Saturday, March 1, 2014

அனார் கவிதைகளில் தொனிக்கும் இஸ்லாம்


9 comments:

  1. அனாரின் திருட்டுக் கவிதைகள்

    'நஸ்ருல் இஸ்லாம்' எனும் கவிஞரின் 'புரட்சிவாதி' கவிதை

    அக்கினி,
    பூமியை உழுக்கிடும் பூகம்பம்,
    புயல்,
    பிரபஞ்ச சாபம்,
    விடுதலை வேட்கையன்,
    மாவீரன் நான்
    ………
    பூமியின் மார்பிலுள்ள
    குமுறும் எரிமலை நான்
    கரு நரகின் வெறி சினக்கும்
    கோபக் கடல் நான்’

    ‘நான் பெண்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட அனாருடைய கவிதை

    ஒரு காட்டாறு
    ஒரு பேரருவி
    ஓர் ஆழக் கடல்
    ஓர் அடை மழை
    நீர் நான்

    கரும் பாறை மலை
    பசும் வயல் வெளி
    ஒரு விதை
    ஒரு காடு
    நிலம் நான்

    ReplyDelete
  2. கவிஞர் குட்டிரேவதியின் 'வானத்தினடியில் தங்கும் பறவைகள்' கவிதை

    பறவைகள் தமது அலகில்
    பருவங்களை
    ஒரு துருவத்திலிருந்து மறு துருவத்திற்குச்
    சுமந்து செல்கின்றன

    ................
    ................

    கூட்டைப் பிரிக்கும் முதல் வெளிச்சத்தின்
    கனிந்த குரலை
    அவை புரிந்து கொள்கின்றன
    விதைகளை வெளிச்சப் படுத்தித்
    தாவரங்களின் மெளனத்தைப் பேணுகின்றன

    ...............
    ...............

    இரவில் பறவைகள் வானத்தினடியிலேயே
    தங்கிவிடுகின்றன

    அனாரின் 'பருத்திக் காய்கள் வெடிக்கும் நாள்' கவிதை

    ................
    ................

    வெடித்த பருத்திக் காய்களிலிருந்து
    பிரிந்த பஞ்சுகள்
    வேனிற்காலப் பொழுதொன்றைத் தூக்கிப் பறக்கின்றன

    ................
    ................

    அதிகாலைக் குளிரின் காமம்
    மரத்தினில் இன்னும் தங்கியிருக்கிறதா
    பருத்தி இலைகளில் தன்னை வழியவிட்டு
    துடிக்கிறது சூரியன்

    ஒளிச் சேர்க்கையின் நிறப்பிரிகை
    மூன்று காலங்களிலும்
    தங்கிவிடுகிறது

    ReplyDelete
  3. கவிஞர் குட்டிரேவதியின் இன்னுமொரு கவிதை
    தலைப்பு - நிர்வாணம்.

    உனக்கும் எனக்கும் அவளுக்கும்
    நிர்வாணம் தான் பளபளப்பான ஆயுதம்
    குருதியின் வியர்வையில் நனையும் போதெல்லாம்
    ஒரு பயிற்சியின் முழுமையை அடைகிறது
    மரங்கள் நிர்வாணத்தையடையும்போதுதான்
    இறக்கைகள் துளிர்க்கும் பறவைகளாயின
    சீனப் போர் வீரன் சொல்லுவான்
    "உறையிலிருந்து ஒரு பொழுதும்
    வாளை வெளியே இழுக்காதே
    அவசியமின்றி"
    நிர்வாணம் வளர வளரத்
    தீயின் கொழுந்தைப் போல்
    நிர்வாணத்துடன் வாழ்வது எளிதன்று
    அது உன்னை அலைக்கழிக்கும்
    உபயோகிக்கும் வாய்ப்பைத் தேடி
    வாளை ஒருபோதும்
    வெளியே இழுக்காதே அவசியமின்றி
    அது துருப்பிடித்துச் சல்லடையானாலும்
    ஆனால் உன்னோடே
    எப்போதும் வரித்துக் கொள் அதை

    இதனைப் பின்பற்றி எழுதிய அனாரின் கவிதை இது. தலைப்பு - நீல முத்தம்.

    முத்தம் விசித்திரமான
    நீலப் பறவையாக அலைகிறது
    அபூர்வமும் பிரத்தியேகமானதுமான பொழுதின்
    நீல மின்னல்கள்
    என் இரகசிய வனத்தில் நீ கண்டதில்லையா?
    ...................
    ...................

    பயிற்சிகளைப் பூரணப்படுத்தியிருக்கும்
    சிப்பாய்களைப் போல
    மிடுக்கும் ஒழுங்குமாக
    அவை ஆயத்தங்களுடனிருக்கின்றன
    ...................
    ...................

