முஸ்டீன்

முஸ்டீன்
பிறப்பு 1983 ஏப்ரல் 22ம் திகதி வெள்ளிக்கிழமை - காவத்தமுனை. மட்டக்களப்பு.
1985 ஏப்ரல் 29ம் திகதி இவரின் தந்தை விடுதலைப் போராளிக் குழுவொன்றினால் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார்.

காவத்தமுனை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையிலும் (இப்போதைய அல்அமீன் வித்தியாலயம்) கம்பஹா-யட்டிஹேன முஸ்லிம் வித்தியாலயத்திலும் ஆரம்பக்கல்விஇ பின்னர்; மள்வானை அல் முபாரக் மத்திய கல்லூரி. பின்னர் யத்தாமா சர்வதேசப் பாடசாலை. இங்குதான் க.பொ.த (சா.த) வரைக் கற்றார்.

1992இல் இருந்து 2004 வரை மாக்கொல முஸ்லிம் அநாதை நிலையத்தின் அனுசரனையுடனேயே கற்றல் நடவடிக்கைகளைத் தொடர்ந்தார்.
2000ஆம் ஆண்டு பேருவலை ஜாமிய்யா நளீமிய்யாவில் சேர்ந்தார்
2002ல் தனது தந்தையின் ஞாபகார்த்தமாக SIM-Production எனும் நிறுவனத்தைத் ஏப்ரல் 22ம் திகதி தோற்றுவித்தார்.
2004ல் அக்கினிச் சுவாசம் எனும் பாடல் வீடியோ அல்பத்தை தயாரித்து வெளியிட்டார்.அத்துடன் அதில் ஆறு பாடல்களையும் எழுதியிருந்தார்.

இக்காலப் பகுதியில் ஆயுத இயக்கங்களுக்கெதிரான புரட்சிகரமான செயற்பாட்டாளராக இணங்காணப்பட்ட இவர்இ ஜாமிய்யா நளீமிய்யா நிருவாகத்துடன் முரண்பட்டதனால் இவரின் கற்றலுக்கு நிருவாகம் தடை விதிக்க, போர்க்கொடி தூக்கினார். சட்டரீதியான உச்ச நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாரான வேளை ஜாமிய்யா நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்ஹ் ஏ.சி. அகார் முஹம்மத் தலைமையிலான குழுவினரின் சமரசமான பேச்சுவார்தைக்குப் பின்னர் நளீமிய்யாவுக்கெதிரான சட்டநடவடிக்கைகளைக் கைவிட்டார், 2004களில் அங்கிருந்து வெளியேறினார். தனது வாழ்வில் பெரும்பேறு நளீமிய்யாவை இடைநடுவே விட்டதுதான் என்று சொல்லும் இவர் 2004ல் புகலிடம் எனும் குறும்படத்தைத் தயாரித்து வெளியிட்டதோடு அதில் ஒரு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
2004 இறுதிகளில் ஏற்பட்ட அசாதரண சூழ்நிலை காரணமாக குவைத்துக்குப் புலம் பெயர்ந்தார்.

குவைத்தில் ஐ.பி.ஸி அமைப்பின் பிரைடே போரத்தில் கனணிக் கற்கையை நிறைவு செய்தார்இ அங்கேயே இக்ரஃ இஸ்லாமியச் சங்கத்தின் அனுசரணையில் 'அஷ்பால்' எனும் சிறுவர் கார்ட்டூன் சித்திரத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளிட்டார். அத்துடன் 'அமுதம்' எனும் வீசீடி சஞ்சிகையையும் தாயாரித்து வெளியிட்டார்இ பின்னர் நாடு திரும்பி 2005 இறுதியில் 'ஒரு மாதிரி' எனும் குறும்படத்தைத் தயாரித்தார்இ பின்னர் அஷ்ஷெய்ஹ் ஏபியெம்.இத்ரீஸ் தயாரித்த 'புரிதல்' எனும் குறும்படத்தையும் 2006 களில் செய்ஹ் இஸ்மாயீல் ஞாபகார்த்த தயாரிப்பகம் ஊடாக வெளியிடட்டார். அதே ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிக் கலைமானிப் பட்டப்படிப்பையும் பூர்த்திசெய்தார். உளவியலில் முதுகலைப் பட்டப் படிப்பின் இறுதிவருடப் பரீட்சை இன்னும் எழுதவில்லை.

