Sunday, July 28, 2013

03. ஹராங்குட்டி சிறுகதைத் தொகுப்பு: மூன்று பார்வைகள் - பார்வை 03 (முஹ்சின் முஹம்மது)

முஸ்டீன் எழுதிய ஹராங்குட்டி சிறுகதைத்தொகுதி – விமர்சனப்பார்வை

மிகுந்த சர்ச்சைகளை உருவாக்கிக் கொண்டுவரும் ஒரு புத்தகமாக இந்த ஹராங்குட்டி தொகுதி இடம்பெற்றுவிட்டது அதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று முஸ்டீன் எழுதியிருப்பது இரண்டு இந்தத் தொகுதியின் தலைப்புஇ மிக மோசமாகக் கருதப்படும் ஹராங்குட்டி என்ற சொல்லாடலை கோபத்தின் உச்ச வெளிப்பாடகத்தான் யாரேனும் பயன்படுத்துவர் அதுவே ஒரு புத்தகத்தின் தலைபபாக மாறியது சர்ச்சைகளைத் தோற்றுவிப்பது ஒன்றும் புதிதல்ல. இந்தத் தொகுதியின் வெளியீடுபற்றியும் வெளியிட்டபின்னர் அந்நிகழ்வு பற்றியும் பல இனையதளங்களும் பத்திரிகைகளும் கனிசமான முக்கியத்துவத்தினை அளித்திருப்பதுதான் சந்தேகத்துடன் இத்தொகுதி குறித்து ஆய்வு செய்யும் அவசியத்தைத் தோற்றுவித்தது. அரசாங்கத்தின் உத்தியோக பூர்வச் செய்தித்தளமான நெறள.டம கூட இந்நூலின் வெளியீடு குறித்து அறிவிப்புச் செய்திருந்தமையும் இந்நூலாசியருக்கு உயர்மட்டத்தில் இருக்கும் செல்வாக்கைப் பிரதிபலித்தது. அது கூட கொஞ்சம் கூர்ந்து கவனிக்க செய்ததில் ஆச்சரியமில்லைதான் ஏனெனில் அரச செய்திச்சேவை இதுவரைக்கும் எந்த நூல் வெளியீட்டிற்கும் முக்கியத்துவமளித்ததில்லை. ளழயெமயச.உழஅ இல் சில சகோதரர்கள் வெளிப்படையாக சந்தேகத்தை வெளிப்படுத்தியதன் விளைவாகவும் அம்பாறை மாவட்டத்தில் நடக்கவிருக்கும் இந்நூலின் அறிமுக விழாவினை ஜம்இய்யதுல் உலமா தடை செய்வாற்கான செயற்பாடுகள் பற்றிய செய்திகளும் தான் இந்நூலைத் தேடிப் பெற்று வாசித்துக் விமர்சிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த அடிப்படையில் முஸ்டீன் என்பவரைப் பற்றியும் அவரது ஹராங்குட்டி பற்றியும் பார்ப்பது அவசியமானது. இத்தொகுதியில் ஸாமிலா ஷரீப் என்பவர் முஸ்டீன் பற்றி நீண்ட பதிவைச் செய்திருக்கிறார் அதன் சுருக்கம்
இந்த முஸ்டீனுக்கு ஒன்றும் தெரியாது! அதற்காக ஒன்றையும் தெரிந்து கொள்ளாமல் விட முடியுமா? 
இந்த முஸ்டீனை எதிர்கொள்வது என்பது பலருக்கு மிகவும் கடினமான காரியங்களிலொன்று
1983 ஏப்ரல் 22ம் திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டஇ காவத்தமுனை எனும் கிராமத்தில் பிறந்தார்.
1985 ஏப்ரல் 29ம் திகதி இவரின் தந்;தை விடுதலைப் போராளிக் குழுவொன்றினால் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். 
காவத்தமுனை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையிலும் (இப்போதைய அல்அமீன் வித்தியாலயம்) கம்பஹா-யட்டிஹேன முஸ்லிம் வித்தியாலயத்திலும் ஆரம்பக்கல்விஇ பின்னர்; மள்வானை அல் முபாரக் மத்திய கல்லூரிஇ பின்னர் யத்தாமா சர்வதேசப் பாடசாலை. இங்குதான் க.பொ.த (சா.தரம்) வரைக் கற்றார். 
1992இல் இருந்து 2004 வரை மாகொல முஸ்லிம் அநாதை நிலையத்தின் அனுசரனையுடனேயே கற்றல் நடவடிக்கைகளைத் தொடர்ந்தார். 
2000ஆம் ஆண்டு பேருவலை ஜாமிய்யா நளீமிய்யா வில் சேர்ந்த இவர் 2002ல் க.பொ.த உயர் தரப் பரீட்சைக்குத் தயாரான காலப்பகுதியில் தனது தந்தையின் ஞாபகார்த்தமாக ளுஐஆ-Pசழனரஉவழைn எனும் நிறுவனத்தைத் ஏப்ரல் 22ம் திகதி தோற்றுவித்தார்.
2004ல் அக்கினிச் சுவாசம் எனும் பாடல் வீடியோ அல்பத்தை தயாரித்து வெளியிட்டார்.அத்துடன் அதில் ஆறு பாடல்களையும் எழுதியிருந்தார்இ இக்காலப் பகுதியில் ஆயுத இயக்கங்களுக்கெதிரான புரட்சிகரமான செயற்பாட்டாளராக இணங்காணப்பட்ட இவர் ஜாமிய்யா நளீமிய்யா நிருவாகத்துடன் முரண்பட்டதனால் இவரின் கற்றலுக்கு நிருவாகம் தடை விதிக்க போர்க்கொடி தூக்கினார்இ சட்டரீதியான உச்ச நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாரான வேளை ஜாமிய்யா நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்ஹ் ஏ.சி. அகார் முஹம்மத் தலைமையிலான குழுவினரின் சமரசமான பேச்சுவார்தைக்குப் பின்னர் நளீமிய்யாவுக்கெதிரான சட்டநடவடிக்கைகளைக் கைவிட்டதுடன்இ 2004களிலேயே அங்கிருந்து வெளியேறினார். 
2004ல் புகலிடம் எனும் குறும்படத்தைத் தயாரித்து வெளியிட்டதோடு அதில் ஒரு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்இ 
2004 இறுதிகளில் ஏற்பட்ட அசாதரண சூழ்நிலை காரணமாக குவைத்துக்குப் புலம் பெயர்ந்தார்.
குவைத்தில் ஐ.பி.ஸி அமைப்பின் பிரைடே போரத்தில் கணணிக் கற்கையை நிறைவு செய்தார்இ அங்கேயே இக்ரஃ இஸ்லாமியச் சங்கத்தின் அனுசரணையில் அஷ்பால் எனும் சிறுவர் கார்ட்டூன் சித்திரத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளிட்டார். அத்துடன் அமுதம் எனும் வீசீடி சஞ்சிகையையும் தாயாரித்து வெளியிட்டார்இ 
நாடு திரும்பி 2005 இறுதியில் ஒரு மாதிரி எனும் குறும்படத்தைத் தயாரித்தார்இ 
ஏபியெம்.இத்ரீஸ் தயாரித்த புரிதல் எனும் குறும்படத்தையும் 2006 களில் செய்ஹ் இஸ்மாயீல் ஞாபகார்த்த தயாரிப்பகம் ஊடாக வெளியிடட்டார். அதே ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிக் கலைமானிப் பட்டப்படிப்பையும் பூர்த்திசெய்தார். உளவியலில் முதுகலைப் பட்டப்படிப்பு இன்னும் நிறைவு செய்யப்படவில்லை.
பின்னர் வடக்கு-கிழக்கு மாகாண சபைக்காக எச்.ஐ.விஃஎய்ட்ஸ் விழிப்புணர்வுப் படங்களான உதிரும் மொட்டுகள்இ தடம் மாறியது ஆகிய இரண்டு குறும்படங்களை மட்டக்களப்பு கலாபம் கலை மன்றம்இ வாழைச்சேனை இந்துக்கல்லூரி மற்றும் வாழைச்சேனை சமாதானப் பேரவை ஆகியவற்றின் ஒத்துழைப்போடு தயாரித்தளித்தார்இ இலங்கை முஸ்லிம்களுக்கிழைக்கப்பட்ட இன ரீதியான வன்ம அழிப்புக்களைப் பல்வேறு ஆவணப்படங்களாக இயக்கியதுடன் தயாரித்தளித்தார்இ 2006 ஆகஸ்ட் மூதூர் மக்கள் வெளியேற்றப்பட்டதை மையப்படுத்திய ஆவணப் படத்தை இயக்கியதுடன் அஷ்ஷெய்ஹ் துவான் ஆரிபீன் மற்றும் அஷ்ஷெய்ஹ் முஹம்மட் ஸஜீத் ஆகியோருடன் இணைந்து தயாரித்தார்இ
2007களில் ரி.எம்.வி.பி இயக்கத்துக்காக உறங்காத உண்மைகள் எனும் ஆவணப்படத்தை இயக்கினார்இ பலஸ்தீன விடுதலைப் போர் தொடர்பான விவரணப்படத்தினை தமிழ் மற்றும் சிங்கள மொழியிலும் தயாரித்தளித்தார்இ அத்துடன் ஹைகல் சொலமன் மற்றும் மஸ்ஜிதுல் அக்ஷா பற்றிய தனது உரையைக் காட்சிப்படுத்தி வெளியிட்டார்இ மேலும் காஷ்மீர்இ செச்சனியா பிரச்சினைகள் பற்றிய விவரணப்படங்களையும் தமிழில் மொழிபெயர்த்துத் தயாரித்தளித்தார்இ செய்ஹ் இஸ்மாயீல் ஞாபகார்த்த பதிப்பகம் ஊடாக ஏ.எம்.ஸமீமின் அலங்கார வேலைக்கு அற்புத வடிவங்கள் எனும் நூலைப் பதிப்பித்தார்இ
