Saturday, August 31, 2013

கீழக்கரை ஜூனைன் என்ற ஓட்டமாவடி அறபாத்.

இப்போது பேஷ்புக் களவானிகள் அதிகரித்து விட்டார்கள். எங்கோ தொலைவில், யாரும் காணாத இடத்தில் இருந்து, தனக்குப் பிடிக்காதவர்களுக்கு வசையால் வாழ்த்துப்பாட இந்தக்களவானிகள் போலி ஐடிக்களை உருவாக்கி அதில் குய்யோ முய்யோ என்று குதியாட்டம் போடுவார்கள். அவர்களை யாரும் கண்டுபிடித்துவிட முடியாது என்ற ஒரே தைரியம்தான் அவர்களின் பலம். கல்குடாத் தொகுதியின் மாவடிச்சேனையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் அறபாத் மௌலவி. ஓட்மாவடி அறபாத் என்ற பெயரில் கவிதைகள் கட்டுரைகள் கதைகள் என்று எழுதி அதன் மூலம் பிரசித்தம் பெற்றவர். அவருடைய எழுத்துக்களுக்கு மதிப்பளிக்கும்வகையில் சில விருதுகளும் கிடைக்கப்பெற்றமை மிக முக்கியமானது. அன்மையில் மோசடி செய்து ஒரு தொகுதிக்கு சாகித்திய விருதும் பெற்றுக்  கொண்டார்;. (அவருடைய நற்பெயருக்கு பங்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காக அந்தத்தகவலை இங்கு விரிவாக எழுதவில்லை. ஆனால் இதை அறபாத் எங்காவது உத்தியோகபூர்வமாக மறுத்தால் ஆதாரத்துடன் விளக்கமளிக்க முடியும்.) இப்பேர்ப்பட்ட பிரபல்யமிக்க எழுத்தாளர் தனக்கு வேண்டாதவர்களைப் போட்டுத்தாக்கவும் சிலரைக் காக்காய்பிடிக்கவும் என தனக்கென்று ஒரு போலி பேஷ்புக் பக்கத்தைத் தொடங்கினார்.  அதன் பெயர் கீழைக்கரை ஜூனைன். அதன் முகப்புப் பக்கம்தான் இது
14 ஏப்ரல் 2011  ல் தான் இது தொடங்கப்பட்டது. இப்படித் தொடங்கப்பட்ட  இப்பக்கத்தில் இருந்து மூன்று நாட்களுக்குப் பின்னர் தனது உண்மையான  பக்கமான அறபாத் ஸஹ்வி என்ற தனது பக்கத்திற்கு தானே ஒரு ப்ரண்ட் ரிக்வெஸ்ட்விடுத்து  2011 ஏப்ரல் 17ம் திகதியில் இருந்து தனது போலிப்பக்கத்திற்கு தானே முதல் நண்பரானார். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை கீழே பார்க்கலாம். அறபாத் எங்களோடு நண்பர் பட்டியலில் இல்லாத காரணத்தினால் எமக்கு அவரை  அட் பிரண்ட் என்றே காட்டுகிறது
இப்படியே தொடங்கிய பக்கத்தை என்ன செய்வதென்று தெரியாது யோசித்துக் கொண்டிருந்தவருக்கு சில ஐடியாக்கள் தோன்றின போலும். அடுத்து கல்குடாத்தொகுதியில் உலகப்புகழ்பெற்ற மாபெரும் எழுத்தாளர் திலகமான எஸ்.எல்.எம்.ஹனிபா என்பரை தனது நண்பராக இணைத்துக் கொள்கிறார். ஹனிபாவும் மறுப்பேதும் இல்லாது போலிப் பக்கத்தில் மகிழ்வுடன் இனைந்து கொள்கிறார். அதன் பின்னர் இந்த கீழக்கரை ஜூனைன் என்ற ஓட்டமாவடி அறபாத் மௌலவி தன்னை யாருமே அடையாளம் கண்டுகொள்ளமாட்டார்கள் என்ற உறுதியான நம்பிக்கையில் கிளுகிளுப்பான சில பக்கங்களை லைக் பன்னி நட்பைப் பேணவிளைகிறார் அதை ஹனிபாவும் அங்கீகரிக்கின்றார்  அதை நீங்களும் பர்க்கவேண்டாமா???
ஒரு பக்கம் மௌலவி  வேசம் மறுபக்கம் காமக் களியாட்டம். இப்படியாக காலத்தைத் தள்ளிக் கொண்டு வந்த இந்த கீழக்கரை ஜூனைன் என்ற ஓட்டமாவடி அறபாத் மௌலவி தனது போலிப்பக்கத்தை சும்மா வைத்திருப்பதில் அர்த்தம் இல்லையே என்பதால் எனது மனைவியின் முகநூல் பக்கத்திற்கு 2012 நவம்பர் 23ம் திகதி ஒரு ப்ரெண்ட் ரிக்வெஸ்ட்விடுக்கிறார். அதுபற்றிய படங்களும் அதன்பின்னர் இடம்பெற்ற உரையாடல்களும் கீழே
படம் 01

