முஸ்டீன் எழுதிய ஹராங்குட்டி சிறுகதைத்தொகுதி – விமர்சனப்பார்வை
மிகுந்த சர்ச்சைகளை உருவாக்கிக் கொண்டுவரும் ஒரு புத்தகமாக இந்த ஹராங்குட்டி தொகுதி இடம்பெற்றுவிட்டது அதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று முஸ்டீன் எழுதியிருப்பது இரண்டு இந்தத் தொகுதியின் தலைப்புஇ மிக மோசமாகக் கருதப்படும் ஹராங்குட்டி என்ற சொல்லாடலை கோபத்தின் உச்ச வெளிப்பாடகத்தான் யாரேனும் பயன்படுத்துவர் அதுவே ஒரு புத்தகத்தின் தலைபபாக மாறியது சர்ச்சைகளைத் தோற்றுவிப்பது ஒன்றும் புதிதல்ல. இந்தத் தொகுதியின் வெளியீடுபற்றியும் வெளியிட்டபின்னர் அந்நிகழ்வு பற்றியும் பல இனையதளங்களும் பத்திரிகைகளும் கனிசமான முக்கியத்துவத்தினை அளித்திருப்பதுதான் சந்தேகத்துடன் இத்தொகுதி குறித்து ஆய்வு செய்யும் அவசியத்தைத் தோற்றுவித்தது. அரசாங்கத்தின் உத்தியோக பூர்வச் செய்தித்தளமான நெறள.டம கூட இந்நூலின் வெளியீடு குறித்து அறிவிப்புச் செய்திருந்தமையும் இந்நூலாசியருக்கு உயர்மட்டத்தில் இருக்கும் செல்வாக்கைப் பிரதிபலித்தது. அது கூட கொஞ்சம் கூர்ந்து கவனிக்க செய்ததில் ஆச்சரியமில்லைதான் ஏனெனில் அரச செய்திச்சேவை இதுவரைக்கும் எந்த நூல் வெளியீட்டிற்கும் முக்கியத்துவமளித்ததில்லை. ளழயெமயச.உழஅ இல் சில சகோதரர்கள் வெளிப்படையாக சந்தேகத்தை வெளிப்படுத்தியதன் விளைவாகவும் அம்பாறை மாவட்டத்தில் நடக்கவிருக்கும் இந்நூலின் அறிமுக விழாவினை ஜம்இய்யதுல் உலமா தடை செய்வாற்கான செயற்பாடுகள் பற்றிய செய்திகளும் தான் இந்நூலைத் தேடிப் பெற்று வாசித்துக் விமர்சிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த அடிப்படையில் முஸ்டீன் என்பவரைப் பற்றியும் அவரது ஹராங்குட்டி பற்றியும் பார்ப்பது அவசியமானது. இத்தொகுதியில் ஸாமிலா ஷரீப் என்பவர் முஸ்டீன் பற்றி நீண்ட பதிவைச் செய்திருக்கிறார் அதன் சுருக்கம்
இந்த முஸ்டீனுக்கு ஒன்றும் தெரியாது! அதற்காக ஒன்றையும் தெரிந்து கொள்ளாமல் விட முடியுமா?
இந்த முஸ்டீனை எதிர்கொள்வது என்பது பலருக்கு மிகவும் கடினமான காரியங்களிலொன்று
1983 ஏப்ரல் 22ம் திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டஇ காவத்தமுனை எனும் கிராமத்தில் பிறந்தார்.
1985 ஏப்ரல் 29ம் திகதி இவரின் தந்;தை விடுதலைப் போராளிக் குழுவொன்றினால் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார்.
காவத்தமுனை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையிலும் (இப்போதைய அல்அமீன் வித்தியாலயம்) கம்பஹா-யட்டிஹேன முஸ்லிம் வித்தியாலயத்திலும் ஆரம்பக்கல்விஇ பின்னர்; மள்வானை அல் முபாரக் மத்திய கல்லூரிஇ பின்னர் யத்தாமா சர்வதேசப் பாடசாலை. இங்குதான் க.பொ.த (சா.தரம்) வரைக் கற்றார்.
1992இல் இருந்து 2004 வரை மாகொல முஸ்லிம் அநாதை நிலையத்தின் அனுசரனையுடனேயே கற்றல் நடவடிக்கைகளைத் தொடர்ந்தார்.