முஸ்லிம் சமுதாயத்தின் நலன்களைக் கருத்திற்கொண்டு 2008களில் ரி.எம்.வி.பி யின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையினை வடிவமைப்பதில் எக்ஸில் ஆசிரியர் எம்.ஆர்.ஸ்ராலினுடன் இணைந்து அதிக சிரத்தை எடுத்துக் கொண்டதுடன்இ முஸ்லிம்கள் சார்பாக அதில் கையொப்பமுமிட்டார்இ இதே காலப்பிரிவில் தீ நிழல் திரைப்படத்தின் தயாரிப்புப்பணிகளைத் தொடங்கி 2009களில் நிறைவு செய்து அதை வெளியிட்டார்இ அதில் இரண்டு பாடல்களையும் எழுதினார்இ அத்துடன் தீ நிழல் திரைப்படத்துக்கான விஷேட இதழையும் பதிப்பித்தார்இ
ஜப்பான் பில்ம்கிறேவ் இன்டர்நேஷனல்-டிஜிப்ளேன் ஆகியவற்றின் புலமைப் பரிசிலுடன் 2009களில் சினமா தொடர்பான முழுமையான பயிற்சியினை நிறைவு செய்த இவர்இ அக்காலப் பகுதியில் நான்கு குறும்படங்களையும் இயக்கினார்இ அத்துடன் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் கலாச்சாரப் பிரிவின் வேண்டுகோளுக்கமைய ஐசயnயைn உiநெஅய வழறயசன pநசகநஉவழைn எனும் தொனிப் பொருளில் ஈரானியத் திரைப்படங்கள் சம்பந்தமான ஒரு காட்சித் தொகுப்பையும் செய்தார் மேலும் ரூஹூல்லாஹ் எனும் இமாம் கொமெய்னியின் வாழ்க்கைச் சரிதத்தினைத் தமிழில் மொழி பெயர்த்து ஒரு மணித்தியால விவரணச் சித்திரமாகத் தயாரித்து வெளியிட்டார்.
2010ல் சென்னை தேவநேயப் பாவனர் அரங்கில் கீற்று இணையதளத்தின் ஆறாவது வருடப் பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பான ஒரு உரையையும் ஆற்றினார்இ அத்துடன் அவரது மிக நீண்ட நேர்காணலையும் கீற்று பதிவு செய்ததுஇ தமிழ்- முஸ்லிம் மக்களின் இணக்கப்பாடான சூழல் உருவாக்கத்திற்குப் புதிய வழிகளைத் திறந்துவிடும் அழைப்பாக அந்நேர்காணல் அமைந்திருந்தது. அத்துடன் வடக்கு முஸ்லிம்கள் தொடர்பான 1990 மனிதப் பேரவலம் எனும் விஷேட இதழைப் பதிப்பித்ததுடன் வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம் தொடர்பான ஆய்வையும் செய்து முடித்தார். அத்துடன் இது தொடர்பான ஆவணப்படத்தையும் இயக்கினார். எப்.பீ.ஏ ஸ்ரீலங்கா ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற குறும்படப் பயிற்சிப்பட்டறையில் பிரதான பயிற்றுவிப்பாளராகவும்இ விரிவுரையாளராகவும் உளவளத்துணையாளராகவும் செயற்பட்டார்.
2011 ஏப்ரல் 29ல் திருமணம் செய்தார்இ தமிழ் தேசியவாதிகளுடன் சீரான உறவை வைத்திருந்த இவர் ஜூலை மாதம் இந்திய காயல்பட்டணத்தில் நடந்த சர்வதேச இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் பேராளராக் கலந்து கொண்டுவிட்டு நாடு திரும்பிய போது தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்திற்காகக் களப்பணி செய்தார் என்ற அடிப்படையில் தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுக் கொலைக் குற்றச்சாட்டுடன் சிறையிலடைக்கப்பட்டார்இ 2012 மார்ச் மாதம் சிறையிலிருந்து விடுதலையான இவர் மே மாதம் 17ம் திகதி மௌனப் போரும் புன்னகை ஆயுதமும் எனும் தனது முதலாவது கவிதை நூலை வெளியிட்டார்இ இலங்கையின் சிவில் யுத்தம் நிறைவுபெற்று மூன்று வருட நிறைவையொட்டி வெளியிடப்பட்ட அத்தொகுதியில் உள்ள சில கவிதைகளுக்குக் காட்சி வடிவமும் கொடுத்தார். ஜூன் 17ல் ஷாமிலா ஷெரீபின் நிலவின் கீறல்கள் எனும் கவிதை நூலைப் பதிப்பித்ததுடன் அதன் ஒலிப் புத்தகத்தையும் (யுரனழை டீழழம) தயாரித்தளித்தார்இ 2012 ஜூலையில் சருகுகள் எனும் குறும்படத்தை இயக்கினார் அத்துடன் ஆகஸ்டில் நேத்ரா தொலைக்காட்சியின் ஈத் பெருநாள் நிகழ்வுக்காக ஒரு பாடலையும் எழுதினார்இ ஹராங்குட்டி இது இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி.
இவ்வளவுதான் இவர்பற்றிய செய்திகள்
முஸ்டீன் சிறையில் இருந்தபோது எழுதிய கதைகள்தான் இப்போது நூலாக்கப்பட்டிருக்கின்றன
ஹராங்குட்டி - இத்தொகுதியில் மொத்தம் பன்னிரெண்டு கதைகள் நாடறிந்த எழுத்தாளர் அஸ்ரப் ஸிஹாப்தீன் உட்பட எழுத்தாளர் சுதாராஜ் பேராசிரியர் துரை மனோகரன் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் சட்டத்தரணி ஜீ ராஜகுலேந்திரா சட்டத்தரணி காண்டீபன் ஆகியோர் முஸ்ஏனுடைய எழுத்துக்கள் பற்றி எழுதியிருக்கிறார்கள் நாடறிந்த ஆளுமைகள் இந்தக் குறிப்புகளில் முஜ்டீனைப் பாராட்டி எழுதியிருந்த பின்னனியோடு கதைகளைப் படித்தேன்
முதலாவதுகதையும் இறுதிக் கதையும் பொலிஸ் தடுப்புக்காவல் பற்றியும் தடுப்பில் இருக்கும் விசாரனைக் கைதி பற்றியும் வதைகள் பற்றியும் பேசுகின்றன பெரும்பாலான தமிழ் இளைஞர்கள் அனுபவித்ததைதான் இக்கதைகளில் பதிவு செய்துள்ளார். குப்பைவாளி எனும் கதை பொலிசாருக்கு nருப்பால் அடிக்கிறது மனசாட்சிகொன்று கதை இலங்கையின் புலனாய்வுத் துறைக்கு செருப்பால் அடிக்கிறது. 
ஏனைய பத்துக் கதைகளும் கொல்லப்பட்ட மனிதர்கள் பற்றிப் பேசுகின்றன. அவை பற்றி விரிவாகப் பார்க்க வேண்டும்
காட்டிக் கொடுத்தவன் : இந்திய ராணுவம் இலங்கைக்கு வந்த போது அவர்களாலும் விடுதலைப்புலிகளாலும் முஸ்லிம் சமுகம் பெற்ற துன்பங்களுக்கு இது மிகச் சிறந்த கதை. புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட கொமெய்னி முஸ்தபா என்ற வாழைச்சேனையைச் சேர்ந்த ஒருவரின் மக்களுக்கான போராட்டத்தை தத்ரூபமாகப் பதிவு செய்கிறது கதை. பாலைநகர் தியாட்டவான் காவத்தமுனை ஓட்டமாவடி வாழைச்சேனை மக்கள் பட்ட துன்பங்களையெல்லாம் இது பேசுகிறது. இது வரை வந்த பதிவுகளில் அதிசிறந்த பதிவு இதுதான் என்பது எனது கருத்து. முஸ்லிம்கள் தமிழரின் போராட்டத்துக்கு எதிரானவர்கள் என்று சில தீவிர தமிழ் இனவாதிகள் கட்டமைத்து வைத்திருக்கும் அம்சங்களையெல்லாம் தகர்த்தெறிகிறது
பேயன்: இது தேசியப் புலனாய்வுப்பிரிவில் இருக்கும் ஒரு புலனாய்வு வீரனின் கதை அவன் பேயனாக இருந்து கொண்டு எப்படியெல்லாம் சாதித்தான் என்றும் வெள்ளைவேனில் கடத்தப்பட்டு இன்னும் அவன் திரும்பி வரவில்லை உன்பதையும் மையப்படுத்தி எழுதப்பட்ட கதை தமிழர்கள் இதுவரை வெள்ளைவேன் தமிழருக்கு மட்டும்தான் பாதிப்பை ஏற்படுத்தியது என்றும் முஸ்லிம்களுக்கு அதில் பாதிப்பில்லை என்றும் கூசாமல் எழுதிவருகையில் முஸ்டீன் தைரியமாக இங்கு முஸ்லிம் சமுகத்தின் பாதிப்புக்களைக் கொண்டுவந்திருப்பது பாராட்டுக்குரியது.
கேர்னலின் வாக்கு: புலிகளுக்கு எதிராக தீவிர எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒருவன்தான் கேர்ணல் லத்தீப் என்பவன் அவனது வாக்குமூலமாகப் பிதுங்கும் கதை மிகவும் அதிர்ச்சிகரமான செய்திகளை அள்ளிக் கொட்டுகிறது. அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதும் புலிகளுக்கெதிராக ஆயுத நடவடிக்கைகளை எப்படி முன்னெடுத்தார்கள் என்பதும் மிகவும் தெளிவாக இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது. இந்தக் கதையில் முஸடீன் முஸ்லிம்களுக்கு வக்காலத்து வாங்கவில்லை முஸ்லிம் ஆயுத தாரிகள் தமிழ் மக்களை எப்படியெல்லாம் கொன்றார்கள் என்பதை நியாயமாகப் பதிவு செய்கிறார். இந்தக்கதைக்காக தமிழ்ர்கள் அவரைத் தூக்கி வைத்துக் கொண்மாடுவார்கள் ஆனால் அதில் ஒரு வில்லங்கம் இருக்கிறது. அதாவது பாகிஸ்தான் ஜிஹாத் என்றால் என்ன என்பதையும் அது எப்படி உருவானது என்பதையும் பிச்சி உதறுகிறார் ஜிஹாத் இயக்கங்கங்கள் பற்றிக் கதையளப்பவர்களுக்கு நல்ல செருப்படி. முஸ்லிம் இளைஞர்கள் ஏன் ஆயுதம் தூக்க வேண்டி வந்தது? அதற்கு யார் காரணம்? பின்னர் அவர்களின் நிலை என்ன? இதற்கெல்லாம் பதில் இந்தக் கதையில் இருக்கிறது.
