Saturday, January 26, 2013

எஸ்.எல்.எம்.ஹனிபாவுக்குக் கிறுக்குப் பிடித்துவிட்டதோ!


இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகள் - 02

எஸ்.எல்.எம்.ஹனிபாவுக்குக் கிறுக்குப் பிடித்துவிட்டதோ!இங்கு சில விடயங்களைப் போட்டு உடைக்கப் போகின்றேன். அதற்கு என்ன பெயர் வேண்டுமானாலும் வையுங்கள். எனக்குப் போலிப் பெயரில் பின்னூட்டம் போடவும், கொயின்ஸ் பூத்திலிருந்து கோல் பன்னி மிரட்டவும், மொட்டைக் கடதாசி போடவும் தெரியாது. அந்த முதுகெழும்பில்லாத அறுந்த எட்டேகால் லட்சன வேலைகளை  இந்த முட்டமேற் கூரையில்லா வீடுகளுக்குச் செய்ய நான் தயாரில்லை. எதையும் முகத்துக்கு முகம் தெளிவாகச் சொல்லி விடுவதில் செம திருப்தி.

இங்கு எஸ்.எல்.எம்.ஹனிபா என்ற தீட்டு பற்றி எழுதவே கூடாது என்று நினைத்திருந்தேன், என்ன செய்வது அவராகவே எழுத வைத்துவிட்டார். எனது வாழக்கையில் வீணாகக் கழிக்கும் நேரத்தின் இறுதி நிகழ்வாக இது இருக்கட்டும். அவரைப் பற்றி எழுதும் நேரம் எனக்கு வேஸ்ட்தான் என்ன செய்வது தொட்ட சனி விட்டபாடில்லை கடையாசியாகக் கழிக்கும் கழிப்பாக இருக்கட்டும் இது. இத்தோடு அந்தப் பேய் தேசம் தெரியாது ஒழிய வேண்டும்.

ஹனிபா ஹாஜியார்

தங்களின் முகப் புத்தகத்தில் தங்கள் பதிவு படித்தேன். முஸ்டீனுக்கு நான் செய்த குற்றமென்ன? என்ற தலைப்பில் மொக்கை போடு போட்டிருந்தீர்கள். நீங்க ரொம்ப நல்லவர். எனக்கு ஒரு குற்றமுமே செய்யவில்லை கண்ணு. நீ தேடுவது உனது குழிக்கு, நான் தேடுவது எனது எனது குழிக்கு, உனக்கு நான் துணைவரப் போவதுமில்லை எனக்கு நீ துணைவரப் போவதுமில்லை, பின்னே ஏன் அப்பு பிணக்கு! உற்கள் பதிவை அறபாத் கூட பகிர்ந்து கொண்டிருந்தார், அப்பவே எனக்குத் தெரியும் இதெல்லாம் எங்க போய் நிற்குமென்று. ரெண்டு பேரும் சேர்ந்து உங்களின் கடந்த காலங்களைப் பற்றித் தேட வைத்துவிடாதீர்கள். தேடியவரை குப்பைத் தொட்டிதான், மானத்தைக் குறைக்க சக மனிதனுக்கு மார்க்கம் அனுமதிக்கவில்லை என்பதால் அவற்றையெல்லாம் பத்திரமாக வைத்திருக்கிறேன். பெருமனது கொண்டு  அப்படியே வெளியிடாது விடுகிறேன்.

ஹனிபா! உங்களுக்கு இன்னும் புத்திபிடிபடவில்லை என்பது தெளிவாகத்  தெரிகிறது. ஒரு மனிதனுக்கு 40 வது வயதில் ஒரு நிதானம் பிறக்க வேண்டும் அப்படி 40 தில் அவனுக்கு நிதானம் பிறக்கவில்லையென்றால் அவன் சாகும் வரை அந்த நிதானம் அவனுக்குப் பிறக்காது. உங்களுக்கு 40 தில் நிதானம் பிறக்கவில்லை என்று எண்ணுகிறேன்.

ஹனிபா உங்கள் அனுபவத்தின் அளவுக்காவது எனது வயது இருக்காது. அதைவிடவும் ரொம்பக் குறைவு. நீங்களோ அகில அண்டசராசரமெல்லாம் பெரும் புகழ் பெற்ற ஈ, காக்காவுக்குக் கூடத் தெரிந்த இந்த நூற்றான்டின் மாபெரும் சிறுகதைப் படைப்பாளி, அடியேன் வெறும் ஜூஜூபி, சும்மா லோலாக்கு

ஹனிபா அவர்களே! உங்களுடைய ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம் என்று 2011இல் காயல்பட்டணத்தில் நடந்த இலக்கிய மாநாட்டிலேயே முடிவெடுத்து விட்டேன். அதற்குப் பிரதான காரணம் உங்கள் இரட்டை நாக்கு முகத்திற்கு முன்னால் ஒரு நாக்கு முதுகுக்குப் பின்னால் இன்னொரு நாக்கு. இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் கலந்து கொள்ளவென்று வந்தீர்கள், அந்த நாட்கள் முழுவதுமாய் நான் உங்களுடன்தான் இருந்தேன் மறந்துவிடாதீர்கள். அவர்கள் ஏற்பாடு செய்து தந்த அறையில் தங்கினீர்கள் மூன்று நாட்களும் அவர்கள் தந்த உணவை மிச்சம் வைக்காமல் ஒரு பிடி பிடித்தீர்கள், அவர்கள் ஏற்பாடு செய்த வாகனங்களிலேயே பிரயாணம் செய்தீர்கள் ஆனால் முழுக்க முழுக்க மாநாட்டு ஏற்பாட்டாளர்களைக் குறை சொல்லித் திரிந்தீர்கள் காரணம் கேட்ட போது உண்மையான படைப்பாளிகளுக்கும் சிறந்த படைப்பாளிகளுக்கும் கவுரவம் அளிக்காமல் ஏப்ப சோப்பைக் கெல்லாம் விருதும் பாராட்டும் என்று அலுத்துக் கொண்டீர்கள்.