2000ஆம் ஆண்டு பேருவலை ஜாமிய்யா நளீமிய்யா வில் சேர்ந்த இவர் 2002ல் க.பொ.த உயர் தரப் பரீட்சைக்குத் தயாரான காலப்பகுதியில் தனது தந்தையின் ஞாபகார்த்தமாக ளுஐஆ-Pசழனரஉவழைn எனும் நிறுவனத்தைத் ஏப்ரல் 22ம் திகதி தோற்றுவித்தார்.
2004ல் அக்கினிச் சுவாசம் எனும் பாடல் வீடியோ அல்பத்தை தயாரித்து வெளியிட்டார்.அத்துடன் அதில் ஆறு பாடல்களையும் எழுதியிருந்தார்இ இக்காலப் பகுதியில் ஆயுத இயக்கங்களுக்கெதிரான புரட்சிகரமான செயற்பாட்டாளராக இணங்காணப்பட்ட இவர் ஜாமிய்யா நளீமிய்யா நிருவாகத்துடன் முரண்பட்டதனால் இவரின் கற்றலுக்கு நிருவாகம் தடை விதிக்க போர்க்கொடி தூக்கினார்இ சட்டரீதியான உச்ச நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாரான வேளை ஜாமிய்யா நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்ஹ் ஏ.சி. அகார் முஹம்மத் தலைமையிலான குழுவினரின் சமரசமான பேச்சுவார்தைக்குப் பின்னர் நளீமிய்யாவுக்கெதிரான சட்டநடவடிக்கைகளைக் கைவிட்டதுடன்இ 2004களிலேயே அங்கிருந்து வெளியேறினார்.
2004ல் புகலிடம் எனும் குறும்படத்தைத் தயாரித்து வெளியிட்டதோடு அதில் ஒரு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்இ
2004 இறுதிகளில் ஏற்பட்ட அசாதரண சூழ்நிலை காரணமாக குவைத்துக்குப் புலம் பெயர்ந்தார்.
குவைத்தில் ஐ.பி.ஸி அமைப்பின் பிரைடே போரத்தில் கணணிக் கற்கையை நிறைவு செய்தார்இ அங்கேயே இக்ரஃ இஸ்லாமியச் சங்கத்தின் அனுசரணையில் அஷ்பால் எனும் சிறுவர் கார்ட்டூன் சித்திரத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளிட்டார். அத்துடன் அமுதம் எனும் வீசீடி சஞ்சிகையையும் தாயாரித்து வெளியிட்டார்இ
நாடு திரும்பி 2005 இறுதியில் ஒரு மாதிரி எனும் குறும்படத்தைத் தயாரித்தார்இ
ஏபியெம்.இத்ரீஸ் தயாரித்த புரிதல் எனும் குறும்படத்தையும் 2006 களில் செய்ஹ் இஸ்மாயீல் ஞாபகார்த்த தயாரிப்பகம் ஊடாக வெளியிடட்டார். அதே ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிக் கலைமானிப் பட்டப்படிப்பையும் பூர்த்திசெய்தார். உளவியலில் முதுகலைப் பட்டப்படிப்பு இன்னும் நிறைவு செய்யப்படவில்லை.