புஹாரி : இந்தக் கதை நாயகன் விடுதலைப்புலிகளின் பிரதேசப் பொறுப்பாளனாக இருந்த முஸ்லிம். பின்னர் இவன் எதிர் கொண்ட பிரச்சினைகள்இ துப்பாக்கி சுமந்து கொன்டு போட்ட அட்டகாசங்களால் விளைந்த விபரீத விளைவுகள் மற்றும் சமுகம் அவனைக் கழித்து வைத்திருந்தது என்று அவனது மரணம் வரைக் கதை செல்கிறது ஓட்டமாவடி கதைக்களமாக இருக்கிறது. புலிகளில் இருந்த உரு முஸ்லிம் பொருப்பாளர் பற்றிய முதலாவது சிறுகதை இதுதான் என்பது எனது அபிப்பிராயம்
நினையாத ஒன்று : இதன் கதைக்களம் ஏறாவூர் ஆகும். அப்துல் சமது என்ற ஒருவரினை கதை நாயகனாகக் கொண்டு 1990 ஆகஸ்ட் 12 ஏறாவூரில் புலிகளால் மேற்கொள்ளபட்ட படுகொலைக் களத்துடன் ஆரம்பிக்கும் கதை சரியாக 19 வருடங்களின் பின் உத்தியோக பூர்வமாக ஆயுதம் சுமந்தவர்களால் அவர் தொழுகையில் இருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டதையும் வெள்ளை வேனில் கடத்தப்பட்டதையும் விபரிக்கிறது யுத்தகாலம்இ யுத்த நிறுத்த காலம்இ கருணாவின் பிளவுக்காலம்இ யுத்த முடிந்த காலம் வரை கதை பயணிக்கிறது. அருமையான பதிவுஇ முஸ்லிம்கள் ஏன் புலிகளுக்கு எதிராக இரானுவத்தில் சேர்ந்தார்கள்இ ஏன் ஆயுதம் தூக்கினார்கள் என்பதையெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் விபரித்து சோகத்துடன் முடிகிறது
ஹராங்குட்டி : இந்தக் கதைபற்றி பச்சையாகச் சொல்வதானால் அரபு மத்ரசாக்களில் பொடியன் அடிக்கும் மௌலவிமார்களைப்பற்றிப் பேசுகிறதுஇ தஃவா என்ற பெயரில் பிஸ்னஸ் செய்யும் இஸ்லாமிய இயக்கங்கங்களைப் பற்றிப் பேசுகிறதுஇ என்.ஜி.ஓ களுக்கு ஆட்கள் பிடித்துக் கொடுக்கும் நபர்கள் பற்றிப் பேசுகிறதுஇ தரமில்லாத டம்மி பீசுகளான மௌலவிமார் பற்றிப் பேசுகிறதுஇ ஹோமோ செக்ஸ் எனும் தன்னினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் ஹஜ்இ உம்ரா வழிகாட்டிகளாக இருப்பது பற்றிப் பேசுகிறதுஇ அப்படிப்பட்ட மௌலவி ஒருவரின் தொல்லையால் தற்கொலைக்கு முயற்சி செய்யும் மௌலவி மாணவன் பற்றியும் பேசுகிறது பொடியன் கள்வனான அந்த மௌலவி சுட்டுக் கொல்லப்படுவது பற்றிய கதை. முஸ்லிம் சமுதாயத்தின் ஆன்மாவை உலுக்கி எடுக்கும் கதை. தன்னினச் சேர்க்கையில் ஈடுபடுகின்றவன் எப்படி மிம்பரில் ஏறி குத்பா செய்ய முடியும்? அவன் எப்படி தொழுகைக்கு இமாமத் செய்ய முடியும்? என்று கெட்ட நடத்தையுள்ள ஆலிம்சாக்களை விளாசித்தள்ளுகிறது. இவ்வளவு காரமாக இதுவரையும் இந்த சமுதாயத்தை யாரும் இப்படி உலுக்கிக் கேள்வி கேட்கவில்லை என்றுதான் எனக்கும் தோன்றுகின்றது. பொடியன் அடிப்பவனை ஹராங்குட்டி என்று அழைப்பதில் தப்பில்லைதானே. முஸ்டீன் உங்களுக்கு நான் எழுந்து மரியாதை செய்வேன்.
முகத்துக்கு முகம் : இந்தக்கதை நாயகன் சித்தீக் காத்தான் குடியைச் சேர்ந்தவன்இ அரசியல் வாதிகளுக்கு அடியாளாக இருந்தவன் ஆயுதம் தூக்கி மக்களைப் பாதுகாக்க களத்தில் குதித்தவன் அவனைக்கொல்லுவதற்காக எடுக்கப்படும் முயற்சிகளை அவன் கொல்லப்படுவது வரைக் கொண்டு செல்கிறது. அதில் புலிகளுடன் இணைந்து கஞ்சா வியாபாரம் செய்த முஸ்லிம்கள் பற்றியும் புலனாய்வுக்காரர்கள் பற்றியும் நேரடியாகச் சில செய்திகளயும் மறைமுகமாகப் பல செய்திகளையும் சொல்லும் கதை. சிறந்த கதை
மையத்துப்பெருநாள் : 2002 யுத்த நிறுத்தகாலத்தில் காவத்தமுனையில் சுட்டுக்கொல்லபட்ட ஒரு இராணுவப் புலனாய்வுக்காரனின் கதை. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சக இராணுவப் புலனாய்வு வீரனால் அவன் படுகொலை செய்யப்பட்டான் என்பதையும்இ புலிகளுக்கு ஒத்தாசை நல்கும் சிங்கள இராணுவப் புலனாய்வுக் காரர்களைப் பற்றியும் கவனமாகப் பேசும் கதை. மிகவும் வித்தியாசமான கதை. இப்படிப்பட்ட கதைகள் இதுவரை முஸ்லிம் கதைப்பரப்பில் மட்டுமல்ல ஈழத்துக் கதைப்பரப்பில் கூட வரவில்லை என்று எண்ணுகிறேன்.
மனமாற்றம் : இந்தக் கதை 1985ம் ஆண்டை மையப்படுத்தியது அக்கரைப்பற்று கதைக்களம் ஈரோஸ் இயக்கத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட ராபிதான் கதைநாயகன். இப்போதைய காலத்து அக்கரைப்பற்றின் நிலைமைகளைத் ஆழமாகவும் அற்புதமாகவும் பேசுகிறது. தமிழ் விடுதலைப்போராட்டத்துக்கு முஸ்லிம்கள் எந்தளவுக்குப் பலம் சேர்த்தார்கள் என்பதையும் முரண்பாடுகள் எப்படி தோற்றம் பெற்றனஇ முஸ்லிம்கள் ஆயுத இயக்கங்களை ஏன் எதிர்த்தார்கள் என்பதையும் ஆழமாகப் பேசுகிறது.ராபியின் மனமாற்றத்தை அடிப்படையாக் கொண்டது.
தோணிக்காரன் : நான் வாசித்து அதிசயித்துப் போன கதைஇ ஒரு முஸ்லிம் மீனவனின் கதைஇ இந்தவருடத்தின் சிறந்த கதைக்கான விருது இதற்குக் கிடைக்க வேண்டும். மிகப் பெரிய கதை முஸ்லிம் ஏழைகளின் வாழ்வில் யுத்தத்தின் தாக்கம் எத்தகையது என்பதை அருமையாகப் பதிவு செய்துள்ளது வாசித்துச் சுவைத்துப் பாருங்கள்
கடைசியாகஇ இந்தத் தொகுப்பு இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று ஆவனம்இ சோனக தேசத்தின் அசைக்கமுடியாத சொத்து பொதுபல சேனா போன்று ஆயிரம் அமைப்புக்கள் தோற்றம் பெற்றாலும் விடுதலைப்புலிகள் போன்று எத்தனை இயக்கங்கள் தோற்றம் பெற்றாலும் அனைவரையும் எதிர் கொள்ள முஸ்டீன் போன்ற ஒருவனே போதும் இந்தப் பின்னனியில்தான் தொகுதியில் இறுதியாக உள்ள பின்னிணைப்பு என்ற பதிவை நான் பார்க்கிறேன். 
அமரிக்காவின் கைக்கூலியாகச் செயற்பட்டு தேசத் துரோ வேலைகளில் ஈடுபட்டதாகக் கருதப்பட்ட பட்டானி ராசிக் என்பவரின் கொலையில் முஸ்டீன் சம்பந்தப்படுத்தப்பட்டிருப்பது ஜீரணிக்க முடியவில்லை. 
காரணம் கதையில் துப்பாக்கிக் கலாச்சாரத்துக்கு எதிரான போக்கையே முஸ்டீன் கடைப்பிடிக்கிறார். எழுத்தாளர் அஷ்ரப் ஷிஹாப்தீன் 'இத்தொகுதி ஒரு இளைஞனுக்கு நிச்சயம் வழி காட்டும் என்று நம்புகிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளது சாலப்பொருத்தம்
முஸ்டீனுக்கு இறைவன் மேலும் தைரியத்தையும் தெம்பையும் நீண்ட ஆயுளையும் கொடுக்க வேண்டும் என்று மனதாரப்பிரார்த்திக்கிறேன். கற்பனைகளில் புனைவு செய்து காலத் கடத்தும் இலக்கிய வாதிகளுக்குள் மேம்பட்ட தளத்தில் முஸ்டீன் சமூக வாஞ்சையுடன் அமர்ந்து கொள்கிறார். 