ஆபிதீன் சொன்னதாக 'மக்கத்துச் சால்லையை விடச்சிறந்த படைப்பு இன்னும் ஈழத்தில் வரவில்லையென்றும் எத்தனை நாளைக்குத்தான் ஒரு மக்கத்துச் சால்வையையே பற்றிப் பேசிக்கொண்டிருப்பதென்றும்' சொன்னீர்கள். அத்துடன் தோப்பில் முஹம்மது மீரான் சொன்னதாக 'மக்கத்துச் சால்வைக்குப் பின்னர் ஈழத்து முஸ்லிம் கதைப்பரப்பில் சிறந்த படைப்புகள் வரவில்லை' என்றும் சொன்னீர்கள் அவர்கள் இப்படிச் சொன்னார்களா இல்லையா என்று எனக்குத் தெரியாது. என்னிடம் இப்படிச் சொல்லவில்லை என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள். (நீங்கள் மறுத்தாலும் ஆச்சரியமில்லை)

'இவர்கள் என்ன சாதித்துக் கிழித்துவிட்டார்கள் என்று பெரிசா கௌரவிக்கிறார்கள்' என்று நீங்கள் அலுத்துக் கொண்டீர்களே! ஏன்? மானா மகீன், மணிப்புலவர் மருதூர் .மஜீத், மற்றும் டொக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன், அஷ்ரப் ஷிஹாப்தீன் போன்றவர்களை வேலைப் பாழ் கேசுகள் என்ற தொனியில் நீங்கள் திட்டியதும் விமர்சித்ததும் எனக்கு நியாயமில்லாததாகப்பட்டது.

சரி அதை விடுவோம் ஆய்வரங்கு தொடர்பாகவும், அதை நெறியாள்கை செய்தவர்கள் தொடர்பாகவும், விருது பெற்றவர்கள் தொடர்பாகவும் நீங்கள் முன்வைத்த கருத்துக்களை இதயசுத்தியோடுதான் முன்வைத்தீர்கள் என்று நான் புரிந்து கொள்ள அவகாசம் இருக்கவில்லை அதற்கிடையில் பெல்ட்டி அடித்து சுயரூபத்தை வெளிப்படுத்திவிட்டீர்கள்

உங்கள் கருத்துக்களின் பிரதான அம்சங்கள்

01. டொக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் என்னத்தப் பெரிசாச் சாதித்துவிட்டார் 
என்று தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள் என்பது.

அதைக் கொஞ்சம் ஆழமாகத் தேடினேன் அப்போது ஆய்வரங்கத்தின் முதல் அரங்கிலேயே ஜின்னாஹ் ஷரிபுத்தீனின் இரண்டு காப்பியங்கள் பற்றி தனித்தனியாக ஆய்வு செய்து இருவர் கட்டுரை சமர்ப்பித்திருந்தார்கள்இ அதைக்கூடப் பொறுத்துக் கொள்ளலாம் ஆனால் சமகால இலக்கியம் தொடர்பில் சிறுகதை தொடர்பாக ஜின்னாவின் பெற்றமனம் எனும் சிறுகதைத் தொகுதியை ஆய்வுக்குட்படுத்தியதைதான் எப்படிப் பொறுத்துக் கொள்வது? அதுவும் ஒரு இந்திய முனைவர். ஏற்றுக் கொள்ளுமா மனம்? அப்போது பொங்கியதுதான் உங்கள் உள்ளம் ஹனிபாவை விட்டுவிட்டு சிறுகதை பற்றிப் பேசுவதா? மக்கத்துச் சால்வையை ஒதுக்கிவிட்டு ஒரு சிறுகதைத் தொகுப்பைப் பற்றிப் பேசுவதா? அதனால்தான் உங்களால் அவ்விடம் இயல்பாக இருக்க முடியாமல் போயிற்று (ஜின்னா மேட்டர் பற்றி முழுமையாகப் பின்னர் நிறையப் பேச வேண்டி இருக்கிறது)

02.    அடுத்தது விருது பெற்றவர்கள் பட்டியலில் உங்கள் பெயர் இருக்காதது, அதற்காக நவமனி ஆசிரியர், மற்றும் முஸ்லிம் மீடியா போரத் தலைவர் என்.எம். அமீன், அல்அஸூமத், அஷ்ரப் ஷிஹாப்தீன், மானா மகீன், கவிஞர் .இக்பால் போன்றவர்கள் விருது பெறத் தகுதியற்றவர்களா?
ஏதேனும் ஒரு விருதுக்கு தங்கள் பெயரையும் சேர்த்துக் கொண்டிருந்தால் காயல்பட்டன மாநாடு உங்கள் பார்வையில் ஆஹா! ஓஹோ! ஓகேதானே! என்ன செய்வது மற்றவர்களைக் கிண்டலடித்துக் கொண்டும் பம்மாத்துக்குக் கடிதம் எழுதிக் கொண்டும் இருந்தால் எப்படி சார்??

அங்கு உங்களின் எதிர்பார்ப்பு விருதும் பாராட்டும் பெறுவது, ஆனால் நீங்கள் கௌரவிக்கப்படவில்லையென்ற போது உங்களிடம் ஒரு வெப்புசாரம் இருந்ததை நான் அவதானித்தேன்.

ஐயா பெரியவரே! நீங்கள் குறைந்தது உங்கள் வயதிற்கும் அனுபவத்திற்கும் நூறு கதையாவது எழுதியிருக்க வேண்டாமா? ஆன புடிச்ச பனிக்கன்கதையை ஒரு நாவலாக வேண்டாம் குறுநாவலாகவேனும் எழுதியிருக்க வேண்டாமா? இது வரைக்கும் எத்தின தடவ இந்தக் கதையச் சொல்லி இருப்பீங்க! கனதியான இரண்டு தொகுதியாவது போட்டிருந்தால் நிச்சயம் உங்கள் பெயரில் ஒரு அரங்கும் இருந்திருக்கும் நீங்களும் தலைமை தாங்கி இருப்பீர்கள் விருதும் பாராட்டும் கௌரவமும்கூட உங்களை மதித்து அளித்திருப்பார்கள்.

