Friday, March 7, 2014

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் மீதான தாக்குதலும் அமைச்சரின் தம்பியும்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் மீதான தாக்குதலும் அமைச்சரின் தம்பியும்

அவ்வப்போது பல தாக்குதல்கள் புலிகள் காலத்தில் நடந்தேறின. அவற்றில் வெகு சில தாக்குதல்களே முழுமையாகக் கண்டுபிடிக்கப்பட்டன. தடுக்கப்பட்டன, மற்றபடி பெரும்பான்மையான தாக்கதல்களின் மூலத்தைக் கண்டுபிடித்தல் என்பது வசப்படாத ஒன்றாகவே அமைந்துவிடுகின்றமை ஒரு துரதிஷ்டமான நிலையாகவே இருந்தது என்பதை கடந்தகால வரலாறு தெளிவாக நிரூபிக்கிறது. ஆட்கடத்தல், கொலை, குண்டுவெடிப்பு என்பனவற்றுக்கெல்லாம் சில முக்கிய தடயங்கள் காலங்கடந்தேனும் ஒரு புலனாய்வுக்காரனுக்குக் கிட்டக்கூடும். அவை மிகவும் ஆச்சரியமாகவும் நம்பமுடியாதவையாகவும் கூட இருக்கும். இந்நாட்டில் நடந்தேறிய பல கொலைகள் மர்மம் நிறைந்த துலங்காத ஒரு கரும்பகுதியாகவே இருக்கும். சிலவை விடப்படும் சிறிய தவறுகளில் இருந்து வெளிப்படும், சிலவை ஒரு நாகடமாக நடந்து திசையைத் திருப்பிவிட்டு மௌனமாகிவிடும், துரதிஷ்டவசமாக சில அப்பாவிகள் சம்பந்தமேயில்லாது அகப்பட்டுக்கொண்டு தண்டனை அனுபவிப்பர், இங்கும் ஒரு முக்கியமான விடயத்தின் துவக்கப்புள்ளியை மட்டும் இடுகின்றேன். 

 முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் குதித்த போது அவரை இலக்கு வைத்த ஒரு தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டமை நாடே அறிந்ததுதான். அந்தத் தாக்குதலில் அம்மையார் ஒரு கண்ணையும் இழந்தார் அதன் மூலம் விளைந்த அனுதாப அலை அவரை மிக இலகுவாக தேர்தலிலும் வெற்றி பெறச் செய்திருந்தது. இந்தத் தாக்குதலும் புலிகளின் மீது போடப்பட்டு அறிக்கை அறிக்கையாக வந்து குவிந்து இற்றைக்கு சுமார்  15
வருடங்கள் கழிந்து விட்டன. ஆயினும் மர்மம் முழுமையாகத் துலங்கவில்லை.

அம்மையார் மீதான தாக்குதலுக்கு இப்போதைய அமைச்சில் இருக்கும் ஒரு அமைச்சரின் தம்பி அப்போதைய தாக்குதலுக்கு பல வகையிலும் தாக்குதல் தாரிகளுக்கு உதவியளித்துவிட்டுப் பின்னர் நாட்டைவிட்டுத் தப்பிச் சென்று மீண்டும் நாட்டுக்கு வந்து இப்போது அவரும் அரசியல் வேசம் போட்டுக் கொண்டு நல்லபிள்ளையாக இருப்பது  ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. விசாரனைகள் முடிந்து குற்றவாளிகளுக்குத் தண்டனையும் கிடைத்துவிட்டது என்று விடுபட்டவர்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்கலாம், ஆனால் காலம் என்று ஒன்று இருக்கிறது, அது பல வடிவங்களில் செயற்படும் இப்போதும் கூட அப்படித்தான். காலம் புது வடிவம் எடுத்திருக்கிறது. சரியான ஆதாரங்களோடு எவனாவது ஒருவன் வந்து நிற்பான் அப்போது எல்லோரும் மலைத்துப் போய் நிற்பார்கள். உண்மை அனைவரையும் பார்த்துப் புன்னகைக்கும்.

இந்தக் கேசை விசாரிக்கும் அதிகாரம் எனக்கு மட்டும் இருந்தால் அமைச்சரும் முகவரி இழந்து போவார் அவரின் வால்களும் அனாதைகளாகிப் போகும். தம்பியும் கம்பி எண்ணிக் கொண்டிருப்பார். 
எல்லோரும் குழம்பிப் போய் இருக்கக் கூடும் அந்த அமைச்சர் யாரென்று!!!!!!!!!!!! 

குழப்பத்தின் வீரியத்தைக் குறைக்க ஒரு டிப்ஸ் தரட்டுமா?
அந்த அமைச்சர் ஒரு முஸ்லிம்
-musdeen-

1 comment:

  1. அப்படியா யாரைத்தன்நம்புவதோ...பாடலின் அந்த வரி மட்டும் வந்துபோகிறது

    ReplyDelete