(முஹ்சின் முஹம்மது)

02. ஹராங்குட்டி சிறுகதைத் தொகுப்பு மூன்று பார்வைகள் - பார்வை 02 (எம்.சி.ரஸ்மின்)

ஹராங்குட்டி சிறுகதைத் தொகுப்பு: ஒரு சுருக்கமான வாசிப்புக் குறிப்புக்கள்
எம். சி. ரஸ்மின் 

தனது சிறுகதைகளை தொகுத்து முஸ்டீன் அண்மையில் ஹராங்குட்டி எனும் தொகுப்பினை வெளியிட்டிருந்தார். இலங்கையில் முஸ்லிம் எழுத்தாளர்களின் அண்மைக்காலத் தொகுப்புக்களில் இது தனித்துவமான ஒன்று. இது முஸ்டீனின் முதலாவது சிறுகதை தொகுப்பு முயற்சி. மௌனப்போரும் புன்னகை ஆயுதமும் எனும் தன்னுடைய கவிதைத் தொகுப்பினை அடுத்து வெளிவந்துள்ளது. இதில் மொத்தமாக 12 கதைகள் இடம்பெறுகின்றன. இவற்றின் பேசுபொருள் தொடர்பாக எனது அவதானத்தை பதிவு செய்வதாகவே இக்குறிப்பு அமைகின்றது. மாறாகஇ இது விமர்சனமோ அல்லது அறிமுகமோ அல்ல. ஒரு தொகுதி என்ற அடிப்படையில்இ பேசுபொருளாலும் அது பேசப்பட்ட முறையாலும் முக்கியத்துவம் பெறும் தொகுதியாகவே நான் ஹராங்குட்டியைப் பார்க்கின்றேன். 

மற்றுமொரு சிறுகதையாளனின் பிரவேசம் என்பதற்கு அப்பால் இந்தத் தொகுப்புஇ முஸ்லிம்களின் அரசியல்இ பொருளாதார இருப்பினை தனித்துவமான பார்வையுடனும் தர்க்கரீதியான சிந்தனையுடனும் நோக்குவதற்கு ஒருவன் வெளிக்கிளம்பியிருக்கின்றான் என்ற நம்பிக்கையை தருகின்ற தொகுப்பாக நோக்கலாம். சிறுகதையின் அங்கலட்சணங்களை ஒப்புவித்து கதை எழுத முற்படும் ஒருவன் என்றில்லாம்இ ஒரு குறிப்பிட்ட அரசியல் யுகத்தில் ஒரு சமூகம் எவ்வாறு அழுததோஇ எவ்வாறு தவித்ததோஇ எவ்வாறு போராடியதோ மற்றும் எவ்வாறு நசுங்குண்டு போனதோ அதை அப்படியே சித்திரிக்கின்ற ஒரு எழுத்தாளனாக முஸ்டீன் பார்கப்படலாம்.

தான் பார்த்தவற்றையும் பதிவு செய்தவற்றையும் அவ்வாறே கதையாக்கியுள்ளார். இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் இதுவரை வெவ்வேறு தளங்களில் பேசப்பட்ட சிறுபான்மைச் சமூகத்தின் வரலாற்றை யாரும் தரிசிக்காத ஒரு கோணத்தில் பிரதிபலித்துள்ளார் முஸ்டீன். 

சமூகத்தின் விடிவுக்காக போராட நினைக்கும் உண்மையான ஆனால் சமானியத் தலைவர்கள்இ சமூகத்தின் நற்பெயரை முதலீடாக்கிஇ அதில் வாழ்வு நடத்தும் வேறு சிலர்இ ஓர் அரசியல் பொருளாதார மற்றும் சமூகச் சிறையிலிருந்து தடைச் சுவர்களை இடித்துத் தள்ளிவிட்டு சுயாதிபத்தியத்துடன் வெளிப்பட்டு நிற்கத் துடிக்கும் ஒரு சமூகம்இ சமயப் பணியினை ஒரு சம்பிரதாயத்திற்காக மேற்கொள்ளும் மற்றும் சிலர் மற்றும் எனது சமூதத்தின் குரல்வளையோரம் மண்டியிட்டு அது நசிபடும் சத்தத்தைக் கூட நான் ஒலிப்பதிவு செய்வேன் என்று பிடிவாதமாக நிற்கும் ஓர் இளைஞன் போன்றோரைச் சூழவே இத்தொகுப்பு பின்னப்பட்டுள்ளது. 

ஹராங்குட்டி சிறுகதைத் தொகுப்பின் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்று சமூகத்தின் விடிவின் மீது உண்மையான நாட்டம் கொண்ட அடிநிலை அல்லது சாமானிய தலைவர்களை கதைமாந்தர்களாக முன்னிறுத்துவதாகும். காட்டிக்கொடுத்தவன் (முஸ்தபா கொமைனி)இ பேயன் (ரபாய்)இ கேணலின் வாக்குமூலம் (கேணல் லத்தீப்)இ புஹாரி (புஹாரி)இ முகத்துக்கு முகம் (சித்தீக்) போன்ற கதைகளை இத்தகைய பண்புக்கு உதாரணமாகக் கொள்ளலாம். கல்வியறிவால் குறைந்தாலும்இ சமூகமயமாதலில் முதிர்ச்சியற்றவர்களாக இருந்தாலும்இ சமூக கலாசாரா போக்குகளுடன் சமரசம் செய்துகொள்ளும் இயலுமையில் குறைந்தவர்களாக இருந்தாலும் சமூகத்திற்காக வாழ வேண்டும் என்று கருதுகின்ற புதுமையான தலைவர்களை இந்த நூல் முன்னிறுத்துகின்றது. கதைகளை வாசிக்கின்றபோதுஇ முஸ்லிம் சமூகத்தின் இன்றையத் தலைமைத்துவத்தை சூழ்ந்திருக்கின்ற சுயநலவாத தாகம் மிகவும் தெட்டத்தெளிவாகத் தெரிகின்றது. சமூகத்தின் மீதான அக்கறை என்றால் என்னஇ சமூகத்தை நேசிப்பதற்கான அரசியல் என்றால் என்ன என்பதை மறுபடி மறுபடி விசாரிக்கத் தூண்டுவதாக இத்தகைய கதைகள் அமைகின்றன. இது ஹராங்குட்டி தொகுப்பில் தொகுப்புக்கான முக்கிய சிறம்பம்சங்களில் ஒன்று என்பது எனது கணிப்பு. 

சமூகத்தை காப்பாற்ற வேண்டும் என்கின்ற உளப்பூர்வமான பிரக்ஞை இத்தகைய தலைவர்களை ஆற்றல் குன்றாதவர்களாக போராட்ட உத்தி மிக்கவர்களாகஇ மனிதாபிமானத்தின்  நம்பிக்கையுடையவர்களாக காட்டியிருப்பது ஓர் ஒடுக்கப்பட்ட வரலாற்று புருசர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருப்பதாக அமைகின்றது. கேணல் லத்தீப் முகத்துக்கு முகம் போன்ற கதைகளை ஒரு சமூகம் அதன் முன்னேற்றத்தின் பேரில் குரல் கொடுக்க வேண்டியவர்கள் மௌனித்திருப்பதால் ஒடுக்கப்பட்ட வரலாற்றை இலக்கியமாக் காட்டும் கதைகளுக்கு சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம். 

கிழக்கிலங்கையில் சமூகத்தின் குரலாக இருக்க வேண்டும் என்று உயிரை கையில் எடுத்துக்கொண்டு உழைத்த மேற்சொன்ன தலைவர்கள் குற்றமிழைத்து விட்டோம் என்று வருந்துவதையும் அவர்களின் இலட்சியத்தை முதலீடு செய்து பிரதேச அரசியல் வாதிகளும் மேற்தட்டு முதலாளிமார்களும் தமது இருப்பினை முன்னிறுத்த முன்பட்டதையும் அனேகமான கதைகள் சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றன. இத்தகைய கதைகள் முஸ்லிம்களின் எதிர்காலம் தொடர்பான வினாக்களை மேலோங்கச் செய்கின்றன. முஸ்லிம் சமூகத்தில் நிலவும் நிலையான மௌத்தின் ஆணிவேர் எந்த மூலத்தில் இருந்து வருகின்றது என்பதை எடுத்துக்காட்டுகின்றன. ஒரு சமூகம் சுயநலத்திலிருந்து மீண்டு பொதுநலத்தை ஏற்றுக்கொள்ள எவ்வளவு போராடுகின்றது என்பதை ஆழ்ந்து சிந்திக்க வைப்பதாக இவை அமைகின்றன. மக்கள் சமூகத்தின் காவலாளிகளை இம்சிப்பதும் அவர்கள் வேதனையில் வெந்து போகுமாக அமையும் கதைகள் ஒரு சுயவிசாரணையை வேண்டி நிற்கின்றன. 

