விமர்சனம்

மதி சுதாவின்  மிச்சக் காசு

மதி சுதாவின் ரொக்கட் ராஜா குறும்படத்தைப் பார்த்த அவர் மீது எரிச்சல்தான் வந்தது. அதில் ஒன்றுமே இல்லை, எடிட்டிங் லைட்டிங், ஸவ்ன்ட், கெமரா கோணங்கள் எல்லாமும் மைனஸ்தான். அதைவிட அந்தப் படத்தோடு தனது பெயருக்கு முன்னால் இயக்குநர் என்று வேறு போட்டுக் கொண்ட போது ஐயோ hபவம் என்று தொன்றியது.

இப்போது மிச்சக் காசு என்று ஒரு குறும்படம் எடுத்திருக்கிறார். இப்போதுதான் பார்த்தேன். நல்ல முயற்சி. முன்னைய குறும்படங்களில் இருந்து தரம் உயர்ந்திருக்கிறது. 54 செக்கனில் இருந்து அடுத்த ஷொட் இல் ஒரு வீடியோ ஜம்ப் இருக்கிறது அவதானிக்கவில்லைபோலும். எடிட்டர் கவனிச்சு இருக்க வேணும். செருப்பை மாட்டிக் கொண்டு வெளியே செல்லும் சிறுவன் காலில் அடுத்த ஷொட் இல் செருப்பு இல்லை பின் அடுத்த லோங் ஷொட் இல் காலில் செருப்பு இருக்கு. அடுத்து சிறப்புச் சப்தம் கவனத்தில் எடுக்கப்படவே இல்லை. அது பறவாயில்லை ஆயினும் சிலவை தவிர்க்க முடியாது அடுத்த படைப்பில் இன்னும் மிளிர வாழ்த்துக்கள்.

அடுத்தது கெமரா டான்ஸ் போடுவதை இயன்றளவு தவிர்த்திருக்கலாம். கையில் வைத்து மெபைலில் ஷூட் பண்ணும் போது அந்த ஆட்டம் இயல்பானது ஆயினும் அது காட்சியின்(ஸ்டடி ஷொட் இன்) அழகைக் கெடுத்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இப்போது மதி சுதா குறும்பட இயக்குநர் என்று தாராளமாகப் போட்டுக் கொள்ளலாம்.

2 comments:

  1. தங்களின் மனம் திறந்த வெளிப்படையான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோ அடுத்த படைப்பில் நிவர்த்தி செய்ய முயற்சிக்கிறோம்.
    இதற்கு முன்னரும் என்னுடைய ஒரு படைப்பு வெளியாகியிருந்தது. அதற்கும் தங்களின் வெளிப்படையான கருத்துக்களை எதிர் பார்க்கிறேன்.
    http://www.youtube.com/watch?v=ocIKF_H1q_E

    ReplyDelete
  2. அவகாசம் கிடைக்கம் போது நிச்சயம் பார்க்கிறேன். கருத்துக்களைப் பதிவு செய்யவும் முயல்கின்றேன்.

    ReplyDelete