Saturday, March 8, 2014

இன்றைய தமிழ்ச் சங்க மகளிர் தின நிகழ்வுக் குறிப்பு

இன்றைய தமிழ்ச் சங்க மகளிர் தின நிகழ்வுக் குறிப்பு


நடுவில் நான்கு பெண்கள் இரு மருங்கிலும் இரண்டு ஆண்கள் அமர்ந்திருந்தனர். ஒரு பக்கம் தமிழ்ச் சங்கத் தலைவர் ரகுபதி பாலஸ்ரீதரனும் மறுமுனையில் ஓய்வு பெற்ற பொலிஸ் அத்தியட்சகர் அரசரத்தினம் அவர்களும் அமர்ந்திருந்தார்கள் 

அதாவது பெண்களுக்கு ஆண்கள்தான் நல்ல பாதுகாப்பு என்பதை மகளிர் தினச் செய்தியாகப் பிரகடனம் செய்யும்படியான மேடையமைப்பு. அடைப்புக் குறிகள் போல ஆண்களும் அதற்குள் பெண்களுமாக இருந்தது கவனத்தை ஈர்த்ததில் வியப்பில்லைதானே. ( 0 0 0 0 )

அடுத்தது எனது கணக்கெடுப்பின்படி இன்றைய மகளிர் தின நிகழ்வுக்காகக் கலந்து கொண்டவர்களில் 55 பேர் பெண்கள் 59 பேர் ஆண்கள் அப்போதும் பாருங்கள் மகளிர் தின நிகழ்வில் நான்கு ஆண்கள் கூடுதலாகக் கலந்து கொண்டு ஜமாய்த்திருக்கிறார்கள். இதெல்லாம் இந்தக் காலத்தில் யார் உன்னிப்பாக அவதானிக்கிறார்கள். 

ஆனால் பெண்ணுரிமை ஆணாதிக்கம் சமவுரிமைஇ என்றெல்லாம் பேசோ பேசென்று பேசிவிட்டு கணவனைக் கடுமையான தொனியில் அழைத்து பவ்வியமாக அவனுக்குப் பின்னால் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து செல்லும் கண்கொள்ளாக்காட்சியும் இன்று காணக் கிடைத்தது பாக்கியம்.

சட்ரூபவதி நாதன் அவர்களின் தலைமையில் பத்மா சோமாகாந்தனின் வரவேற்போடும் எழுச்சிக் கீதத்துடனும் ஆரம்பித்த நிகழ்வில் ஓய்வு பெற்ற பொலீஸ் அத்தியட்சகர் அரச ரத்தினம் உரையாற்றினார். அது பற்றிவிதந்து கூற வேண்டும். கலாநிதி அனுஸியா பேசிக் கொண்டிருக்கும் போது நானும் மனைவியும் அரங்கை விட்டு வெளியேறினோம்இ எங்களைத் துரத்திவிட்டதில் அரச ரத்தினம் ஐயாவின் பேச்சுக்குப் பெரும் பங்கிருக்கிறது. 

அப்போது ஒருவர் ஓடி வந்து வடை சாப்பிட்டு டீயும் குடித்துவிட்டுச் செல்லலாமே என்றார்இ 
'ஐயா மன்னிச்சுக் கொள்ளுங்கோ அந்தாள் ஓடிவந்து திரும்பவும் மைக்கைக் கைப்பற்றினால் பின்ன பொல்லாத கோபம் வந்துவிடும்இ அத விட ஒதுங்கிப் போறது உத்தமம்' என்று வெளியேறிவிட்டோம். அப்போது அவர் ஒரு சிரிப்புச் சிரித்தார் அந்த அழகை அரசரத்தினம் ஐயா பார்த்திருக்கவேண்டும். அந்த மனிசனுக்கு கொடுத்து வைக்கல்ல பாருங்கோ.