உங்களுக்கு வயது போய்விட்டது இனி எழுத முடியாது என்றால் சொல்லுங்கள் அந்தப் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கின்றேன், நீங்கள் கதையை ஒழுங்காகச்சொல்லுங்கள் ஒலிப்பதிவு செய்து அதைத் தட்டச்சு செய்து தங்கள் பார்வைக்கு அனுப்பிவைக்கிறேன் மேலதிக திருத்தங்களைப் போட்டு மீண்டும் அனுப்புங்கள் அதைப் பதிப்பிக்கும் பொறுப்பை நானே சுமந்து கொள்கின்றேன். 
இதைச் சவாலாக எடுத்துக் கொண்டாவது செய்ய முன்வருவீர்களா? இது உங்கள் ஆளுமைக்கும் ஆற்றலுக்கும் விடுக்கப்படும் சவால். இதை நிறைவேற்றி உங்கள் தனித்துவத்தை நிறுவ முயற்சி செய்யுங்கள் 

(சி.சு.செல்லப்பா 75வது வயதில் நாவல் எழுதினார் அது ஓகே ஆனால் அவரோடு ஒப்பிட்டுக் கருத்துச் சொல்லவும் உங்களையும் இணைத்துக் கொண்டு பேசவும் ஒரு மக்கத்துச் சால்வை போதாது மாமா. 90களுக்குப் பின்னர் நீங்கள் என்ன படைப்பாக்கம் செய்தீர்கள் என்பதுதான் உங்களை அந்த உச்சத்துக்கு அழைத்துச் செல்லும்)

03.அடுத்ததாக அங்கு நடந்த ஆய்வரங்கம். அதைக் கடுமையாக விமர்சித்ததன் பின்னணி எனக்குப் புரியவில்லை.

பேராசியர் துரை மனோகரன், பேராசிரியர் யோகராசா போன்றவர்கள் ஒரு ஆய்வரங்கைத் தலைமையேற்று நடாத்தவும் ஆய்வு சமர்ப்பிக்கவும் அறுகதையற்றவர்களா? ஜின்னாஹ்ரிபுத்தீன், மானா மகீன் போன்றவர்கள் ஆய்வரங்குகளை நெறியாள்கை செய்ததைத் தங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?

ஒரு அரங்கிங்குத் தலைமை தாங்க தங்களையும் போட்டிருந்தால் இந்த வருத்தம் குணமடைந்திருக்கும் என்பது லேட்டாகித்தான் புரிந்தது. ஆனாலும் ஹனீபா இது ரொம்ப டேன்ஜரான வருத்தம் அவ்வளவு எளிதில் குணமடையாது. அதற்கு மருந்தும் கிடைக்காது. உண்மையான தூய்மையான கடினமான எழுத்துப்பணியும், படைப்பாளுமையும் திறமை வீச்சும்தான் இதற்கு இலகுவில் மருந்து தரும் அதல்லாது கிடைக்கும் எல்லாம் போலி மருந்துகள்தான் ரொம்பக் கவனமாக இருங்கள். இந்த வயசி போன காலத்தில் போலிகளுக்குள் மாட்டிக் கொள்ளாதீர்கள், சொறியச் சொறிய சுகமாய்த்தான் இருக்கும். வலி இப்போது தெரியாதுசொறிபவர்களுக்குச் சொல்லுங்கள்.

.மு.நத்தர்ஷா மற்றும் காத்திரமான எதிர்வினையாற்றும் சுஹைப் ஆகியோரைச் சந்தித்தபோது நீங்கள் உங்களை முந்நிறுத்திப் பேசிய போதும், காயல்பட்டனக் கடற்கரையில் பேராசிரியர் யோகராசா அசதி மேலீட்டால் தூக்கத்தின் ஆக்கிரமிப்பில் இருந்தவேளையும்கூட நீங்கள் ஆன புடிச்ச பனிக்கன் கதை சொல்லிக் கழுத்தறுத்த போது உங்களை நாகூருக்குப் பார்சல் பன்னிவிட்டால்போதும் என்றாகிவிட்டது. இன்னும் ஆபிதீனுக்கு உங்களைப்பற்றி முழுமையாகத் தெரியவில்லை போலும். அவர் அருமையான மனிதர் அவரையும் மதிப்புக்குறைத்து கேவலப்படுத்திவிடாதீர்கள். பின்னர் உங்களை வைத்தே நம்நாட்டுக்காரர்களை எடைபோட்டுவிடுவார்கள்.

'நான் இந்த மாநாட்டுக்கெல்லாம் வரல்ல, சும்மா காயல்பட்டணத்தச் சுத்திப்பாக்கத்தான் வந்த' என்று சுஹைப் இடம் நீங்கள் சொன்ன போது நான் அதிர்ந்தே போனேன். இப்படிச் சொன்ன நீங்கள் குறைந்தது மாநாட்டுக்கு வருகை தந்தவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவை உட்கொள்வதை விட்டும் தவிர்ந்திருக்கலாமல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை? மாநாட்டு ஏற்பாட்டாளர்களின் மனதைப் புண்படுத்தித் திரியும் உங்களிடமிருந்து அவர்களைக் காப்பாற்றுவது எனக்குப் பெரும் சிரமமாகிற்று.

குற்றாலத்துக்கு உங்களை வழியனுப்பிவிட்டு நான் குதூகளித்ததை தாங்கள் அறிய வாய்ப்பில்லை, அந்த மக்கள் பல லட்சம் செலவு செய்து, பலமாதங்கள் பாடுபட்டு ஏற்பாடு செய்த அம்மாநாட்டுக்கான உண்மையான உழைப்பை எப்படி உங்களால் அவ்வளவு இலகுவாக உதாசீனம் செய்து கிண்டலடிக்க முடிந்தது? காயல்பட்டனத்தில் எடுத்த போட்டோக்கள் எதையும் இன்னும் பேஷ்புக்கில் கூடப் போடவில்லை போலத் தெரிகிறது. அதவைதானே மாநாடு என்ற பெயரிலான உங்கள் விஜயத்தின் சாட்சிகள். பெரும்பாலனவை நான் எடுத்ததுதான் பயமில்லாமல் போடுங்கள் அவை நன்றாகத்தான் இருக்கும்.

