Friday, March 7, 2014

பௌத்த துறவிகள் ஏந்தும் ஆயுதம்

பௌத்த துறவிகள் ஏந்தும் ஆயுதம் 


பௌத்ததுடன் தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் விதைக்கும் போக்கு நீண்டகாலமாக இருக்கவில்லை. ஆனால் இப்போது மிகவும் அச்சுறுத்தும் தீவிரவாதப் போக்கை பௌத்தம் சூடிக் கொள்வது புத்த தர்தமத்தை அழித்துவிடவல்லது. 

கம்யுனிசத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் முதலாளித்துவ ஆதிக்கத்துக்கு இஸ்லாமியத் பயங்கரவாதம் தேவைப்பட்டது. முஸ்லிம் நாடுகளின் துணையுடன் அதை மேற்கு சாத்தியமாக்கி பயங்கரவாதத்தை உலகமெங்கும் தமக்குச் சாதக நிலைமையை உருவாக்கும் ஆயுதமாகப் பயன்படுத்தி கனிசமான வெற்றிகளையும் கண்டது.

சீயாக்களைத் தங்களின் திட்டத்துக்குப் பயன்படுத்தி வந்த சியோனிசம் 1979 தோடு அதில் நம்பிக்கையிழந்து 1985களின் பிற்பாடு ஸலபிக்களை தமது வலைக்குள் வீழ்த்தும் திட்டத்தில் மகத்தான வெற்றி கண்டது. அரபு ஆட்சியாளர்கள் சியோனிசத்தின் பிடியில் மௌனமாக இருக்க ஸலபி சிந்தனை உலகைக் கபளீகரம் செய்யும் பாரிய பயங்கரவாத விதையைச் சுமந்து கொண்டதை அறிந்திருக்கவில்லை.

பௌத்தத்தின் மீதான் பாரிய தாக்குதலாகவே பௌத்த துறவிகள் ஆயுதம் ஏந்துவதையும் இனவன்ம அழிப்பில் ஈடுபடுவதையும் கருதவேண்டியிருக்கிறது. பௌத்ததுறவிகள் ஆயுதம் ஏந்துவதையும் வன்முறையில் ஈடுபடுவதையும் அச்சத்துடன் பார்க்கத் தோன்றவில்லை மாறாக பரிதாபத்துடன்தான் பார்க்கத் தோன்றுகின்றது. போர்களே வேண்டாம் மனித ஊயிர்கள் அழிவதும் வேண்டாம் என்றுதான் அசோகச் சக்கரவர்த்தி பௌத்தத்தை உலகமெங்கும் பரப்பினான். அப்படிப்பட்ட அகிம்சைபொதிந்த தர்மத்திடம் ஆயுதத்தைத் திணித்துப் பார்க்கும் தந்திரம் மியன்மாரில் வெற்றியளித்தது இலங்கையிலும் அது வெற்றியளிக்கும் போது அது பௌத்தத்தின் மிகப்பெரிய தோல்விக்கான தோற்றுவாயாக அமையும்.

No comments:

Post a Comment