பின்னர் வடக்கு-கிழக்கு மாகாண சபைக்காக எச்.ஐ.விஃஎய்ட்ஸ் விழிப்புணர்வுப் படங்களான உதிரும் மொட்டுகள்இ தடம் மாறியது ஆகிய இரண்டு குறும்படங்களை மட்டக்களப்பு கலாபம் கலை மன்றம்இ வாழைச்சேனை இந்துக்கல்லூரி மற்றும் வாழைச்சேனை சமாதானப் பேரவை ஆகியவற்றின் ஒத்துழைப்போடு தயாரித்தளித்தார்இ இலங்கை முஸ்லிம்களுக்கிழைக்கப்பட்ட இன ரீதியான வன்ம அழிப்புக்களைப் பல்வேறு ஆவணப்படங்களாக இயக்கியதுடன் தயாரித்தளித்தார்இ 2006 ஆகஸ்ட் மூதூர் மக்கள் வெளியேற்றப்பட்டதை மையப்படுத்திய ஆவணப் படத்தை இயக்கியதுடன் அஷ்ஷெய்ஹ் துவான் ஆரிபீன் மற்றும் அஷ்ஷெய்ஹ் முஹம்மட் ஸஜீத் ஆகியோருடன் இணைந்து தயாரித்தார்இ
2007களில் ரி.எம்.வி.பி இயக்கத்துக்காக உறங்காத உண்மைகள் எனும் ஆவணப்படத்தை இயக்கினார்இ பலஸ்தீன விடுதலைப் போர் தொடர்பான விவரணப்படத்தினை தமிழ் மற்றும் சிங்கள மொழியிலும் தயாரித்தளித்தார்இ அத்துடன் ஹைகல் சொலமன் மற்றும் மஸ்ஜிதுல் அக்ஷா பற்றிய தனது உரையைக் காட்சிப்படுத்தி வெளியிட்டார்இ மேலும் காஷ்மீர்இ செச்சனியா பிரச்சினைகள் பற்றிய விவரணப்படங்களையும் தமிழில் மொழிபெயர்த்துத் தயாரித்தளித்தார்இ செய்ஹ் இஸ்மாயீல் ஞாபகார்த்த பதிப்பகம் ஊடாக ஏ.எம்.ஸமீமின் அலங்கார வேலைக்கு அற்புத வடிவங்கள் எனும் நூலைப் பதிப்பித்தார்இ
முஸ்லிம் சமுதாயத்தின் நலன்களைக் கருத்திற்கொண்டு 2008களில் ரி.எம்.வி.பி யின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையினை வடிவமைப்பதில் எக்ஸில் ஆசிரியர் எம்.ஆர்.ஸ்ராலினுடன் இணைந்து அதிக சிரத்தை எடுத்துக் கொண்டதுடன்இ முஸ்லிம்கள் சார்பாக அதில் கையொப்பமுமிட்டார்இ இதே காலப்பிரிவில் தீ நிழல் திரைப்படத்தின் தயாரிப்புப்பணிகளைத் தொடங்கி 2009களில் நிறைவு செய்து அதை வெளியிட்டார்இ அதில் இரண்டு பாடல்களையும் எழுதினார்இ அத்துடன் தீ நிழல் திரைப்படத்துக்கான விஷேட இதழையும் பதிப்பித்தார்இ
ஜப்பான் பில்ம்கிறேவ் இன்டர்நேஷனல்-டிஜிப்ளேன் ஆகியவற்றின் புலமைப் பரிசிலுடன் 2009களில் சினமா தொடர்பான முழுமையான பயிற்சியினை நிறைவு செய்த இவர்இ அக்காலப் பகுதியில் நான்கு குறும்படங்களையும் இயக்கினார்இ அத்துடன் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் கலாச்சாரப் பிரிவின் வேண்டுகோளுக்கமைய ஐசயnயைn உiநெஅய வழறயசன pநசகநஉவழைn எனும் தொனிப் பொருளில் ஈரானியத் திரைப்படங்கள் சம்பந்தமான ஒரு காட்சித் தொகுப்பையும் செய்தார் மேலும் ரூஹூல்லாஹ் எனும் இமாம் கொமெய்னியின் வாழ்க்கைச் சரிதத்தினைத் தமிழில் மொழி பெயர்த்து ஒரு மணித்தியால விவரணச் சித்திரமாகத் தயாரித்து வெளியிட்டார்.
2010ல் சென்னை தேவநேயப் பாவனர் அரங்கில் கீற்று இணையதளத்தின் ஆறாவது வருடப் பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பான ஒரு உரையையும் ஆற்றினார்இ அத்துடன் அவரது மிக நீண்ட நேர்காணலையும் கீற்று பதிவு செய்ததுஇ தமிழ்- முஸ்லிம் மக்களின் இணக்கப்பாடான சூழல் உருவாக்கத்திற்குப் புதிய வழிகளைத் திறந்துவிடும் அழைப்பாக அந்நேர்காணல் அமைந்திருந்தது. அத்துடன் வடக்கு முஸ்லிம்கள் தொடர்பான 1990 மனிதப் பேரவலம் எனும் விஷேட இதழைப் பதிப்பித்ததுடன் வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம் தொடர்பான ஆய்வையும் செய்து முடித்தார். அத்துடன் இது தொடர்பான ஆவணப்படத்தையும் இயக்கினார். எப்.பீ.ஏ ஸ்ரீலங்கா ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற குறும்படப் பயிற்சிப்பட்டறையில் பிரதான பயிற்றுவிப்பாளராகவும்இ விரிவுரையாளராகவும் உளவளத்துணையாளராகவும் செயற்பட்டார்.