காயல்பட்டண டைலர் இஸ்மாயீல் காக்கா முதல் ஆபீதீன் வீட்டு இராப்போசனம் வரை உங்கள் பிரயாண அனுபவங்களை எழுதியிருந்தால்கூட சுவாரஷ்யமாக இருந்திருக்கும். இலங்கையிலிருந்து கப்பலில் தூத்துக்குடி பயணம் பின்னர் குற்றாலம்இ நாகூர் திருச்செந்தூர் இது குறித்தெல்லாம் எழுதமாட்டீர்களா? பேசமாட்டீர்களா? அடுத்தவர்களை நக்கலடித்துப் பொழப்பு நடத்துவதைவிட்டுவிட்டு இப்படி எதையாவது உருப்படியாகச் செய்யுங்கள்
சரி அதெல்லாவற்றையும் விடுவோம்

தமிழ் மிரரில் நாச்சியாதீவு பர்வீன் சொன்னது 'எப்போது ஓர் எழுத்தாளன் தனது சக எழுத்தாளனை கேவலப்படுத்த முயற்சிக்கின்றானோ அப்பவே அவனிடம் சரக்கு தீர்ந்து போய்விட்டது என்று அர்த்தம். ஓர் எழுத்தாளன் ஓடும் நதிபோல எப்பவும் சுறுசுறுப்பாக இருக்கவேண்டும். மாறாக தேங்கி நின்று விட்டால் கூவம் போல நாறி நாத்தமெடுத்துவிடும். இங்கே ஜின்னா ஓடிக்கொண்டு இருக்கிறார், சால்வை தேங்கி விட்டது அம்பட்டுதான்.'

ஆக நீங்கள் ஒரு மக்கத்துச் சால்வையோடு தேங்கிப் போனதால்தான் ஏறுகின்ற எல்லா மேடைகளிலும் ஏனையவர்களைக் கிண்டலடிக்கும் நாற்றப் புத்தி தங்களுக்குள் உயர்ந்தோங்கி நிற்கிறது, ஒருவரை இழிவாகக் கதைத்துவிட்டு அதையே சுவாரஷ்யமாக இருக்கும் கேட்டுப்பாருங்கள் என்று சொன்னது மகா கேவலம், உங்கள் வயதிற்கும் அனுபவத்திற்கும் அது பொருத்தமானதல்ல. வயதிற்குத் தகுந்த மாதிரி நடக்கப்பாருங்கள்.

அஷ்ரப் ஷிஹாப்தீன் உங்களுக்குப்பின்னர் எழுதவந்தவர்தானே! இப்போது வரைக்கும் எத்தனை புத்தகங்களை எழுதிவிட்டார் 1999ல்தான் ஒரு கவிதைத் தொகுதியே போட்டார், அதன்பின்னர் இந்தப் 14 வருடங்களுக்குள் மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம், பத்தி, கவிதை, பயணக்குறிப்புகள் என்று கலக்கிக் கொண்டிருக்கிறார். மற்றவர்களை மதிக்கத் தெரிந்ததால்தான் அவரை விழாக்களுக்குப் பேச அழைக்கிறார்கள். சரி அவரை விடுவோம் 

அறபாத் உங்களின் சிஷ்யன்தானே! அவரே பலநூல்களை வெளியிட்டுவிட்டார். அதில் தஃலீம் தொகுப்பு பற்றியும் தப்லீஃக் ஜமாஅத் பற்றியும் எழுதிய சமயவிமர்சனப்பிரச்சார நூல்களை விட்டுத்தளுவோம் கதைகள் கவிதைகள் பத்திகள் என்று எழுதிக் கொண்டுதானே இருக்கிறார், விட்டால் நாவல் வரையும் சென்றுவிடுவார். அறபாத்திற்கு  உங்கள் வயதாகும் போது உங்களுக்குப்பிடித்த வருத்தம் பிடிக்காவிட்டால் நிச்சயம் அறபாத் பெயரில் அரங்குகள் இயங்கும் ஆய்வுகள் நடக்கும்

உங்கள் கருத்தின்படி 'உங்கள் நிழலில் வளர்ந்த அறபாத்' இவ்வளவு செய்யும் போது அறபாத்தை வளர்த்தெடுத்த உங்களால் ஒன்றுமே செய்ய முடியாமல் போனது மிகுந்த துரதிஷ்டம். அறபாத்தைப் பார்த்து இப்போது ஒன்றே ஒன்று சொல்லலாம் 'உங்கள் குருஜீக்கு கொஞ்சம் புத்தி சொல்லுங்கள்'

தகவம் வழங்கிய பாராட்டுவிழாவுக்கு இழித்துக்கொண்டு ஓடோடிவந்து உங்கள் புத்தியைக் காண்பித்துவிட்டுச் சென்றுவிட்டீர்களே சார். அரசல் புரசலாக அதைப் பற்றித்தான் இப்போது கதை அடிபடுகிறது. உங்களுக்குக் கிறுக்குப் பிடித்துவிட்டதாகப் பலர் சொல்லுமளவுக்கு நிலைமை போய்விட்டது.
01. ஆய்வாளர் கே.எஸ்.சிவகுமாரனை இழிவாகப் பேசியது
02. புரவலர் ஹாஷிம் உமரைச் சீண்டியது
03. காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீனை மலினப்படுத்தி நக்கலடித்தது
04. தகவம் அமைப்பையே அவமானப்படுத்தியது

எல்லாம் முடிந்து கொழும்பில் கபறகொயா வோ உடும்போ பிடித்தது, இத்தோடு உங்கள் கொழும்புப் பயணம் வெற்றிகரமாக முடிந்தது.

 கே.எஸ்.சிவகுமாரன் உங்களைப் போலல்லாது இயங்கிக் கொண்டிருப்பவர், பல்வேறு புத்தகங்களை இதுவரைப் பதிப்பித்துவிட்டார், அது போல மொழி ஆளுமையும் தாராளம் ஹனீபா மாமா உங்களது வாசிப்புலகம் தமிழ் மட்டும்தான் ஆனால் சிவகுமாரனோ ஆங்கிலத்திலும் வல்லமைமிக்கவர், ஆங்கிலத்திலும் தமிழிலும் கூட எழுதிவருபவர், உங்களுக்கு முதலே எழுத்தாளர் நீலபத்மநாபனுடன் தொடர்புகளைப் பேனிவருபவர், அப்படியிருக்கும் போது சிவகுமாரனைப்பற்றி அப்படி என்னதான் பொல்லாத ரகசியத்தை யாரிடமும் சொல்லவேண்டாம் என்று நீலபத்மநாதன் உங்களிடம் சொல்லிவிட்டார், வேலையில்லாத அம்பட்டன் புனையைப் பிடித்துச் சிரைத்தானாம், இப்போது ஹனிபாவும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்.