ஐயா அரச ரத்தினம் அவர்களே! உங்களுக்கு யாரோ பொய் சொல்லி உசுப்பேற்றி விட்டிருக்கிறார்கள். அதாவது நீங்கள் நல்ல நகைச்சுவையாகப் பேசுகின்றீர்கள் அது கேட்பதற்கு ஈர்ப்பாகவும் கலகலப்பாகவும் இருப்பதாக பச்சைப் பொய்யைச் சொல்லி உங்களைக் கிளுகிளுப்பாக்கி விட்டிருக்கிறார்கள். எல்லோரையும் போல நானும் அற்புதமாகப் பேசினீர்கள் என்று பொய்யாகச் சொல்லி இன்னும் உங்களை உசுப்பேற்றாமல் உண்மையைச் சொல்லி விடுகின்றேன். அதன் பிறகு உங்கள் இஷ்டம்.

பேசும் போது இரண்டு ஜோக் அடித்தால் அது நகைச்சுவையான பேச்சாக அமையாது. ஐயா உங்களுக்கு மேடைப் பேச்சு வரவில்லைஇ இன்று நீங்கள் பேசும் போது பல பெண்கள் உங்களைத் திட்டியது உங்கள் காதுகளை அடைந்திருக்க வாய்ப்பில்லைஇ அந்த மோசமான வார்த்தைகளைக் கேட்டால் சத்தியமாக இனி நீங்கள் சும்மா கூடப் பேசமாட்டீர்கள். 

நகைச்சுவை அடிப்பதாக நினைத்து நீங்கள் பலரின் மனதைப் புண்படுத்தி விடுகின்றீர்கள். பலரும் அதைச் சிரித்துச் சமாளித்துக் கடந்து செல்கின்றார்கள் என்பதற்காக அதை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்று கருதிவிடமுடியாதல்லவா. 

உங்களின் இன்றைய பேச்சில் நீங்கள் தடுக்கி விழுந்த பல இடங்களைச் சுட்டிக்காட்ட முடியும் அது தங்களை அவமானப்படுத்துவதாக அமைந்திடுமோ என்று அஞ்சுவதால் தவிர்ந்து கொள்கின்றேன். 

ஐயா ஓய்வு பெற்ற பொலிஸ் அத்தியட்சகரே மேடை இங்கிதம் என்பது மிக முக்கியமானதுஇ நமக்குத் தரப்பட்ட நேரத்திற்குள் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டு அமர்ந்து விட வேண்டும்இ அமர்ந்த பின்னர் வேறு விடயங்கள் பலதையும் சொல்லத் தோன்றும்இ அதற்காக மீண்டும் ஓடிப்போய் மைக்கைப் பிடித்துக்கொள்வது சிறுபிள்ளைத் தனம். 

எங்காவது அமர்ந்து தமாசாகப் பேசிக் கொண்டிருப்பதற்கு உங்களைவிட்டால் மிகப் பொருத்தமான வேறு ஆள் இருக்காது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். விழாக்களில் கலந்து கொண்டுவிட்டு பேசாமல் அமைதியாக இருப்பதே அந்த விழாவுக்கு நீங்கள் செய்யும் பேருபகாரம். தயவு செய்து இவற்றைக் கருத்தில் கொள்வீர்களா! 

கடைசியாக சைவ மங்கையர் கழக மாணவிகளின் அற்புதமான வில்லிசை நிகழ்வை ரசிப்பதற்கு கொடுத்துவைக்கவில்லையே என்ற கவலை இப்போதும் மனதை வாட்டுகின்றது. (நகைச் சுவையாகப் பேசி எங்களைத் துரத்திவிட்ட ஐயாதான் இதற்கும் பொறுப்பு)

அனைவருக்கும் மகளிர் வாழ்த்துக்கள்

உயிரோடு இருந்தால் அடுத்த மகளிர் தினத்தில் சந்திப்போம்

No comments:

Post a Comment