2011 ஏப்ரல் 29ல் திருமணம் செய்தார்இ தமிழ் தேசியவாதிகளுடன் சீரான உறவை வைத்திருந்த இவர் ஜூலை மாதம் இந்திய காயல்பட்டணத்தில் நடந்த சர்வதேச இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் பேராளராக் கலந்து கொண்டுவிட்டு நாடு திரும்பிய போது தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்திற்காகக் களப்பணி செய்தார் என்ற அடிப்படையில் தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுக் கொலைக் குற்றச்சாட்டுடன் சிறையிலடைக்கப்பட்டார்இ 2012 மார்ச் மாதம் சிறையிலிருந்து விடுதலையான இவர் மே மாதம் 17ம் திகதி மௌனப் போரும் புன்னகை ஆயுதமும் எனும் தனது முதலாவது கவிதை நூலை வெளியிட்டார்இ இலங்கையின் சிவில் யுத்தம் நிறைவுபெற்று மூன்று வருட நிறைவையொட்டி வெளியிடப்பட்ட அத்தொகுதியில் உள்ள சில கவிதைகளுக்குக் காட்சி வடிவமும் கொடுத்தார். ஜூன் 17ல் ஷாமிலா ஷெரீபின் நிலவின் கீறல்கள் எனும் கவிதை நூலைப் பதிப்பித்ததுடன் அதன் ஒலிப் புத்தகத்தையும் (யுரனழை டீழழம) தயாரித்தளித்தார்இ 2012 ஜூலையில் சருகுகள் எனும் குறும்படத்தை இயக்கினார் அத்துடன் ஆகஸ்டில் நேத்ரா தொலைக்காட்சியின் ஈத் பெருநாள் நிகழ்வுக்காக ஒரு பாடலையும் எழுதினார்இ ஹராங்குட்டி இது இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி.
இவ்வளவுதான் இவர்பற்றிய செய்திகள்
முஸ்டீன் சிறையில் இருந்தபோது எழுதிய கதைகள்தான் இப்போது நூலாக்கப்பட்டிருக்கின்றன
ஹராங்குட்டி - இத்தொகுதியில் மொத்தம் பன்னிரெண்டு கதைகள் நாடறிந்த எழுத்தாளர் அஸ்ரப் ஸிஹாப்தீன் உட்பட எழுத்தாளர் சுதாராஜ் பேராசிரியர் துரை மனோகரன் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் சட்டத்தரணி ஜீ ராஜகுலேந்திரா சட்டத்தரணி காண்டீபன் ஆகியோர் முஸ்ஏனுடைய எழுத்துக்கள் பற்றி எழுதியிருக்கிறார்கள் நாடறிந்த ஆளுமைகள் இந்தக் குறிப்புகளில் முஜ்டீனைப் பாராட்டி எழுதியிருந்த பின்னனியோடு கதைகளைப் படித்தேன்
முதலாவதுகதையும் இறுதிக் கதையும் பொலிஸ் தடுப்புக்காவல் பற்றியும் தடுப்பில் இருக்கும் விசாரனைக் கைதி பற்றியும் வதைகள் பற்றியும் பேசுகின்றன பெரும்பாலான தமிழ் இளைஞர்கள் அனுபவித்ததைதான் இக்கதைகளில் பதிவு செய்துள்ளார். குப்பைவாளி எனும் கதை பொலிசாருக்கு nருப்பால் அடிக்கிறது மனசாட்சிகொன்று கதை இலங்கையின் புலனாய்வுத் துறைக்கு செருப்பால் அடிக்கிறது.