2006ல் வடக்கு-கிழக்கு மாகாண சபைக்காக எச்.ஐ.விஃஎய்ட்ஸ் விழிப்புணர்வுப் படங்களான 'உதிரும் மொட்டுகள்'இ 'தடம் மாறியது' ஆகிய இரண்டு குறும்படங்களை மட்டக்களப்பு கலாபம் கலை மன்றம்இ வாழைச்சேனை இந்துக்கல்லூரி மற்றும் வாழைச்சேனை சமாதானப் பேரவை ஆகியவற்றின் ஒத்துழைப்போடு தயாரித்தளித்தார்.

இலங்கை முஸ்லிம்களுக்கிழைக்கப்பட்ட இன ரீதியான வன்ம அழிப்புக்களைப் பல்வேறு ஆவணப்படங்களாக இயக்கியதுடன் தயாரித்தளித்தார்இ 2006 ஆகஸ்ட் மூதூர் மக்கள் வெளியேற்றப்பட்டதை மையப்படுத்திய ஆவணப் படத்தை இயக்கியதுடன் அஷ்ஷெய்ஹ் துவான் ஆரிபீன் மற்றும் அஷ்ஷெய்ஹ் ஸஜீத் ஆகியோருடன் இணைந்து தயாரித்தார்இ

2007களில் ரி.எம்.வி.பி இயக்கத்துக்காக 'உறங்காத உண்மைகள்' எனும் ஆவணப்படத்தை கலீல் மீராலெப்பையுடன் இணைந்து இயக்கினார், பலஸ்தீன விடுதலைப் போர் தொடர்பான விவரணப்படத்தினை தமிழ் மற்றும் சிங்கள மொழியிலும் தயாரித்தளித்தார், அத்துடன் 'ஹைகல் சொலமன்' மற்றும் 'மஸ்ஜிதுல் அக்ஷா' பற்றிய தனது உரையைக் காட்சிப்படுத்தி வெளியிட்டார், மேலும் காஷ்மீர், செச்சனியா பிரச்சினைகள் பற்றிய விவரணப்படங்களையும் தமிழில் மொழிபெயர்த்துத் தயாரித்தளித்தார்.

செய்ஹ் இஸ்மாயீல் ஞாபகார்த்த பதிப்பகம் ஊடாக ஏ.எம்.ஸமீமின் அலங்கார வேலைக்கு அற்புத வடிவங்கள் எனும் நூலைப் பதிப்பித்தார்.

முஸ்லிம் சமுதாயத்தின் நலன்களைக் கருத்திற் கொண்டு 2008களில் ரி.எம்.வி.பி யின் தலைவர் சிவநேசதுரை சந்திர காந்தன் அவர்களுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையினை வடிவமைப்பதில் எக்ஸில் ஆசிரியர் எம்.ஆர்.ஸ்ராலினுடன் இணைந்து அதிக சிரத்தை எடுத்துக் கொண்டதுடன், முஸ்லிம்கள் சார்பாக அதில் கையொப்பமுமிட்டார், இதே காலப்பிரிவில் தீ நிழல் திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகளைத் தொடங்கி 2009களில் நிறைவு செய்து அதை வெளியிட்டார், அதில் இரண்டு பாடல்களையும் எழுதினார். அத்துடன் தீ நிழல் திரைப்படத்துக்கான விஷேட இதழையும் பதிப்பித்தார்,

ஜப்பான் பில்ம்கிறேவ் இன்டர்நேஷனல்-டிஜிப்ளேன் ஆகியவற்றின் புலமைப் பரிசிலுடன் 2009களில் சினமா தொடர்பான முழுமையான பயிற்சியினை அசூசி ஒஷினோவின் பாசறையில் நிறைவு செய்த இவர், அக்காலப் பகுதியில் நான்கு குறும்படங்களையும் இயக்கினார். அத்துடன் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் கலாச்சாரப் பிரிவின் வேண்டுகோளுக்கமைய Iranian cinema toward perfection   எனும் தொனிப் பொருளில் ஈரானியத் திரைப்படங்கள் சம்பந்தமான ஒரு காட்சித் தொகுப்பையும் செய்தார் மேலும் 'ரூஹூல்லாஹ்' எனும் இமாம் கொமெய்னியின் வாழ்க்கைச் சரிதத்தினைத் தமிழில் மொழி பெயர்த்து ஒரு மணித்தியால விவரணச் சித்திரமாகத் தயாரித்து வெளியிட்டார்.