படம் 02
 படம் 03


இத்தோடு அவரின் தகவல்களைக் கிளிக்கியபோது போலியான தகவல்களே அறிமுகத்திற்காகக் கொடுக்கப்பட்டிருந்தன. 
அத்துடன் கோபம் பொத்துக் கொண்டு வந்தது அவருக்கு. 2011ம் ஆண்டு தொடங்கிய பக்கத்தில் 2013 மார்ச்29ம் திகதி  அவரது முதலாவது பதிவு கீழே உள்ளபடி அமைந்தது.  அதுவும் எனது ஹராங்குட்டி என்ற சிறுகதைத் தொகுதி வெளிவரவிருந்த ஓரிரு நாட்களில். அதில் ஹராங்குட்டி என்ற சிறுகதை சிறுவர்களுடன் தன்னினச் சேர்க்கையில் ஈடுபடும் மௌலவிகளைப் பற்றியது. அறபாத்தும்  ஒரு மௌலவி என்பதால் அந்தக்கதை அவரில் என்ன பாதிப்பை உண்டுபண்ணியதோ தெரியாது. அல்லது நான் எழுதுவது பிடிக்கவில்லையோ தெரியாது. (எனது எழுத்துக்களில் அதிக கோபம் கொண்டவர்கள் அறபாத்தும் ஹனிபாவும்தான் அன்மைக்காலமாக எனது அவதானத்திற் தென்பட்டது)
முகநூல் பக்கம் தொடங்கி எதுவுமே எழுதாது காலத்தைக் கடத்திய இந்தப்புன்னியவானுக்கு நான் அவரது முகநூல் நட்புக்கான வேண்டுகொளை நிராகரித்த ஒரே காரணத்திற்காக கண்ணாபின்னவென்று மிக மோசமான வார்த்தைகளைக்கொண்டு திட்டித்தீர்த்துள்ளார். அதற்காக நான் அதையெல்லாம் அலட்டிக்கொள்ளவில்லை. இதுவரையும் இவர் பதிவிட்ட அனைத்தையும் நான்  கிளிக் செய்துவைத்துள்ளேன் திட்டல்களையும் குமுறல்களையும் அதில் பார்க்கலாம்.மாதிரிக்காக சில