ஏனைய பத்துக் கதைகளும் கொல்லப்பட்ட மனிதர்கள் பற்றிப் பேசுகின்றன. அவை பற்றி விரிவாகப் பார்க்க வேண்டும்
காட்டிக் கொடுத்தவன் : இந்திய ராணுவம் இலங்கைக்கு வந்த போது அவர்களாலும் விடுதலைப்புலிகளாலும் முஸ்லிம் சமுகம் பெற்ற துன்பங்களுக்கு இது மிகச் சிறந்த கதை. புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட கொமெய்னி முஸ்தபா என்ற வாழைச்சேனையைச் சேர்ந்த ஒருவரின் மக்களுக்கான போராட்டத்தை தத்ரூபமாகப் பதிவு செய்கிறது கதை. பாலைநகர் தியாட்டவான் காவத்தமுனை ஓட்டமாவடி வாழைச்சேனை மக்கள் பட்ட துன்பங்களையெல்லாம் இது பேசுகிறது. இது வரை வந்த பதிவுகளில் அதிசிறந்த பதிவு இதுதான் என்பது எனது கருத்து. முஸ்லிம்கள் தமிழரின் போராட்டத்துக்கு எதிரானவர்கள் என்று சில தீவிர தமிழ் இனவாதிகள் கட்டமைத்து வைத்திருக்கும் அம்சங்களையெல்லாம் தகர்த்தெறிகிறது
பேயன்: இது தேசியப் புலனாய்வுப்பிரிவில் இருக்கும் ஒரு புலனாய்வு வீரனின் கதை அவன் பேயனாக இருந்து கொண்டு எப்படியெல்லாம் சாதித்தான் என்றும் வெள்ளைவேனில் கடத்தப்பட்டு இன்னும் அவன் திரும்பி வரவில்லை உன்பதையும் மையப்படுத்தி எழுதப்பட்ட கதை தமிழர்கள் இதுவரை வெள்ளைவேன் தமிழருக்கு மட்டும்தான் பாதிப்பை ஏற்படுத்தியது என்றும் முஸ்லிம்களுக்கு அதில் பாதிப்பில்லை என்றும் கூசாமல் எழுதிவருகையில் முஸ்டீன் தைரியமாக இங்கு முஸ்லிம் சமுகத்தின் பாதிப்புக்களைக் கொண்டுவந்திருப்பது பாராட்டுக்குரியது.
கேர்னலின் வாக்கு: புலிகளுக்கு எதிராக தீவிர எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒருவன்தான் கேர்ணல் லத்தீப் என்பவன் அவனது வாக்குமூலமாகப் பிதுங்கும் கதை மிகவும் அதிர்ச்சிகரமான செய்திகளை அள்ளிக் கொட்டுகிறது. அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதும் புலிகளுக்கெதிராக ஆயுத நடவடிக்கைகளை எப்படி முன்னெடுத்தார்கள் என்பதும் மிகவும் தெளிவாக இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது. இந்தக் கதையில் முஸடீன் முஸ்லிம்களுக்கு வக்காலத்து வாங்கவில்லை முஸ்லிம் ஆயுத தாரிகள் தமிழ் மக்களை எப்படியெல்லாம் கொன்றார்கள் என்பதை நியாயமாகப் பதிவு செய்கிறார். இந்தக்கதைக்காக தமிழ்ர்கள் அவரைத் தூக்கி வைத்துக் கொண்மாடுவார்கள் ஆனால் அதில் ஒரு வில்லங்கம் இருக்கிறது. அதாவது பாகிஸ்தான் ஜிஹாத் என்றால் என்ன என்பதையும் அது எப்படி உருவானது என்பதையும் பிச்சி உதறுகிறார் ஜிஹாத் இயக்கங்கங்கள் பற்றிக் கதையளப்பவர்களுக்கு நல்ல செருப்படி. முஸ்லிம் இளைஞர்கள் ஏன் ஆயுதம் தூக்க வேண்டி வந்தது? அதற்கு யார் காரணம்? பின்னர் அவர்களின் நிலை என்ன? இதற்கெல்லாம் பதில் இந்தக் கதையில் இருக்கிறது.