    மெல்லிய நீலத்துடன்
    எரியத் தொடங்குகிறது நெருப்பு
    சதைகளாலான பெருகும் விருட்சத்தில்
    பெயரிட முடியாத கனி பழுத்திருக்கிறது
    ..................
    ..................

    பளபளப்பாக
    கூர்மையான வாள்
    என் உறையிலிருந்து
    அச்சங்கள் எதுவுமற்று

    ReplyDelete
  4. கவிஞர் ஆழியாள் கவிதை - "பெருமடி"

    கடற்கரையில்
    எவ்வாறெல்லாம் புதைந்திருக்கிறோம்
    இரகசியங்களை

    .......
    ........

    இரைச்சலில்
    நம் காதுகளுக்கெட்டாத வாக்கியங்களின் கருணையையும்
    கரிக்கும் உப்புக்காற்றில்
    காதலர் மென்று விழுங்கிய அழகிய சொற்களையும்,
    பிரம்ம ரகசியமாய்க் கோர்த்து வைத்திருக்கிறது அப்பெருமடி

    ஒவ்வோர் நாளினது கடைநுனியிலும்
    நம் ஒவ்வோரது ஒவ்வொரு ரகசியமும்
    உயிர் பெற்று எழுகிறது
    சினை பொதிந்த ஒரு வெள்ளி மீனாய்
    ஓர் கடற்பாசித் தாவரமாய்
    ஓர் பவளப் பூப்பாறையாய் உருக்கொண்டு

    .....
    ....

    மேலும் இரகசியங்கள் பல வேண்டி
    ஆர்ப்பரித்துப் பாறைகளில் மோதிச் சிதறுகிறது கடல்
    கரையொதுங்கும் அலைகளுடு
    தவிப்பாய்க் காத்திருக்கின்றனர் கடற் கன்னியர்
    நம் இரகசியங்களைக் கடல் சேர்த்து உயிர்ப்பிக்க

    இந்தக் கவிதையைப் பின்னணியாகக் கொண்டு அத்தோடு இவற்றின் வரிகளைத் திருடிக் கொண்டு அனார் தனது "பருவ காலங்களை சூடித்திரியும் கடற் கன்னி" பின்வருமாறு எழுதுகிறார்.

    கடற் கன்னி பாடுவதை
    யார் கேட்டிருக்கிறீர்கள்?
    அபரிமிதமான ஆற்றலோடு தொடங்கும் பாடல்
    இரு கரைகளில் எதிரொலித்து
    துறைமுகங்களைத் தாண்டி விழுவதை

    ..........
    ......

    அவளின் நீண்டு நெளியும் வால் வசீகரிப்பினை
    படர்பாசிகளின கீழிருந்து வெளிவரும்
    மீன்குஞ்சுப் பட்டாளங்கள்
    பிரயாசையுடன் தொடர்கின்றன
    .....
    ......
    நள்ளிரவில் கடற் கன்னி
    மேகங்களை வேட்டையாடுகிறாள்
    அவற்றை வழுக்கும் பவளப் பாறைகளிடையே
    பதுக்கி வைத்து
    ஜெலி மீன்களை ஏமாற்றுகிறாள்
    சீறியெழுந்து நட்சத்திரங்களை ஆய்ந்து கொண்டு
    நீருக்குள் நழுவும் அற்புதத்தை
    தாம் மாத்திரமே பார்த்தபடியிருக்கின்ற கருங்கற் பாறைகள்
    தம்மை அறியாமலேயே உருகிக் கொண்டிருக்கின்றன
    உப்பின் காரநெடி காந்தும் அவளது நடனம்
    அலைகளின் பயணங்களாய் ஓயாது நிகழ்கின்றது
    மின்னல்கள் கூக்குரலிட்டு கூவிவெடிப்பதெல்லாம்
    கடற் கன்னியின் பெயரைத்தான்...
    .......

    ReplyDelete
  5. இன்னும் அனார் இஸ்லாமியர்களின் வேதநூலான குரான்னைக் கூட விட்டுவைக்கவில்லை. அதில் வரும் ஒரு வசனம் இது.

    "மேலும் அதிகாலையின் வெள்ளைக் கயிறு கருப்புக் கயிற்றை விட்டும் (இரவை விட்டும் அதிகாலைக் கிழக்கின் வெள்ளை) உங்களுக்குத் தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள், பிறகு இரவு வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்"
    - அல்பகர(ஹ்)-187 வது வசனம்.

    இதனை எடுத்து அனார் 'மண்புழுவின் இரவு' கவிதையில் இப்படி எழுதுகிறார்.

    "நீளமான நூலாய்த் தெரிகின்றது இரவு
    .......