பலரையும் தன் இஷ்டத்திற்கு பிரித்துமேய்ந்து ஏப்பம்விட்ட மௌலவி ஜீ அத்தோடு நின்றிடாது இன்னும் சிலரையும் முதுகு சொரியும் வண்ணம் எழுதினார் மற்றவர்கள் எழுதியதை தனது பக்கத்தில் செயார் பண்ணினார். பெரும்பாலும் ஜூனைன் என்ற பேர்வழியின் தில்லுமுள்ளுகளை அறியவில்லையென்று நினைக்கிறேன்.  மேமன்கவி, ஜவாத்மரிக்கார் சோளைக்கிளி, பேராசிரியர் நுஃமான் எனப் பலரைப்பற்றியும் பதிவுகள்   அதன்பின்னர் நட்புப்பட்டியலை ஓரளவு விஸ்தரித்துக்கொண்ட இந்த கீழக்கரை ஜூனைன் என்ற ஓட்டமாவடி அறபாத் மௌலவியின் நட்புப் பட்டியல் தொடர்பில் அன்மையில் கிளிக்கிய படம் இது


  


இந்த கீழக்கரை ஜூனைன் என்ற பக்கத்தை முன்னிறுத்தி இன்னும் கொஞ்சம் தேடியபோது மேலும் சில ஆதாரங்கள் சிக்கின.
2011ம் ஆண்டு கல்குடாப் பகுதியில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கால் உருவான ஆற்றங்கரையோர நிலப்பகுதி எமது பிர தேசத்தின் ஓவியர்களுள் ஒருவரும் மற்றும் புகைப்படக்கலைஞருமான ரியோ ஸ்ரூடியோ உரிமையாளருமான மஃரூப் உரிமை கொண்டாடியபோது பெருங்குழப்பங்கள் ஏற்பட்டன. சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது ஒரு இணையதளம் இப்படியொருபடத்தினையும் ஆக்கத்தினையும் பிரசுரித்திருந்தது. 

அதற்காக மஃரூப் என்ற தனிநபர் குறித்து ஜூனைன் என்றபெயரில் பாலியல் சேட்டையும் ஆற்றங்கரை அபகரிப்பாளரும் என்று இடப்பட்ட பின்னூட்டம் மிகக் கேவலமாக மஃரூப் அவர்களை பல்வேறு பெண்களுடன் தொடர்புபடுத்தி எழுதப்பட்டிருந்தது நாகரீகம் கருதியும் நம்கத்தன்மை கருதியும் அவைகள் இங்கு இணைக்கப்படவில்லை ஆயினும் அவர் இட்டஒரு பின்னூட்டம் மட்டும் கீழே 

அதன் பின்னர்  என்னுடன் மீண்டும் ஒரு பிரச்சிணையை ஏற்படுத்திக் கொள்ளும்பொருட்டு பின்வருமாறு தனது தளத்திலேயே ஒரு பின்னூட்டம்விட்டார் ஆசாமி. நானும் ஒரு பொழுது போக்கிற்காக கொஞ்சம் ஓவராகச் சீண்டிப் பார்த்தேன் அதன் விளைவாக வெளிவந்த அவரது ஆத்திரத்தின் சூடுதான் இது.

தன்னைப்பற்றியும் தனது செயற்பாடு பற்றியும் ஒரே போடாகப் போட்டார் மௌலவி. (ஒரு பேஷ்புக் தளத்தை நானும் மனைவியும் இணைந்து செய்வதே பெரியபாடாக இருக்கும்போது இவர் கருத்து செம காமடியாக இருந்தது. )அதன்பின்னர் கொஞ்சம் ஹொட்டாக இன் பொக்ஸில் ஒரு மெசேஜ் கொடுத்தேன் அதன்பின்னர் அந்தப்பக்கம் இப்படிக் காட்சியளித்தது.
இந்த ஆக்கத்தைப் படித்த பின்னர் மீண்டும் இந்தப் பக்கம் இயங்கத் தொடங்கும் அப்போது உரத்து ஒலிக்கப் போகும் ஒரே குரல் நான் அறபாத் இல்லை நான் அறபாத் இல்லை என்பதுதான். ஆப்போது யாராவது ஒருவன் சொல்லுவான்  'நாங்க நம்பிட்டம்' ok