ஒரு புத்தக வெளியீட்டுவிழாவில் பேசவிட்டால் எல்லோரும் இஷ்டப்படி பேசி விட்டுப் போகும் துரதிஷ்டத்தைத் தவிர்ப்பதற்காக கட்டுக்கோப்போடு பேசப் பணிக்கப்படுவது வழக்கம், தலைவர் தலைமையுரையையும், அறிமுகம் செய்பவர் அறிமுக உரையும், வாழ்த்துரை நிகழ்த்துபவர் வாழ்த்துச்செய்தியையும் மட்டும்தான் செய்ய வேண்டும், திறனாய்வுக்கென்று தனியாக ஒரு உரை இடம்பெறும், ஆனால் இங்கு புத்தக வெளியீட்டுவிழாக்களில் எதிர்கொள்ளும் நெருக்கடி அறிமுக உரை செய்யபவரும், தலைமையுரையாற்றுபவரும் ஏன் வாழ்த்துச் செய்தியாளர்கூட விமர்சன உரை செய்துவிடுவர், இந்தச் சங்கடத்தில் இருந்து கண்ணீரினூடே தெரியும் வீதி வெளியீட்டுவிழாவில் சிவகுமாரன் எல்லோரையும் காப்பாற்றி இங்கிதமாக நடந்து கொண்டார், வாழ்த்துரையை மட்டும் நிகழ்த்தினார், அதற்குப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது, இந்த அடிப்படைவிடயம்கூடத் தெரியாத ஹனிபா சிவகுமாரனை விமர்சித்தது நல்லபகடி. இதற்கு மன்னார்ப் பகுதியில் ஒரு பழமொழி சொல்லுவார்கள் ”ஆந்த கோந்தயப்பார்த்துச் சொன்னதாம் நீ கருப்பு என்டு”

எஸ்.எல்.எம். நிஜமாகவே உண்மைதான் பேசுவாரா? என்று இப்போது சிவகுமாரன் கேட்பது நியாயமானதுதான்.

குங்கும வாசகர் ஹனிபா அவர்களே! இப்படித்தான் அஸ்ரப் ஷிஹாப்தீனிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டீர்கள், தினகரனில் தீர்க்கவர்ணம் பத்தியில் ஒரு கதை போட்டிருந்தார். குங்குமத்திலும் அது போன்றதொரு கதை வந்திருந்தது, உடனே அஷ்ரப் ஷிஹாப்தீனை மட்டந்தட்ட தாங்கள் பெருங்கண்டுபிடிப்பொன்றை நிகழ்த்திய தொனியில் அறியாமையில் ஏதோ கிறுக்கிவிட்டீர்கள், உங்களின் குங்கும உலகத்திற்கப்பால் இணையம் என்றொரு எல்லையில்லாத உலகம் இருப்பதை தாங்கள் அறியவில்லையென்பதை அஷ்ரப் ஷிஹாப்தீன் படிப்பித்தபின்னர்தான் அடங்கிப் போனீர்கள், ஹனீபா காக்கா இத்ரீசிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் நேரத்தின் பெரும் பகுதி அந்தக் கடையில்தானே கழிகிறது, புதிதாக ஒரு நாளைக்கு ஒரு விடயத்தையாவது கேட்டுப் படியுங்கள் ஹனிபா! அது உங்களை ஆரோக்கியமான நிலைக்கு இட்டுச் செல்லும்,

இப்போது முகப்புத்தகம் மட்டும்தான் உலகம் என்பதைத் தாண்டி இன்னுமுள்ள பரந்த அறிவுக்கடலின் பக்கம் உங்கள் பார்வையைத் திருப்புங்கள், சும்மா ஆடுமாடுகளின் படத்தையும் பேத்தி உஸ்கூலுக்குப் போற படத்தையும் தேங்கா மாங்காவின் படத்தையும் போட்டு காலங்கடத்துவது ஹனிபாவுக்குப் பொருத்தமில்லை, அறிவார்ந்த கருத்துக்களை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளப் பாருங்கள், நீங்கள் ஒவ்வொருவருக்கும் கடிதம் எழுதுவதை தனிப்பட்ட முறையில் எழுதுங்கள் அதை முகப்புத்தகத்தில் நீங்கள் போடுவதன் அரசில் ரொம்பக் கேவலம். கடிதம் என்பதே தனிப்பட்ட நபருக்கு எழுதுவதுதானே பகிரங்கமாகப் போடுவது அறிக்கை சார். கடிதம் என்ற பெயரில் முதுகு சொறியும் ஈனத்தனமான செயலை நீங்கள் செய்து கொண்டிருப்பது ஆரோக்கியமாகத் தெரியவில்லை. பரஸ்பரம் மாறி மாறிச் சொறிதல் பார்க்க சகிக்கவில்லை, அப்படித்தான் சொறிந்துதானாக வேண்டுமானால் கொஞ்சம் ஒதுக்குப்புறமாகச் சென்று சொறிந்து கொள்வது உத்தமம்.
புரவலர் ஹாஷிம் உமருக்குப் புத்தி சொல்ல உங்களுக்கு அருகதை கிடையாது சார். எழுத்தாளர்கள் எல்லோரும் புத்தகவியாபாரிகளாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் புரவலர் சிறந்த ஆறுதல்தான். இப்போது எழுதுகின்றவர்களுக்கும் புத்தகம் வெளியிடுகின்றவர்களுக்கும்தான் அதன் வலியும் கஸ்டமும் தெரியும், உங்களுக்கெங்கே புரியப் போகிறது. நமது நாட்டுக் கலாச்சாரப் பிரிவுகளை ஆக்கிரமித்து இருக்கும் வைரசுகள் எழுத்தாளர்களின் பிரச்சினைகளை எங்கே கருத்திற் கொண்டன? 