2010ல் சென்னை தேவநேயப் பாவனர் அரங்கில் 'கீற்று' இணையதளத்தின் ஆறாவது வருடப் பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பான ஒரு உரையையும் ஆற்றினார்இ அத்துடன் அவரது மிக நீண்ட நேர்காணலையும் 'கீற்று' பதிவு செய்ததுஇ தமிழ்- முஸ்லிம் மக்களின் இணக்கப்பாடான சூழல் உருவாக்கத்திற்குப் புதிய வழிகளைத் திறந்துவிடும் அழைப்பாக அந்நேர்காணல் அமைந்திருந்தது.
எப்.பீ.ஏ ஸ்ரீலங்கா ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற குறும்படப் பயிற்சிப்பட்டறையில் பிரதான பயிற்றுவிப்பாளராகவும்இ விரிவுரையாளராகவும் உளவளத் துணையாளராகவும் செயற்பட்டார்.

அத்தோடு வடக்கு முஸ்லிம்கள் பற்றிய 1990 மனிதப் பேரவலம் எனும் ஆய்வு சஞ்சிகையை 2010 ஒக்டோபரில் பதிப்பித்தார்இ அத்துடன் வடக்கு முஸ்லிம்கள் பற்றிய ஒரு விவரணக் காட்சிப்படுத்தலையும் செய்தார்இ வெளியேற்றத்தின் 20வத வருட நினைவையொட்டி வடக்கு முஸ்லிம் களுக்கான ஞாபகார்த்தப் பாடல் ஒன்றையும் எழுதினார். வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம் தொடர்பில் முழுமையான ஆய்வொன்றினையும் மேற்கொண்ட இவர் அதன் சுருக்கத்தை ஏற்கனவே பதிப்பித்துள்ளார், அதன் முழுமையான ஆய்வு வடிவ நூலாக்கப் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன, அத்துடன் வெளியேற்றம் தொடர்பில் இந்திய எழுத்தாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் புத்திஜீவிகள் என 20பேரின் கருத்துக்களை2011 ஏப்ரலில் பதிவு செய்தார்

2011 ஏப்ரல் 29ல் திருமணம் செய்தார்இ தமிழ் தேசியவாதிகளுடன் சீரான உறவை வைத்திருந்த இவர் ஜூலை மாதம் இந்திய காயல்பட்டணத்தில் நடந்த சர்வதேச இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் பேராளராக் கலந்து கொண்டுவிட்டு நாடு திரும்பிய போது தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்திற்காகக் களப்பணி செய்தார் என்ற அடிப்படையில் தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

2012 மார்ச் மாதம் சிறையிலிருந்து விடுதலையான இவர் மே மாதம் 17ம் திகதி மௌனப் போரும் புன்னகை ஆயுதமும் எனும் தனது முதலாவது கவிதை நூலை வெளியிட்டார்,இலங்கையின் சிவில் யுத்தம் நிறைவுபெற்று மூன்று வருட நிறைவையொட்டி வெளியிடப்பட்ட அத்தொகுதியில் உள்ள சில கவிதைகளுக்குக் காட்சி வடிவமும் கொடுத்தார். ஜூன் 17ல் ஷாமிலா ஷெரீபின் நிலவின் கீறல்கள் எனும் கவிதை நூலைப் பதிப்பித்ததுடன் அதன் ஒலிப் புத்தகத்தையும் (யுரனழை டீழழம) தயாரித்தளித்தார்இ 2012 ஜூலையில் சருகுகள் எனும் குறும் படத்தை இயக்கினார் அத்துடன் ஆகஸ்டில் நேத்ரா தொலைக்காட்சியின் ஈத் பெருநாள் நிகழ்வுக்காக ஒரு பாடலையும் எழுதினார், 'ஹராங்குட்டி'  என்பது இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி.

2013ல் சிறந்த ஆவணப்படத் தயாரிப்பாளர்கள் பத்துப் பேரில் ஒருவராக அரச திரைப்படப் பிரிவினால் (GFU) தெரிவு செய்யப்பட்டார்.

பின்னர் பிணந்தின்னிகள் எனும் சிறுகதைத் தொகுதியையும் வேப்பம்பழச் சுவையும் புழுதி வாசனையும் எனும் கவிதைத் தொகுதியையும் இரத்தக்குளியல் எனும் குறு நாவலையும் வெளியிட்டார். 

ஷெய்ஹ் இஸ்மாயீல் ஞாபகார்த்த தயாரிப்பகம் மற்றும் பதிப்பகம் (SIM-Production& SIM-Publica tion) ஊடாகப் பல்வேறு வெளியீடுகளையும் பதிப்புகளையும் செய்துவரும் இவர் எதையும் உருப்பபடியாகச் செய்ய வேண்டுமென்பார்.

No comments:

Post a Comment