அனேகமான கதைகளில் வரும் கதைமாந்தர்கள் மணரத்தை வீரத்துடன் எதிர்கொள்ள சற்றும் அஞ்சாதவர்கள். பேயன் மற்றும் புஹாரி கதைகள் இத்தகைய பண்புக்கு உதாரணமாக் கொள்ளலாம். ஆயுதக் கலாசாரம் மக்களின் வாழ்க்கையுடன் மிகவும் நெருங்கிப் போன சூழலைக் களமாக கொண்டு இயங்கும் இக்கதைகள் இலங்கை முரண்பாட்டின் முற்றுப் புள்ளி ஆயுதப் போராட்டத்தில் இல்லை என்பதைத் தீர்க்கதரிசனத்துடன் கூறுகின்றன. இது ஒரு பிரக்ஞை பூர்வமான கருத்தியல் தரிசனமாகவே எனக்குத் தோன்றுகின்றது. முஸ்டீனிடம் வெளியில் தெரியும் வேகத்துடனும் துடிப்புடனும் ஒப்பிட்டுப் பார்க்கும்போதுஇ இந்த நிதானம் அவரின் தகுதிக்கு ஓர் எடுத்துக்காட்டாகவே உள்ளது. இது ஒரு கூர்மையான நோக்கு நிலையில் வெளிப்பாடாகும். மனமாற்றம் என்கின்ற கதை இத்தகைய கருத்திலை எடுத்துக்கூற முற்படுகின்றது. 

விடுதலைப் புலிகளும் இந்திய இராணுவமும் கிழக்கில் முஸ்லிம்களை எவ்வாறு பந்தாடினார்கள் என்பதையும்இ சமூக போராட்ட சிந்தனையால் கவரப்பட்டு தமிழர் விடுதலை இயக்கங்களுடன் இணைந்த முஸ்லிம் இளைஞர்கள் எவ்வாறு தீர்த்துக் கட்டப்பட்டார்கள் என்பதையும் எடுத்துக்காட்டும். காட்டிக்கொடுத்தவன் போன்ற கதைகளில் அகன்ற சமூகப்பார்வையைக் காணமுடிகின்றது. கிழக்கில் வெறும் ஆய்வியில் வரலாறுகளுக்குள் புதையுண்டு போன ஒரு காலகட்டத்தின் வாழ்வியல் போராட்டத்தை தோண்டி எடுப்பதாக இத்தொகுதியில் இடம்பெறும் காட்டிக்கொடுத்தவன்இ மையத்துப் பெருநாள் மற்றும் நினையாத ஒன்று ஆகிய கதைகள் இடம்பெறுகின்றன. 

இலக்கியத்தின் இயல்பான தன்மைமைஇ ஒரு காலகட்டத்தின் வரலாற்றுஇ கதைசொல்லும் ஆசிரியன் இத்தொகுதியினூடாக வெளிக்கொணர முற்படும் தனது கருத்தியல் அரசியல் ஆகிய மூன்று தளங்களில் இருந்து இயங்குதல் மிகவும் இலகுவானதல்ல. அத்தகைய ஒரு போராட்ட நிலையில் நின்று எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பாகவும் ஹராங்குட்டியைப் பாரக்கலாம். கிழக்கிலங்கை சிறுகதைகளைப் பொருத்தவரை இத்தகையை ஒரு போக்கு போராட்டத்துக்கு பின்னரான சிறுகதைகளில் முனைப்புப் பெற்றுவருகின்றது. 

எந்த ஓர் உண்மையான போராட்ட நிலையின் நியாயத்தையும் குற்றக்கூண்டில் நிறுத்தவோ அல்லது உத்தமமாகக் காட்டவோ கஸ்டமில்லாத ஒரு நிலை உருவாகியிருக்கின்றது. மனிதஉரிமை மீறல்கள்இ அடக்குமுறைகள்இ சட்டவிரோதம்இ அராஜகம் என அத்தனை நாசகாரச் செயல்களையும் உள்ளே வைத்துக்கொண்டு மேலால் மினுக்கமாக ஒரு முலாம் பூசுவார்கள். அதுதான் ஜனநாயம் என நிஹ்லிசம் பற்றிப் பேசுபவர்கள் சொல்வர்கள். தெற்காசியாவின் வரலாற்றாசிரியர்களில் ஒருவரான அருன்செமியேன் இது பற்றி அதிகம் எழுதியுள்ளார். இந்தக் கருத்தியலின் காட்சிவடிவமாக இத்தொகுப்பின் பல கதைகள் அமைந்திருந்திருக்கின்றன. சில முகமூடிகள் காரசாரமாக கிழித்தெறியப்படுகின்றன. இத்தகைய ஒரு சாத்வீகமான ஒரு முகத்திரைக் கிழிப்பினை குப்பைவாளி மற்றும் நினையாத என்று போன்ற கதைகள் செய்கின்றன. இக்கதைகள் முஸ்டீனின் பதிவுகள் என்றாலும் அதற்குள் வெளிப்படும் இத்தகைய அர்த்தங்களை சொல்வற்குத் தயங்கவேண்டியதில்லை. 

1980 தொடக்கம் 2012 வரையிலான கிழக்கு முஸ்லிம்களின் வாழ்க்கையின் ஒரு பதிவாகவும் இந்தத் தொகுப்பினை பார்க்க இடமுண்டு. ஆரம்பகாலங்களில் தமிழ் விடுதலைப் போராட்டத்தினால் முஸ்லிம் இளைஞர்கள் கவரப்பட்டதையும் அத்தகைய போராட்டத்திற்கு விசுவாசமாக நடந்து கொண்டதால் கதியற்றுப் போனதையும் உருக்கமாகவே இத்தொகுப்புப் பேசுகின்றது. இலங்கையின் ஆரம்பகால போராட்டம் கிழக்கு மாகாணத்தையொட்டி அதன் நகர்வுஇ அதில் சிறுபான்மைச் சமூகம் சிக்குண்டு போன விதம் என்பனவற்றை ஒரு நாவலைப் போல விரித்துக்கொண்டு செல்லும் இத்தொகுப்பில் தோணிக்காரண்இ மனமாற்றம் மற்றும் மையத்துப் பெருநாள் என்பன ஒரு முப்பரிமான வெட்டுமுகத்தோற்றத்தை காட்டுகின்றன. இதன் காத்திரமான தொடர் அறுபட்டுப் போவதாகவே இதில் இடம்பெறும் ஹராங்குட்டி கதையில் அமைவினை நான் பாக்கின்றேன். இந்தக் கதையின் அமைவு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டிருந்தால்இ நேரடியாகவே இது வராலாற்று ஆவமாகப் பாரப்பது இன்னும் இலகுவாக இருக்கும்.  

போராட்ட வர்க்கத்தின் கெடுபிடிகளால் பாமரச் சமூகம் எவ்வாறு விலைகொடுத்தார்கள் என்பதை எடுத்துக்காட்டும் ஒரு தனியான நோக்குநிலையும் இத்தொகுதியில் பல இடங்களில் இடம்பெறுகின்றன. தோணிக்காரன் என்கின்ற கதையினை இதற்கு சிறந்த உதாரணமாக கொள்ளலாம். ஒரு கதையாளனுக்கு இருக்கவேண்டியதாகக் கருதப்படும் சமூகத்தின் மீதான பார்வை மெச்சும் விதத்தில் நிறைந்திருக்கின்ற ஒரு கதையான இதனை நான் காண்கின்றேன். அனிபா எனும் கதை மாந்தரின் கடல்வாழ்கையை ஒட்டு மொத்த மீனவர்களின் கதையாகக் காட்டுகின்றார். யுத்தம் எப்படி பொதுமக்களின் நல்வாழ்கையின் அன்றாட உரிமைகளைக் கூட மாசுபடுத்தியது என்பதை இக்கதை எடுத்துக் காட்டுகின்றது. கடலுக்குச் சென்ற முஸ்லிம் தொழிலாளிள் சடலாமாக மீட்டெடுக்கப்பட்டதை தைரியமாக சித்திரித்து நிற்கின்றது. முஸ்டீனின் வெற்றிகரமா பாத்திர வார்ப்புகள் ஒருசிலவற்றுள் தோணிக்காரன் கதையில் வரும் அனிபாவும் ஒன்று. தப்பிவரும் தருணத்தில் கூட ஒருவேளைக்கு கஞ்சி கிடைக்கின்றது என்றால் மரணத்துடனும் சீண்டி விளையாடும் அசட்டு தைரியம் உள்ள கதைமாந்தர்களை இக்கதையில் காண முடிகின்றது. 

ஹராங்குடி என்ற கதையும் அதில் பேசப்படும் விடயம் பற்றியும் எனக்குத் தனியான அபிப்பிராயம் உண்டு. ஓர் இஸ்லாமியச் சமயப் போதகர் எவ்வாறு தனது மாணவர்களை தன்னினச் சேர்க்கைக்கு உட்படுத்துகின்றார்கள் என்பதை இக்கதை பேசுகின்றது. இத்தகைய ஒரு பேசு பொருளை முஸ்டீன் தெரிவு செய்ததில் எந்தவிதமான பிழையும் இருப்பதாககத் தெரியவில்லை. ஓர் எழுத்தாளன் என்ற அடிப்படையில் அவருக்கு இத்தகைய ஒரு கருவினைக் கையாழும் முழுச் சுதந்திரமும் உண்டு. இதனை ஒரு பிரச்சினைக்குரிய பேசு பொருளாக பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. ஒரு முஸ்லிம் இந்தத் தவறை செய்தார் என்பதற்காக இதனை பேசினால் இஸ்லாத்தின் புனிதம் கெட்டு விடும் என்று நினைப்பது மாமரத்தனம். ஒரு தவறு இடம்பெறும்போது தவறைச் செய்தவர் முஸ்லிம் என்பதற்காக தவறை மௌமாகப் பேச வேண்டும் என்பது யோக்கியத்தனம் அல்ல. இத்தகைய விமர்சனம் தவறு செய்கின்றவர்களையன்றி இஸ்லாத்தை ஒருபோதும் விமர்ச்சிக்கவில்லை. அத்தோடுஇ எந்த ஒரு சமயத்தைச் சார்ந்தவர்களும் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்லர் என்பதையும் முஸ்டீன் தயக்கமின்றி குறிப்பிடுகின்றார். ஒருவகையில் இதனை பொதுமைப்படுத்தியும் இருக்கின்றார். பௌத்தஇ கத்தோலிக்க மற்றும் கிருஸ்தவ சமயத் தலைவர்களும் இத்தகைய குற்றச் செயலில் ஈடுபடலாம் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. நவீன ஆங்கிலச் சிறுகதைகளில் பால் நிலைசார் சிறுபான்மையினர் (ளுநஒரயட அiழெசவைநைள) தனியான துறையே வளர்ந்து வருகின்றது. இதனை எல்.ஜீ.பீ.ரீ.கியு கதைகள் என்பார்கள். எவ்வாறாயினும் இக்கதையின் தரம் மற்றும் தொகுதியில் இது பெறும் அமைவிடம் பற்றி எனக்கு வேறு கருத்துக்கள் உள்ளன. இக்கதையின் அமைவிடம் ஹராங்குட்டியின் பேசுபொருள் ஒழுங்கிணையும் கால ஒழுங்கினையும் பேணிவந்த தொகுப்பு முறைக்கு சவாலாக அமைந்திருப்பதாகவே எனக்குத் தோன்றுகின்றது. 