புஹாரி : இந்தக் கதை நாயகன் விடுதலைப்புலிகளின் பிரதேசப் பொறுப்பாளனாக இருந்த முஸ்லிம். பின்னர் இவன் எதிர் கொண்ட பிரச்சினைகள்இ துப்பாக்கி சுமந்து கொன்டு போட்ட அட்டகாசங்களால் விளைந்த விபரீத விளைவுகள் மற்றும் சமுகம் அவனைக் கழித்து வைத்திருந்தது என்று அவனது மரணம் வரைக் கதை செல்கிறது ஓட்டமாவடி கதைக்களமாக இருக்கிறது. புலிகளில் இருந்த உரு முஸ்லிம் பொருப்பாளர் பற்றிய முதலாவது சிறுகதை இதுதான் என்பது எனது அபிப்பிராயம்
நினையாத ஒன்று : இதன் கதைக்களம் ஏறாவூர் ஆகும். அப்துல் சமது என்ற ஒருவரினை கதை நாயகனாகக் கொண்டு 1990 ஆகஸ்ட் 12 ஏறாவூரில் புலிகளால் மேற்கொள்ளபட்ட படுகொலைக் களத்துடன் ஆரம்பிக்கும் கதை சரியாக 19 வருடங்களின் பின் உத்தியோக பூர்வமாக ஆயுதம் சுமந்தவர்களால் அவர் தொழுகையில் இருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டதையும் வெள்ளை வேனில் கடத்தப்பட்டதையும் விபரிக்கிறது யுத்தகாலம்இ யுத்த நிறுத்த காலம்இ கருணாவின் பிளவுக்காலம்இ யுத்த முடிந்த காலம் வரை கதை பயணிக்கிறது. அருமையான பதிவுஇ முஸ்லிம்கள் ஏன் புலிகளுக்கு எதிராக இரானுவத்தில் சேர்ந்தார்கள்இ ஏன் ஆயுதம் தூக்கினார்கள் என்பதையெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் விபரித்து சோகத்துடன் முடிகிறது
ஹராங்குட்டி : இந்தக் கதைபற்றி பச்சையாகச் சொல்வதானால் அரபு மத்ரசாக்களில் பொடியன் அடிக்கும் மௌலவிமார்களைப்பற்றிப் பேசுகிறதுஇ தஃவா என்ற பெயரில் பிஸ்னஸ் செய்யும் இஸ்லாமிய இயக்கங்கங்களைப் பற்றிப் பேசுகிறதுஇ என்.ஜி.ஓ களுக்கு ஆட்கள் பிடித்துக் கொடுக்கும் நபர்கள் பற்றிப் பேசுகிறதுஇ தரமில்லாத டம்மி பீசுகளான மௌலவிமார் பற்றிப் பேசுகிறதுஇ ஹோமோ செக்ஸ் எனும் தன்னினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் ஹஜ்இ உம்ரா வழிகாட்டிகளாக இருப்பது பற்றிப் பேசுகிறதுஇ அப்படிப்பட்ட மௌலவி ஒருவரின் தொல்லையால் தற்கொலைக்கு முயற்சி செய்யும் மௌலவி மாணவன் பற்றியும் பேசுகிறது பொடியன் கள்வனான அந்த மௌலவி சுட்டுக் கொல்லப்படுவது பற்றிய கதை. முஸ்லிம் சமுதாயத்தின் ஆன்மாவை உலுக்கி எடுக்கும் கதை. தன்னினச் சேர்க்கையில் ஈடுபடுகின்றவன் எப்படி மிம்பரில் ஏறி குத்பா செய்ய முடியும்? அவன் எப்படி தொழுகைக்கு இமாமத் செய்ய முடியும்? என்று கெட்ட நடத்தையுள்ள ஆலிம்சாக்களை விளாசித்தள்ளுகிறது. இவ்வளவு காரமாக இதுவரையும் இந்த சமுதாயத்தை யாரும் இப்படி உலுக்கிக் கேள்வி கேட்கவில்லை என்றுதான் எனக்கும் தோன்றுகின்றது. பொடியன் அடிப்பவனை ஹராங்குட்டி என்று அழைப்பதில் தப்பில்லைதானே. முஸ்டீன் உங்களுக்கு நான் எழுந்து மரியாதை செய்வேன்.
முகத்துக்கு முகம் : இந்தக்கதை நாயகன் சித்தீக் காத்தான் குடியைச் சேர்ந்தவன்இ அரசியல் வாதிகளுக்கு அடியாளாக இருந்தவன் ஆயுதம் தூக்கி மக்களைப் பாதுகாக்க களத்தில் குதித்தவன் அவனைக்கொல்லுவதற்காக எடுக்கப்படும் முயற்சிகளை அவன் கொல்லப்படுவது வரைக் கொண்டு செல்கிறது. அதில் புலிகளுடன் இணைந்து கஞ்சா வியாபாரம் செய்த முஸ்லிம்கள் பற்றியும் புலனாய்வுக்காரர்கள் பற்றியும் நேரடியாகச் சில செய்திகளயும் மறைமுகமாகப் பல செய்திகளையும் சொல்லும் கதை. சிறந்த கதை
மையத்துப்பெருநாள் : 2002 யுத்த நிறுத்தகாலத்தில் காவத்தமுனையில் சுட்டுக்கொல்லபட்ட ஒரு இராணுவப் புலனாய்வுக்காரனின் கதை. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சக இராணுவப் புலனாய்வு வீரனால் அவன் படுகொலை செய்யப்பட்டான் என்பதையும்இ புலிகளுக்கு ஒத்தாசை நல்கும் சிங்கள இராணுவப் புலனாய்வுக் காரர்களைப் பற்றியும் கவனமாகப் பேசும் கதை. மிகவும் வித்தியாசமான கதை. இப்படிப்பட்ட கதைகள் இதுவரை முஸ்லிம் கதைப்பரப்பில் மட்டுமல்ல ஈழத்துக் கதைப்பரப்பில் கூட வரவில்லை என்று எண்ணுகிறேன்.