முடிந்தால் நீங்களும் ஒரு புத்தகம் போடுங்கள் அதிகம் வேண்டாம் 300 பிரதிகள் அச்சிட்டு அனைத்தையும் விற்றுக் காட்டுங்கள் பார்க்கலாம்! அப்போது விளங்கும் புரவலர் செய்யும் உத்தமப்பணியின் கனதி. ஏழு கோடித் தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டிலேயே காலச்சுவடு கூட பெரும்பகுதி புத்தகங்களில் 600 பிரதிகளுக்கு மேல் போடுவதில்லை, அடையாளம் மு.சாதிக் போன்ற அனுபவஸ்தர்களிடம் கேட்டால் சொல்வார்கள். தேர்ந்த சில படைப்பாளிகளின் பிரதிகள் மட்டும் பல்லாயிரம் தாண்டும் அப்படியிருக்க சில லட்சம் தமிழ் பேசும் மக்கள் வாழும் நமது தமிழ்ச் சூழலில் எங்கே? விதிவிலக்காக சில படைப்பாளிகளின் 1000பிரதிகள் இங்கு விற்றுத்தீரும். புரவலர் போல இன்னும் பத்துப் பேர் இருந்தால்தான் நிலைமைகளை ஓரளவு சரிக்கட்ட முடியும். அப்படியிருக்க புரவலர் செய்யும் தொண்டு தமிழுக்கு இழுக்கு என்று நீங்கள் போடும் கூச்சல் விநோதமானது. இப்போதைய சூழலில் ஒரு புத்தகம் போட்டுப் பார் புரியும்!


அடுத்தது ஜின்னாஹ்ஜரிபுத்தீன் பற்றிக் கருத்துச் சொல்ல அல்லது அவரை விமர்சிக்க தங்களுக்கு அருகதை கிடையாது  'முடிந்தால் தெஹிவலையில் இருக்கும் காப்பிகோ சென்டருக்கு ஒருதரம் விஜயம் செய்து பாருங்கள்' என்று அப்பட்டமாக ஜின்னாவின் வீட்டுக்குச்செல்வதைக் கூட கேவலமாகப் பேசும் உங்களுக்கு 

தமிழ் மிரரில் ஈனனுடன் ஓர் இலக்கியச் சமர் என்ற தலைப்பில் ஜின்னா எழுதியது.

காழ்ப்புணர்வு கொண்டொருவன் கதறினான் அந்தகோ
          காவியங்கள் படைப்பதனைக் கீழ்மையென் றோதினான்
வாழ்வினிலோர் வெற்றியையும் வரித்திலன் நலமென
          வையகமத் இல்லையெனில் வரிப்பனோ காதைகள்
கீழ்மகனின் பேச்சினையார் கருத்தினில் கொள்வரோ
          கையறுநி லையிலவன் கூக்குரல் செய்கிறான்
பாழ்பட்ட மனத்தினன் புத்திதடு மாறிய
          பிதற்றலினைக் அறிந்துநான் பாவமென் றெண்ணினேன்

காலத்தா லழியாத கோன்மைகொண் டுள்ளவை
          காவியங்கள் தானறிவாய் கீழ்மதிப் பித்தனே
ஞாலத்தில் நிலைப்பதுன் நரகத்துச் சால்வையோ
          சீலமிலா வுன்றனது சேதிகள் செப்பவோ
ஆலத்தை உண்டனைநீ ஆழத்தை அறிகிலாய்
          அடிவரையும் உதறுவேன் அறிந்துளேன் அனைத்தையும்
பாலுணர்வுப் பசிகொண்ட பச்சோந்தி மிருகமே
          பண்ணவனின் எதியுனைநான் பந்தாடு வேனறி

நாடுபல வென்றனது நற்றமிழை ஓர்ந்ததால்
          நாடினராம் பட்டங்கள் நல்கிடவே நானவை
தேடாது பெற்றவைகள் தெளிந்திடு மூடனே
          தமிழறிஞர் பலர்கூடித் தேர்ந்தளித்தார் தேர்ந்திடு
கூடாதே யுன்கரமக் கோன்மையின் தேறல்கள்
          கடைப்பிறப்பின் கடைமகனே கேளடா சொல்லுவேன்
தேடியென்றன் காவியங்கள் திறனாய்வு செய்பவர்
          தொகைநீளும் முனைவர்களும் சேர்ந்துளார் கொள்ளையே

மலைநோக்கிக் குக்கல்வாய் மொழிந்திலென் அஃதுபோல்
          நிலையுன்றன் நிலையின்று நான்மலை தானடா
சிலையினில் முட்டியுன்றன் சிரசினை அழிப்பயோ
          சொல்லடாநீ செய்ததென்ன தமிழுக்கு ஈனனே
எழுவானின் கதிரொக்கும் என்றமிழ்ப் படைப்புக்கள்
          எச்சிலையின் யாசகன்நின் எழுத்துக்கள் திருட்டுகள்
கொழுவாதே என்னிடமுன் கைகொண்ட சரக்கினை
          கட்டவிழ்த்து விட்டனெனின் கைச்சேதம் தேர்ந்திடு

என்று எழுதியதன் பின்னர்தான் பிரச்சினை கொஞ்சம் சூடுபிடித்தது. 

ஜின்னாவுடனான உங்கள் மோதலில் நான் எனது சொந்தப் பெயரில் நின்று கருத்தாடல் செய்ததை சிலரால் ஜீரனிக்க முடியாது போயிற்று போல, உங்களுக்கு முதுகு சொறியும் கூட்டம் பொன்னத்தனமாக போலிப் பெயர்களில் பின்னூட்டம் விட்டபோதெல்லாம் எதையும் நான் அலட்டிக்கொள்ளவில்லை, அதையெல்லாம் அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது, உங்களின் முதுகு சொறியும் கிருமிகளின் தாக்குதல்களுக்குப் பதில் கொடுக்க வேண்டிய அவசியமும் இருந்தது அதனால் அதைச் சுடச்சுடச் செய்ய வேண்டி வந்தது, நான் போட்ட பின்னூட்டங்களில் பலதை தமிழ்மிரர் பிரசுரிக்க வில்லை அதனால் நீங்கள் ஒன்றும்களிப்புக் கொண்டு திரிய வேண்டாம்.

அன்மையில் மணிப்புலவர் மருதூர் .மஜீத் வரலாறு தொடர்பில் ஒரு கட்டுரை எழுதியதற்காகநீங்கள் அடித்த பின்னூட்டம் இது.