எனக்கு இயல் மற்றும் இலக்கியக் கட்டுமானங்கள் தொடர்பாக முழுமையான உடன்பாடு இல்லாவிட்டாலும் ஓர் இலக்கியத்தின் அமைப்பு ரீதியான கட்டமைப்புத் தொடர்பாக சற்று அக்கறை உள்ளது. அந்த அடிப்படையில்இ இத்தொகுப்பில் இடம்பெறும் சில கதைகள் அவற்றின் உள்ளடக்கத் தரத்திற்கு அப்பால் காவியப்பாங்கானவை என்பது எனது அபிப்பிராயம். காவியப்பாங்கானது என்பது கதையின் தரத்தைப் பாதிப்பதில்லை. அது பெரும்பாலும் உருவம் பற்றியது உரையாடல். கேணல் புகாரி என்கின்ற கதையினை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். கதைகளில் காவியப்பாங்கான தன்மையிடம் பெறுவது கதையில் பேசப்படும் விதத்தையோ பேசப்பட்ட முறையையோ அதிகம் பாதிக்கவும் இல்லை. ஆனால்இ இத்தகைய கதைகளை சிறுகதை என்ற பெயரில் பார்க்கும் போது சிலவேளை பிரச்சினைகள் உண்டு. இது சிறுகதை என்ற பெயரில் வெளிவந்திருப்பதால் வேறு பெயரில் பார்க்க வேண்டிய தேவையும் இல்லை. இவற்றை ஒரு நெடுங்கதையாகவோஇ குறுநாவலாகவோ பார்த்தால் இது ஒரு பிரச்சினையல்ல. இது முற்றிலும் என்னுடைய சொந்த அபிப்பிராயம் என்பதால் வேறு கருத்துக்களுக்கு அதிக இடமுண்டு. 

முஸ்டீன் இந்த தொகுப்பில் பல இடங்களில் வெளிப்பட்டு மறைகின்றார். அவருடைய நடமாட்டம் மிகவும் தெளிவாகவே இத்தொகுப்பில் இடம்பெறுகின்றது. முஸ்டீன் ஒரு வரலாற்றை ஆவணப்படுத்தும் முயற்சியையும் பல இடங்களில் மேற்கொள்கின்றார். உண்மைச் சம்பவங்களின் அதிகமான கோவைகளை அவர் வைத்திருப்பதாகத் தெரிகின்றது. இந்தநிலையில் இத்தகைய தரவுகளை இலக்கியமாக்கும் போது இலக்கியத்தரத்தினை பேணிக்கொள்வதில் அதிக அக்கறையும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது மிகவும் கடினமாக ஒரு செயல். இதனை அதிக சிரமத்துடன் முஸ்டீன் செய்திருக்கின்றார். இந்த முழுத்தொகுதியையும் அவதானமாக வாசிக்கும் போது இந்த போராட்டம் தெரிகின்றது. இந்த நிலை இலக்கியத்துக்கும் உண்மைச் சம்வங்களுக்குமிடையிலான சமரசத்தன்மையை தோற்றுவித்துள்ளது. இது பல இடங்களில் அழகாக இருக்கின்றது. சில இடங்களில் மாத்திரம் இது கைகூடவில்லை என்று தோன்றுகின்றது. 

இத்தொகுதியில் கையாளப்பட்டுள்ள மொழி தொடர்பாக எனக்கு நிறைய அபிப்பிராயங்கள் உண்டு. அவற்றை தனியாகப் பேசவேண்டும். இறுதியாக மேலே குறிப்பிடப்பட்டவை முற்றிலும் எனது தனிப்பட்ட அபிப்பிராயம் என்பதால் இவற்றை பொதுமைப்படுத்த வேண்டியதில்லை.

01. ஹராங்குட்டி சிறுகதைத் தொகுப்பு மூன்று பார்வைகள் - பார்வை 01 (அஷ்ரஃப் சிஹாப்தீன்)


ஹராங்குட்டி சிறுகதைத் தொகுப்பு - இரத்தம் தோய்ந்த கதைகள்!

முஸ்தீன் ஒரு வித்தியாசமான போக்காளி. பதினைந்து பேர் குழுமியிருந்து கலந்துரையாடும் போது ஒரு விடயத்தில் பதினான்கு பேரும் ஒரு கருத்தோடு ஒன்றிப் போக அந்த விடயத்தை வேறொரு கோணத்தில்  ஒருவன் சிந்திப்பான் என்றால் அவன்தான் முஸ்தீன்.

யாரையும் எதிர்பார்த்திராத வேளையில் எனது வீட்டு அழைப்பு மணி ஒலிக்கும். திறந்தால் முஸ்தீன் நிற்பான். எங்காவது ஓர் அவசரத்தில் வீதியில் சென்று கொண்டிருப்போம். அங்கே ஒரு முனையில் அவன் நின்று கொண்டிருப்பான். இந்த வேளைகளிலெல்லாம் அவனது கையில் ஒரு ஃபைல் அல்லது ஒரு பை இருக்கும். அவ்வப்போது எந்த முயற்சியில் அவன் இயங்கிக் கொண்டிருக்கிறானோ அந்த முயற்சி பற்றிய தஸ்தாவேஜூகள் அந்த ஃபைலுக்குள் அல்லது பைக்குள் இருக்கும்.

நான் கடமை புரிந்த அமைச்சுக் காரியாலயத்துக்கு அடிக்கடி வருவான். தனது முயற்சிகள் அரை மணி நேரம் அமர்ந்து பேசுவான். அவனது பேச்சினூடாகப் பல வினாக்களைப் போடுவான். நமது பதிலில் பலதை வெட்டிப் பேசுவான். சிலதை ஏற்றுக் கொள்ளுவான். 

ஒரு முறை அவன் நடத்தும் நிகழ்வு ஒன்றுக்கு என்னை அழைப்பதற்கு எனது காரியாலயத்துக்கு வந்திருந்தான். பேசிக் கொண்டிருந்து விட்டு ஓர் அழைப்பிதழை நீட்டினான். ஒரு நிகழ்வுக்கான சம்பிரதாயபூர்வமான எந்த முறைமையையும் பின்பற்றி அச்சிடப்படாத அழைப்பிதழாக அது இருந்தது. அந்த நிகழ்வுக்குப் பிரதம அதிதி மத்திய கிழக்கு நாடு ஒன்றின் இலங்கையில் உள்ள தூதுவர். இவனுக்கு மிகவும் பழக்கமான நபராக அவர் இருந்தார் என்று நினைக்கிறேன். என்னதான் அறிமுகம், நட்பு இருந்தாலும் அவர் ஒரு நாட்டின் தூதுவரல்லவா? அவரது பெயருக்கு முன்னால் 'அதிமேன்மை தங்கிய' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இவனது அழைப்பிதழில் அவரது பெயர் மட்டும் மொட்டையாக அச்சாகியிருந்தது. இதைப் பார்த்ததும் எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது. கடும் கோபத்தை அடக்கிக் கொண்டு அவனைப் பார்த்தேன். 'கட்டாயம் வந்துடுங்க!' என்று வெகு சாதாரணமாகச் சொல்லி விட்டுக் கிளம்பி விட்டான்.

பாடசாலையில் படிக்கும் போது எப்படி இருந்தான் என்று தெரியவில்லை. ஆனால் கல்லூரிப் படிப்புக்கு வந்ததிலிருந்து நீண்ட காலமாக மற்றவர்கள் பார்வையில் 'கிறுக்குப் புடிச்ச பய'லாகத்தான் தெரிந்தான், திரிந்தான். அவனைப் பற்றிக் கேள்விப்படும் போது 'ஏதோ தேவையற்ற வேலை செய்து திரிகிறான்' என்ற மனப்பதிவு ஏற்படும் விதமாகவே தகவல்கள் கிடைக்கும். தன்னைப் பற்றித் தனது எதிர்காலம் பற்றிக் கவலைப்படாமல் ஒரு 'ஹத்து மத்து'க்கு அடங்காமல் திரிகிறானே என்ற கவலை எனக்கும் ஏற்பட்டதுண்டு. ஆனால் தன் போக்கை, செயற்பாட்டையிட்டு மற்றவர்கள் என்ன கருதுகிறார்கள் என்பதையிட்டுச் சிறிதளவேனும் அவன் கவனத்தில் கொண்டதாக எனக்குத் தெரியவில்லை.

