உடனே சண்டைக்கு வரும் குடிகாரப் பெண்களும் வலிசல் ஆண்களும் பரவலாக வாழும் காலம் என்பதாலும் ஒரு பெட்டைக் காக்கைக்காக பல கிழடுதட்டின வெளவால்களும் கலிசரைப் பக்குல்களும் விதவிதமான சாயம் பூசிக் கொண்டு துடைப்பம் தூக்கிய சக்கிலியர்களாக வரிசையில் வந்துவிடுகின்றார்கள் அதற்குள் லீலை பண்ணும் கிருஷ்னரின் நினைப்பு வேறு அதனால்தான் சொல்கிறேன் இது குயிலின் கூவுகை பற்றிய ரசனை மாத்திரமே.

கூ.....ஊவ்....கூ.....ஊவ்

No comments:

Post a Comment