 'நாற்பத்தைந்து வருடங்களாக மல்லிகையைப் பொறுமையோடு பார்த்து வந்திருக்கிறோம். பத்து வருட காலங்களாக ஞானத்தில் ஞானத்தைத் தேடி அலைக்கழிந்திருக்கிறோம். செங்கதிரையும் தாங்குவோம். அண்மையில் செங்கதிரில் மணிப்புலவர் மஜீத் ஈழத்து முஸ்லிம்களின் வரலாறு பற்றி எழுதியிருந்தார். அவர் புலவர் அவருக்கும் வரலாற்றுக்கும் ரொம்பத் தூரம். அவற்றைப் படித்து வெட்கப்பட்டேன்.'

இது போலத்தான் ஹனீபா நீங்கள் ஒரு பழைய கதைஞர் உங்களுக்கும் காப்பியத்திற்கும் ரொம்பத் தூரம். அதனால்தான் உங்கள் உரைகளைக் கேட்டுப் பலர் வெட்கப்பட்டுப் போய் நிற்கிறார்கள். நீங்கள் கூடக் கதைகளைப்பற்றிமட்டும் பேசி இருக்கலாம். காப்பியங்களைப்பற்றிப் பேச கொஞ்சம் கூட அருகதை கிடையாது. உங்களுக்கும் காப்பியத்திற்கும் ரொம்பத் தூரம், இது உங்கள் வார்த்தைகளில் இருந்தே நான் எடுத்துக் கொண்ட விடயம்தான்.

அத்தோடு டொக்டர் ஞானசேகரனைக் கூட இங்கே வம்புக்கிழுத்திருப்பதும் மல்லிகையை இழக்காரமாகப் பேசியிருப்பதும் ஏக காலத்தில் நடந்திருக்கிறது. ஏனய்யா இந்தக் கொல வெறி? 

உங்களின் ஞானமிக்க சீடர்களுடன் சேர்ந்து அற்புதமான ஒரு ஞானமலரை வெளியிடலாமே, அல்லது கனதிமிக்க ஆக்கங்களை எழுதி அவ்விதழ்களை மெருகூட்டலாமே, அதுவுமில்லை இதுவுமில்லையென்றால் என்ன இது? 

விமர்சித்துக்கொண்டும் கிண்டலடித்துக் கொண்டும் இருப்பதுதான் உங்கள் பொழுது போக்கா? அது ஆரோக்கியமல்ல ஹனிபா!

நீங்கள் பட்டானிச்சூ என்றொரு காப்பியம் படைக்கப்போவதாகவும் அதற்கு 2012க்கான விருது கிடைக்குமா எனறும் உங்களின் கிருமி ஒன்று கேள்வி தொடுத்திருந்தது, 

அப்போதே எனக்குத் தெரியும் இனி என்னைத்தாக்குவதுதான் உங்கள் இலக்கும் நோக்கமும். பின்னர் ஸாஜஹானின் முகநூலில் சொல்லியிருந்த செய்திகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய கடப்பாடு இருந்தது, 

ஹனிபா அவர்களே நீங்கள் பட்டானிச்சூ இல்ல பன்றிச்சூ காப்பியம் படைத்தாலும் அது தரமாக இருந்தால் நிச்சயம் விருது கிடைக்கும் வெளியீட்டுவிழாவை பூசாவையில் அல்லது வெளிக்கடையில் வைத்துக்கொள்வோம். சிறைச்சாலை ஆணையாளரை அல்லது புலனாய்வுத் துறை தலைமையதிகாரியை விழாவுக்கு அதிதியாக அழைப்போம். முதற்பிரதியை நானே வாங்கிக் கொள்கின்றேன். கொள்ளையடித்தில் மிச்சமிருக்காமலா போகப் போகிறது. 

இந்த இடத்தில்தான் உங்கள் சீடர் ஓட்டமாவடி அறபாத் உங்களுடன் இணைகின்றார். என்னைப்பற்றி மோசமாக நீங்கள் இருவரும் விட்ட பின்னூட்டங்களை ஒரு போதும் நான் படிக்க மாட்டேன் என்று கருதிக் கொண்டீர்கள் போலும். அறபாத் ஒரு மௌலவி அவருக்குக்கூட சில விடயங்களை ஆய்தறிந்து கருத்துச்சொல்லத் தோன்றவில்லை ஆனால் மிம்பர் மேடையில் ஏறினால் ஊருக்கான உபதேசம் களைகட்டும். 

உங்கள் இருவருக்கும் சேர்த்து ஒரு கவிதை சொல்லலாம் என்று கருதுகிறேன்
நீ எதை வேண்டுமானாலும் கொத்து
பறவாயில்லை
என்னை மட்டும் கொத்திடாதே
நான் பாலை மரம் கிடையாது
வெறும் வாழை மரம்
மானங்கெட்டவனே
நீ மரங் கொத்தி என்பதை மறந்திடாதே