ஒரு நாள் முஸ்தீன் தொலைபேசியில் தொடர்பு கொண்டான். 'ஒரு சினிமா எடுத்திருக்கிறேன். கொழும்பில் எங்காவது ஓரிடத்தில் பல்திறப்பட்டவர்களையும் அழைத்து இதைத் திரையிட விரும்புகிறேன். நீங்கள் எனக்கு எந்த வகையில் உதவி செய்வீர்கள்?' என்று கேட்டான். அது வரை தனிப்பட்ட முறையில் எந்த உதவிகளையும் என்னிடம் கேட்டிராத முஸ்தீனிடம் 'நான் இடத்தை ஏற்பாடு செய்து தருகிறேன். மற்றைய ஏற்பாடுகளைப் பாருங்கள்' என்றேன். அதன் படி ஏறக்குறைய அறுபதுக்கு மேற்பட்ட பல்வேறு துறைசார்ந்தவர்களுக்கு மத்தியில் அதைத் திரையிட்டோம். அவனது முயற்சிக்காக அவனைப் பலரும் பாராட்டினார்கள்.

முஸ்தீனைப் பற்றிப் பலரும் பலவிதமாகப் பேசிய போதும் எனக்கு அவன் மீது ஓர் அபிமானம் இருந்தது. அவனுக்குச் சமூகத்தின் மீதிருந்த பேரபிமானமே அதற்கான காரணமாகும். படித்துப் பட்டம் பெற்றுப் பெரும் அரச பதவிகளில் அமர்ந்திருந்து 'தனக்கு மட்டுமே எல்லாம் புரியும்' என்ற எண்ணத்தோடு சமூகத்தொடர்புகள் ஏதுமின்றி, சமூகத்தின் மீது எந்த அக்கறையும் இன்றி வெறுமனே முந்நூறு ரூபாய் வவுச்சருக்காக அல்லாடும் படிப்பாளிகளை விடச் சமூகப் பற்றுக் கொண்ட முஸ்தீன் மீது எனக்கு அபிமானம் இருந்தது நியாயம்தானே. 

2

'தமிழ்மிரர்' இணையத்தளத்தில் 'குப்பை வாளி' என்று ஒரு கதை இடம்பெற்றிருந்தது. முஸ்தீன் எழுதிய கதை என்றறிந்ததும் படிக்கத் தொடங்கினேன். அந்தக் கதையில் முஸ்தீனின் எழுத்து நடையும் அந்தக் கதை பேசும் விடயமும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. உண்மையில் அந்தக் கதை மூலம் முஸ்தீன் வேறு ஒரு கட்டத்துக்கு நகர்ந்து விட்டான் என்ற மகிழ்ச்சி பரவியது. பொலிஸ் தடுப்புக்குள் இருக்கும் ஒருவன் அங்கிருந்த குப்பைவாளியைப் பற்றியா சிந்திப்பான்? அதைப் பற்றிச் சிந்திக்கவும் அதைக் குறியீடாக்கிச் சில விடயங்களைச் சொல்லவும் தேர்ச்சி மட்மல்ல, மிகுந்த திறமையும் வேண்டும். அது முஸ்தீனுக்குக் கைகூடி வந்திருக்கிறது.

இந்தத் தொகுதி ஒரு மதிப்புரைக்காக என்னிடம் வரும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. கதைகள் ஒவ்வொன்றாகப் படிக்க ஆரம்பித்த போதுதான் எனக்குப் புரிந்தது, முஸ்தீன் எனது கையில் ஒரு வெடிகுண்டைத் தந்து விட்டுப் போயிருப்பது. 

இந்தத் தொகுதியில் பன்னிரண்டு கதைகள் அடங்கியிருக்கின்றன. இவற்றில் முதலாவது கதையாக இடம்பெற்றுள்ள 'குப்பை வாளி', கடைசிக் கதையாக உள்ள 'மனச்சாட்சி கொன்று' ஆகிய இரண்டு கதைகளும் ஒரு வகைக்குள் அடங்கும். இந்தத் தொகுப்பின் தலைப்பாக அமையும் கதையான 'ஹராங்குட்டி' மற்றொரு வகை. அந்தக் கதையுடன் ஏனைய ஒன்பது கதைகளும் சேர்த்துப் பத்து வெடிகுண்டுகள். ஆம். அப்படித்தான் என்னால் சொல்ல முடியும்!

ஒரு போர் முடிந்த பிறகு பல ஆயிரம் உண்மைகளும் பல ஆயிரம் கதைகளும் வெளிவர ஆரம்பிக்கும். அவை  போர் முடிந்ததிலிருந்தும் போர் முடிந்து சில காலங்களுக்குப் பின்னரும் சில வேளை பல ஆண்டுகள் கழித்தும் வெளிவரலாம். கால, தேச, வர்த்தமானங்கள், கதையை வெளியே கொண்டு வருவோரின் உள நிலை என்பவற்றைப் பொறுத்து அவை அமையும். அவ்வாறான கதைகள் நமது பிரமைகளைக் கலைத்து விடும். அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்த தகவல்களைத் தெட்டத் தெளிவாகச் சொல்லிப் போகும். மக்கள் நினைவில் பதிந்திருக்கும் படிமங்களின் சாயத்தைக் கரைத்து நம்பமுடியாத ஒன்றை ஏற்க வேண்டிய அவசியத்தை உருவாக்கும்.

இரண்டாம் உலகப்போரின் கதைகள் இன்னும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதற்குப் பிறகு வௌ;வேறு நாடுகளுக்கிடையில் நடைபெற்ற போர்களில் இடம்பெற்ற நம்பமுடியாத சேதிகளும் தகவல்களும்; வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்தப் போர்களிலெல்லாம் வெளிவராமல் போன செய்திகளும் தகவல்களும் கதைகளும் ஆயிரமாயிரம்.

இரு தேசங்களுக்குள் இடம்பெறும் போரை விட பல்வேறு இனங்கள் வாழும் ஒரு தேசத்துக்குள் நடைபெறும் போர்தான் மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்பதை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தும் நூல்தான் 'ஹராங்குட்டி!' 

இலங்கைக்குள் நடந்த போரில் மூன்று இனங்கள் (பொது மக்கள்), வௌ;வேறு கருத்துப் போக்குகளுடன்  இயங்கிய போராட்டக் குழுகள், அரசு, அரச எதிரணிகள், அயல்நாடுகள், சர்வதேசம் - இவர்களுக்குள் நடக்கும் கயிறிழுப்பும் காய் நகர்த்தலும் சாதாரண பொது மகன் நினைத்தே பார்த்திராத விடயங்களை நிகழ்த்திச் சென்றிருப்பது பின்னால் வெளிவருகிறது. பிரபல பத்திரிகையாளரான, கொலையுண்ட, 'தராக்கி' என்றழைக்கப்பட்ட சிவராமின் கரங்கள் கொலைக் கறையுடையவை என்ற தகவலை அண்மையில் கவிஞர் நட்சத்திரன் செவ்விந்தியன் குறிப்பிட்டிருந்ததானது இவ்வாறான தகவல்களுக்கு உதாரணம்.

நடந்து முடிந்தவற்றின் ஒரு பகுதியைப் பற்றி அதிகம் எழுதாமல் புரிந்து கொள்வதற்கு சி.சிவசேகரம் அவர்களின் கவிதை ஒன்று நமக்குப் போதுமானது.

துரோகி எனத் தீர்த்து
முன்னொருநாட் சுட்டவெடி
சுட்டவனைச் சுட்டது.
சுடக் கண்டவனைச் சுட்டது.
சுடுமாறு ஆணை
இட்டவனைச் சுட்டது.
குற்றஞ் சாட்டியவனை
வழக்குரைத்தவனைச்
சாட்சி சொன்னவனைத்
தீர்ப்பு வழங்கியவனைச் சுட்டது.
தீர்ப்பை ஏற்றவனைச் சுட்டது.
சும்மா இருந்தவனையுஞ் 
சுட்டது.

இதற்கப்பால் சொந்தக் குரோதங்களைச் சாதித்துக் கொள்ளவும் ஒருவரின் சொத்தை அபகரித்துக் கொள்ளவும் எப்போதோ நடந்த ஒரு சிறிய விடயத்துக்காப் பழியெடுக்க 'துரோகி' என்றோ 'பயங்கரவாதி' என்றோ காட்டிக் கொடுத்தல் அல்லது சட்டத்தின் பிடியில் சிக்க வைத்தல் அல்லது கொலை செய்தல் என்று பல் விடயங்கள் நடந்தேறியிருக்கின்றன. இவற்றில் இதுவரை வெளிவந்த தகவல்கள், சம்பவங்கள், கதைகள் மிகவும் சொற்பமானவை. வெளிவந்திராதவற்றைத் தெரிந்திருந்தவர்களில் பலர் இன்னொரு கபடத் தனத்துக்கு அகப்பட்டு, கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது ஒரு குண்டுத் தாக்குதலில், துப்பாக்கிப் பிரயோகத்தில் - இடையில் அகப்பட்டு உயிரிழந்திருக்கலாம். 

இவற்றிலிருந்ததெல்லாம் தப்பிப் பிழைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் அற்பத் தொகையினர் சம்பவங்களையும் தகவல்களையும் வெளியே கொண்டு வருவதற்குச் சந்தர்ப்பங்களை எதிர்நோக்கியிருப்பார்கள். புலிகளின் வதைமுகாமில் ஒன்;றரை வருடங்கள் துன்புற்ற தனது கதையை தேனீ இணையத்தளத்தில் மணியம் என்பவர் இப்போது எழுதி வருகிறார். அவரது நேரடி அனுபவங்களைச் சொல்லி வரும் அவர் கொள்ளை, கொலைகளோடு சம்பந்தப்பட்ட பலர் இப்போது மேற்கத்தேய நாடுகளில் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிடுகிறார். 'மனமாற்றம்' என்ற கதையில் வரும் ராபியைச் சுட்டுக் கொன்ற இருவரில் ஒருவர் மற்றொரு துப்பாக்கிச் சூட்டில் இறந்ததையும் மற்றையவரான சாந்தன் என்பவர் இப்போது கனடாவில் வசித்து வருவதாகவும் முஸ்தீன் குறிப்பிடுகிறார். 