மனமாற்றம் : இந்தக் கதை 1985ம் ஆண்டை மையப்படுத்தியது அக்கரைப்பற்று கதைக்களம் ஈரோஸ் இயக்கத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட ராபிதான் கதைநாயகன். இப்போதைய காலத்து அக்கரைப்பற்றின் நிலைமைகளைத் ஆழமாகவும் அற்புதமாகவும் பேசுகிறது. தமிழ் விடுதலைப்போராட்டத்துக்கு முஸ்லிம்கள் எந்தளவுக்குப் பலம் சேர்த்தார்கள் என்பதையும் முரண்பாடுகள் எப்படி தோற்றம் பெற்றனஇ முஸ்லிம்கள் ஆயுத இயக்கங்களை ஏன் எதிர்த்தார்கள் என்பதையும் ஆழமாகப் பேசுகிறது.ராபியின் மனமாற்றத்தை அடிப்படையாக் கொண்டது.
தோணிக்காரன் : நான் வாசித்து அதிசயித்துப் போன கதைஇ ஒரு முஸ்லிம் மீனவனின் கதைஇ இந்தவருடத்தின் சிறந்த கதைக்கான விருது இதற்குக் கிடைக்க வேண்டும். மிகப் பெரிய கதை முஸ்லிம் ஏழைகளின் வாழ்வில் யுத்தத்தின் தாக்கம் எத்தகையது என்பதை அருமையாகப் பதிவு செய்துள்ளது வாசித்துச் சுவைத்துப் பாருங்கள்
கடைசியாகஇ இந்தத் தொகுப்பு இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று ஆவனம்இ சோனக தேசத்தின் அசைக்கமுடியாத சொத்து பொதுபல சேனா போன்று ஆயிரம் அமைப்புக்கள் தோற்றம் பெற்றாலும் விடுதலைப்புலிகள் போன்று எத்தனை இயக்கங்கள் தோற்றம் பெற்றாலும் அனைவரையும் எதிர் கொள்ள முஸ்டீன் போன்ற ஒருவனே போதும் இந்தப் பின்னனியில்தான் தொகுதியில் இறுதியாக உள்ள பின்னிணைப்பு என்ற பதிவை நான் பார்க்கிறேன்.
அமரிக்காவின் கைக்கூலியாகச் செயற்பட்டு தேசத் துரோ வேலைகளில் ஈடுபட்டதாகக் கருதப்பட்ட பட்டானி ராசிக் என்பவரின் கொலையில் முஸ்டீன் சம்பந்தப்படுத்தப்பட்டிருப்பது ஜீரணிக்க முடியவில்லை.
காரணம் கதையில் துப்பாக்கிக் கலாச்சாரத்துக்கு எதிரான போக்கையே முஸ்டீன் கடைப்பிடிக்கிறார். எழுத்தாளர் அஷ்ரப் ஷிஹாப்தீன் 'இத்தொகுதி ஒரு இளைஞனுக்கு நிச்சயம் வழி காட்டும் என்று நம்புகிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளது சாலப்பொருத்தம்
முஸ்டீனுக்கு இறைவன் மேலும் தைரியத்தையும் தெம்பையும் நீண்ட ஆயுளையும் கொடுக்க வேண்டும் என்று மனதாரப்பிரார்த்திக்கிறேன். கற்பனைகளில் புனைவு செய்து காலத் கடத்தும் இலக்கிய வாதிகளுக்குள் மேம்பட்ட தளத்தில் முஸ்டீன் சமூக வாஞ்சையுடன் அமர்ந்து கொள்கிறார்.
(முஹ்சின் முஹம்மது)
No comments:
Post a Comment