இது வெறுமனே ஒரு சுருக்கமான குறிப்பு போன்றதுதான். சொல்ல வேண்டுமென்று தோன்றியது. சொல்லி விட்டேன். வேட்டைக்குப் பின் தொகுதியின் பின்னர்தான் அறபாத்தின் மீது அபிமானம் பிறந்தது. படைப்புத்தரத்தில் அறபாத்தை நான் மதிக்கிறேன் ஆனால் ஒரு மௌலவியாக இருந்து கொண்டு அறபாத் நடந்துகொண்டது தான் பிடிக்கவில்லை. எனது ஹராங்குட்டி சிறுகதைத் தொகுதிக்கு அறபாத் முன்னுரை வழங்கினால் பொருத்தமாக இருக்கும் என்று கருதினேன். காரணம் படைப்பாளி என்ற தரத்தில் வைத்திருந்த மரியாதை மட்டுமேஒரு காலத்தில் ஸர்மிலா செய்யித் இடம் புரொபஷல் கொடுத்து நிதியுதவி கேட்ட அறபாத் மௌலவி பின்னாளில் அனாரின் கவிதைகளைத் திருடி தொகுதி போட்டதாக பின்னூட்டம் அடித்து மானங்கெட்டதுகள் என்று வேறு திட்டியிருந்தார். ஆரம்பத்தில் இனித்த உறவுகள் பின்னர் கசந்து போனதா இந்த மனிதர்கள் எப்படியெல்லாம் மாறிக் கொண்டிருக்கிறார்கள் ஒன்றை மறைத்து இன்னொன்றைப் பெருப்பித்து எப்படியெல்லாம் படங் காட்டுகின்றார்கள். பழைய விசயங்கள் யாருக்கும் தெரியவராது என்று கருதிக் கொண்டுதான் இப்படியெல்லாம் செயற்படுகிறார்கள். இறால் போல சுத்தம் பற்றிய கொள்கைப் பிரகடனம் செய்யும் மேதாவிகள்.
என்னை ஒரு விடுதலைப்புலி உறுப்பினனாகப் பிரகடனப்படுத்திக் கொலைக் குற்றச்சாட்டுடன் சிறையில் தள்ளிய போது நான் அதிர்ந்து போகவில்லை. உண்மைகள் எதுவும் தெரியாமல் உலகம் ஆயிரம் சொல்லட்டும் எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. நானே மறைக்கத் துணியாத பல விடயங்களில் சில குறைபுத்திக் குரங்குகள் குதியாட்டம் போடுவதை வெறுமனே வேடிக்கை பார்க்குமளவுக்குப் பொறுமை கிடையாது. அதனால்தான் ஹனிபாவின் மேதாவித்தனத்தையும் அறபாத்தின் மேதாவித்தனத்தையும்  கொஞ்சம் உரசிப் பார்க்கவேண்டி வந்தது. எதுவாக இருந்தாலும் தைரியமும் நெஞ்சுரமும் முறுக்கும் இருந்தால் நேரடியாக என்னிடம் கேளுங்கள். மனசாட்சி இருந்தால் புனைந்த பொய்மையான உங்கள் பின்னூட்டங்களை நீக்குங்கள் அதல்லாத போதெல்லாம் உங்களின் பிறப்புவரைத் தகவல் தேடுவது தவிர்க்கவொனாதது. இது வேறு பிரச்சினை உங்களின் இலக்கியப் பதிவுகள் வேறு பிரச்சினை எனவேதான் இரண்டையும் குழப்பிக்கொள்ளக் கூடாது என்று நினைக்கிறேன். நீங்கள் நேர்மையாக இருக்கும்வரை என்னிடமும் நேர்மையை எதிர்பாருங்கள். நீங்கள் நேர்மை தவறும் போது நீங்கள் எதிர்பார்க்கும் தளத்தில் நான் இருக்க மாட்டேன். தூய்மையாக இலக்கியம் படைக்கும் போது எதற்கஞ்ச வேண்டும் யாருக்கஞ்ச வேண்டும்? சொல்லுக்கும் வாழ்வுக்கும் இடையே பிரள்வு வருகின்ற போதுதான் வார்த்தைகளை வாள்களாக்கிக் கொண்டு ஆதாரங்களைக் கேடயமாக்கிக் கொண்டு களத்திற்குதிக்க வேண்டியேற்படுகிறது.
நீங்கள் நியாயமாக உங்கள் பணிகளைச் செய்தால் உங்களைச் சேர வேண்டிய எல்லாம் நல்லபடி வந்து சேரும் சேதாரமின்றி. ஒவ்வொருவரின் படைப்புத்திறன் அவரவர் ஆற்றல், தூய்மை, அனுபவம், ஆளுமை என்பவற்றால் அமைவது யாரும் யாரையும் வீழ்த்திவிட முடியாது
இவ்வளவு காலமும் தயாபரனோ அல்லது வசந்தி தயாபரனோ தலைகுணியும் அளவுக்கு நடக்கவேண்டியளவுக்கு ஒன்றும் நடக்கவில்லை, உங்களுக்கும் ஏதோ பாவம் பழைய கலைஞன் கௌரவித்துவிடுவோம் என்று தகவம்  உங்களையழைத்தால் நீங்கள் ”பண்டித்தயா” வேலை பார்த்துவிட்டுச் சென்றுவிட்டீர்கள், கடைவியில் தகவம் சிலருக்கு மனம் நொந்திருந்தால் மன்னிக்கும்படி கடிதம் அனுப்புமளவுக்கு அவர்களுக்கு உபகாரம் செய்துவிட்டுச் சென்றுவிட்டீர்கள். குப்பைகளுக்குப் பரிசு கொடுக்கக் கூடாது என்றால் அதிசிறந்த கதைகளை எழுதுங்களேன் ஹனீபா வெளிவரும் புத்தகமெல்லாம் குப்பை என்றால் அதிசிறந்த புத்தகங்களை எழுதுங்களேன் ஐயா. அதையாவது மாதிரியாகக் கொண்டு புதிய தலைமுறை சிறந்த கதைகளைப் படைக்க முயற்சிக்க முடியும்
எஸ்.நளீமின் இலைதுளித்துக் குயில் கூவும் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் சோலைக்கிளிபற்றி உயர்வாகப் பேசிய நீங்கள் நிகழ்வு முடிந்து அவர் தூரமான போது அவரையும் விமர்சித்தீர்கள். அன்றைய உங்கள் உரையில் பலரை நக்கலடித்தீர்கள் அந்த வீடியோ இன்னும் என்னிடம் இருக்கிறது மறந்துவிடாதீர்கள். இனி அவற்றையும் கொஞ்சம் உன்னிப்பாக அவதானிக்க வேண்டியிருக்கிறது.
உங்களை ஒரு பேராளுமையாக மதித்மையால்தான் உங்கள் வீட்டுக்கே வந்து சிம் புரடக்ஷன் மூலம் நான் தயாரித்த தீ நிழல் படத்தினைத் திரையிட்டுக் காட்டினேன். உங்களின் ஆற்றல் வீணாகிவிடக் கூடாது என்பதற்காகவே உங்களின் பல உரைகளை வீட்டில்வைத்தே ஒலிப்பதிவு செய்தேன் அவற்றையெல்லாம் அப்போது வெளியிடாமைக்குப் பிரதான காரணம் பலரின் மனது புண்பட்டுவிடுமென்பதால்தான், ஆனால் இப்போது விளங்குகிறது உங்களின் பொழப்பே நக்கலடிப்பதும் நையாண்டி பன்னுவதும்தான் என்பது. உங்களுடன் நெருக்கமாக உறவாடிய பொழுதுகள் எல்லாமே வீணாணவைதான் என்று வருத்தமாக இருக்கிறது.
இதன் பின்னர் ஹனிபா என்பவர் குறித்து எனது நேரத்தை வீணாக்கக்கூடாது என்று கருதுகிறேன்