ஏதோ ஒரு வகையிலான ஆபத்திலிருந்தும், தாம் செய்த பாவங்களின் காரணமாக தம்மைத் துரத்தும் மரணத்திலிருந்தும் தம்மைக் காத்துக் கொள்வதற்காக நாட்டை விட்டு வெளியேறியோர் அதிகம். சொகுசு வாழ்க்கைக்காகத் தமது வாழ்வும் ஆபத்திலிருப்பதாகக் காட்டிக் கொண்டு சென்றவர்களும் இருக்கவே செய்கிறார்கள். சிலர் எவ்வாறு அங்கு சென்றார்கள் என்பதை எடுத்துச் சொன்னால் நன்றாக இருக்காது. ஆனால் அங்கே போயிருந்து இவர்கள் மனிதாபிமானம், சமூக அக்கறை பற்றிப் பேசுவதையும் எழுதுவதையும் ஒரு நாவலாகவே எழுலாம்.

எதிர்வரும் காலங்களில் நாம் பல புதிய கதைகளை அறிய, நம்ப முடியாத விடயங்களைக் கேள்விப்படத் தயாராக இருக்க வேண்டும். 

3

முஸ்தீன் எழுதியிருக்கும் இக்கதைகள் வெளிப்படுத்தும் நபர்களும் அவர்கள் சார்ந்த தகவல்களும் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குபவை. முஸ்தீன் இப்பணியை மேற்கொள்ளவில்லையென்றால் வேறு யாரும் இவற்றை வெளியே கொண்டு வந்திருப்பதற்கு வாய்ப்பில்லை என்றே நான் கருதுகிறேன். முஸ்தீனின் செயற்பாட்டுத் தளம் யாரும் புக நினையாதது. எனவே இந்தக் கதைத் தொகுதி கடந்த காலத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் வாழ்ந்த மக்களின் அவல வாழ்வின் வெட்டு முகமாகத் தோற்றமளிக்கிறது.

நான் ஏற்கனவே சொன்ன ஒன்பது கதைகளுள் வரும் பாத்திரங்களானகொமைனி முஸ்தஃபா, பேயன், புகாரி, கேர்ணல் லத்தீப், சமது நானா, அஸீஸ், ராபி ஆகியோரின் பக்கங்களையும் அவர்கள் சார்ந்த ஏனைய பக்கங்களையும் நமக்கு முன்னே முஸ்தீன் விரித்து வைக்கிறார். எமது பிராந்தியத்தைச் சேர்ந்தவர்களான கொமைனி முஸ்தஃபா, பேயன், புகாரி, கேர்ணல் லத்தீப் ஆகியோரில் புகாரியை மட்டுமே எனக்கு நன்கு தெரியும். கொமைனி முஸ்ஃபாவைப் பற்றித் தெரிந்திருந்த போதும் அவரது தோற்றம் ஞாபகத்தில் இல்லை. ஒரு முறை ஊரில் நின்ற வேளை ஜூம்ஆத் தொழுகைக்காக மீராவோடைப் பள்ளிவாசலுக்குச் சென்ற போது ஒரு எஸ்.எல்.ஆர். துப்பாக்கியுடன் (அத்துப்பாக்கி அந்த ரகத்தைச் சேர்ந்தது என்று பக்கத்தில் நின்றவர்கள் பேசிக் கொண்டனர்) தொழுகைக்கு வந்திருந்தார். சிறுவயதில் நேருக்கு நேர் சந்தித்தால் சிரித்துக் கதைக்கும் புகாரி அங்கு யாரையும் கண்டு கொள்ளவில்லை. புகாரியையும் யாரும் கண்டுகொள்ளவில்லை.

இவர்களுள் சமூகத்தைக் காப்பது என்று செயல்படத் தொடங்கி வேறு வலைகளுக்குள் சிக்கிக் கொண்டவர்கள், துப்பாக்கியை ஏந்தினால் தாமும் மக்களின் அவதானிப்புக்குள்ளாகுவோம் என்ற 'ஹீரோயிஸ'  எண்ணம் கொண்டு இயக்கங்களில் இணைந்த விடலைகள் அநேகம். பயன்படுத்தப்பட்ட பிறகு கொலை செய்யப்பட்டவர்கள், எதிர்த்து நிற்கிறார்கள் என்று தமிழ் விடுதலை இயக்கங்களால் கொல்லப்பட்டவர்கள் என்று - போராட்டத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் இயங்கியோரால்  இவர்களை உயிரிழக்க நேர்ந்திருக்கிறது. அதேவேளை, துப்பாக்கிகளைக் கையில் எடுத்துக் கொண்ட பிறகு இவர்கள் மக்களின் மீது நாட்டாமை செய்யத் தொடங்கிய காரணத்தால்  மக்களால் வெறுக்கப்பட்டார்கள். 

பல இயக்கங்கள் விடுதலைக்காக இயங்கிய காலகட்டம், போராட்டம் உக்கிரமடைந்த காலகட்டம், இந்திய அமைதிப்படை வந்த கால கட்டம், சமாதான ஒப்பந்தக் கால கட்டம் என்று முக்கியமான காலப்பகுதிகளில் கிழக்கு முஸ்லிம் பிராந்தியங்களின் நிலைமையை இக் கதைநாயகர்களூடாகவும் கதைகளினூடாகவும் முஸ்தீன் நம்மைத் தரிசிக்க வைத்திருப்பது இந்த நூலின் முக்கியமான ஒரு சிறப்பம்சமாகும். 

தான் பெற்றுக் கொண்ட தகவல்களின் அடிப்படையில் குறிப்பாக உரியவர்களின் வாக்கு மூலங்களின் அடிப்படையில் இக்கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. கதை நாயகர்களது தகவல்களைக் கொண்டு அல்லது வாக்கு மூலங்களைக் கொண்டு அவர்களது செயற்பாடுகளை விபரித்ததோடு பெரும்பாலும் முஸ்தீன் நின்று கொள்கிறார். அவற்றைத் தனது தராசில் ஏற்றி நிறை, குறை சொல்லாமல், அவர் விலகி நின்றபடி அவற்றை மக்கள் சமூகத்தின் முன் சமர்த்திருப்பது இத்தொகுதியின் இன்னொரு சிறப்பு.

தமிழ் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தவர்கள், முஸ்லிம் சமூகத்தை விமர்சித்தவர்கள், போராட்டக் குழுக்களின் தகவல்கள் அடிப்படையில் ஊடகங்களில் எழுதியவர்கள், ஊகங்களின் அடிப்படையில் கருத்துத் தெரிவித்தவர்கள், போராட்டத்தை விமர்சித்தவர்கள் என்று சகலருக்கும் இக்கதைகள் பேசும் விடயங்கள் பற்றியதும் கதை நாயகர்கள் பற்றியதுமான தமது மனப் பதிவுகளில் சிறியதாகவோ பெரிய அளவிலோ மாற்றமொன்றை இத்தொகுதி ஏற்படுத்த இடமுண்டு. 

எல்லாவற்றையும் விட, என்றாவது மற்றொரு போராட்டம் முளை கொண்டால் தான் ஏன் எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கக் கூடாது என்பதற்கும் யாரை நம்புவது யாரை நம்பக் கூடாது என்பதற்கும் இந்தப் போராட்டத்தில் நான் யார்? எதற்காக ஈடுபடுகிறேன்? என்ற கேள்வியற்று இறங்காமலிருப்பதற்கும் துப்பாக்கிகளைத் தூக்கி விட்டால் மட்டும் போராளியாகவோ 'ஹீரோ' வாகவோ மாறிவிட முடியாது என்பதற்கும் ஓர் இளைஞனுக்கு இத்தொகுதி வழி காட்டுவதாக நான் நம்புகிறேன்.

இத்தொகுதியின் தலைப்புக்குரிய கதைதான் 'ஹராங்குட்டி.' இது குறித்து எழுதுவதை விடப் படித்துப் பார்த்துத் தெரிந்து கொள்வது நல்லது. கேடுகெட்ட நடத்தையில் ஈடுபடும் சாமியார்கள், பாதிரியார்கள், பிக்குகள் வரிசையில் ஆலிம்கள் என்று அறியப்பட்ட ஒரு சிலரது கெட்ட நடத்தை பற்றி இக் கதை பேசுகிறது.  

4

வழமையான சிறுகதைப் பாணிக் கதைகளாக இதற்குள் அடங்கியிருக்கும் எல்லாக் கதைகளும் இமையவில்லை. சிறுகதைகளின் வடிவம் மாற்றத்துக்குள்ளாகியிருக்கிறது. இங்கே சொல்லப்படும் விடயங்கள் தம்மை வெளிப்படுத்த முஸ்தீன் ஊடாக எடுத்துக் கொண்ட வடிவத்தில் இவை வந்திருக்கின்றன.  அப்படித்தான் நான் நினைக்கிறேன்.

நிறைய எழுதியிருக்கிறார் முஸ்தீன். இரத்தமும் சதையும் அச்சமும் புதைகுழிகளுமாகக் கொத்துக் கொத்தாக  எழுத்துக்கள். இந்த எழுத்துக்கள் என்னில் ஓர் அழிச்சாட்டியம் நடத்துவதற்கு என் மேனியில் ஏறி நடந்து திரிவதாக ஒரு பயமும் ஏற்பட்டது. எனவே ஒவ்வொரு கதையையும் நில நாட்கள் விட்டுத்தான் படிக்க வேண்டியிருந்தது.

ஒரு குறிப்பிட்ட விடயத்தை கதையில் ஓர் இடத்தில் மட்டும் அல்லாது வேறு வார்த்தைகளில் வேறு இடத்திலும் பேசுவதாகத் தெரிகிறது. இது வாசகனை அலுப்புக்குள்ளாக்கக் கூடியது. தகவல்களைக் கொண்டு பிதுங்கும் இத்தொகுதியின் கதைகளை எழுதும் போது இந்த விடுபாடுகள் மன்னிப்புக்குரியவை தான். 

அஷ்ரஃப் சிஹாப்தீன்