    தொடர்ந்து நீளமான வெள்ளை நூல் தெரியும் வரை"

    ReplyDelete
  6. "அதிகாலை"
    அதிகாலையில் தான்
    நீர்ப்பிராணிகள் நிலமேகுகின்றன
    -குட்டி ரேவதி

    "பாலை"
    கரையோரங்களிலிருந்து
    திரும்பிவிட்டன நீர்ப்பறவைகள்
    - அனார்

    "இதயத்தைக் கனிகளாக்குபவனுக்கு.."
    கோடையென்பது ஒரு புல்லைப் போலச்
    சுருண்டு எழுகிறது..
    ........
    பருவத்தின் தோற்பில்,
    குவளையின் விளிம்பில் அமர்ந்தெழும் உன் இதழ்கள்
    சில வார்த்தைகளைச் சொல்லாது பருகுவதை
    எதிர் நிற்கும் விறைப்பான ஒளி
    புரிந்து கொள்ளும்
    -குட்டி ரேவதி

    "பாலை"
    வேர்விட்டு உறுதியாகி
    பூரித்துக் கிடந்த சோலையின் வனப்பை
    உறுஞ்சத் தொடங்கியிருக்கின்றன
    கோடையின் துன்புறுத்தும் நாவுகள்
    -அனார்

    "இரவு என்பது ஒரு தேவதையின் பணி"
    .......
    அவரது உடல் வெளிச்சத்தைச்
    சிந்திக் கொண்டேயிருந்தது

    அவரது உடல்
    எனது கண்ணாடியாகவும்
    எனது உடல்
    அவரது கண்ணாடியாகவும்
    -குட்டி ரேவதி

    "இரண்டு பெண்கள்"
    முழு அர்த்தத்தில்
    நம்மைப் பகிர்ந்தபடி உரையாடிக் கொண்டிருந்தோம்
    கண்ணாடி வானம்
    நானுமாகி நீயுமாகியிருந்தோம்
    -அனார்

    ReplyDelete
  7. அனார், கவிஞர் குட்டிரேவதியை மட்டுமல்லாமல், கவிஞர் சுகிர்தராணியையும் பிரதியெடுத்திருக்கிறார் என்பது இலங்கையிலிருந்து வெளிவரும் 'பெருவெளி' இதழ் 05 ( மே-2008, பக்கம் 23) இல் வெளிவந்த 'சாரா'வின் கட்டுரையிலிருந்து புலப்படுகிறது. "சாரா" இவ்வாறு எழுதுகிறார்.

    "சில வேளை அனாரையும் சுகிர்தராணியையும் சேர்த்து வாசிக்கும் போது கிளர்க்கின்ற உணர்வு ஒற்றையானதாகத் தெரிகின்றது. 'உன் குரலுக்கு இன்று நீ புரவிகளைகளைப் பூட்டவில்லையா??' (குரல் என்ற நதி அல்லது திராட்சை ரசம்" - கவிதை) என்று அனார் கேட்பதற்குப் பின்னால் அக்குரல் 'சமன் செய்யப் படாத களத்தில் புரவிகளோடு வந்திறங்குகிறாய்' என ஒலிக்கிறது.பாணனின் இசையில் அனார் மயங்க, வெட்கிப் பூக்கள் அணிந்தபடி வருகிறார் சுகிர்தராணி. 'தளர்வான இரவாடையை அணிந்தேன்' என்பது அனார் என்றால் 'விரகத்தின் இழைகளால் நெய்யப் பட்ட இரவாடையை நான் அணிந்திருக்கிறேன்' என சுகிர்தராணி சொல்வது போலிருக்கிறது. இருவரும் சேர்ந்து ஒரு கவிதையை எழுதிவிட முனைவது போன்ற பாவனை நம்மை மயக்கத்தில் ஆழ்த்துகின்றது."

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ஒன்றறைமாதங்களின் பின்னர்தான் மேலதிக கருத்திடுவது என்ற நிலைப்பாட்டில் இருந்து விடுபடாத நான் அனார் மேட்டர் தொடர்பில் இப்போதுதான் ஒரு குறிப்பு இடுகின்றேன்.
      அது வேறொன்றுமில்லை
      அனஸ் மஜீத் உங்களுக்குப் பாராட்டுக்கள்.
      உங்கள் குறிப்புக்கள் அனைத்தையும் படித்த பின்னர் நான் ஒரு கவிதை எழுதினேன்
      இன்னும் கொஞ்சம் எடிட் பண்ணிவிட்டு பதிவேற்றுகிறேன்.
      கவிதைக்கான கரு நீங்கள் தந்ததுதான்
      உங்களுக்கு நன்றிகள்.

      musdeen

      Delete