Saturday, March 8, 2014

ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-

ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-

என்ற தலைப்பில் கருணாகரன் தொடர் ஒன்றை எழுதி வந்தார் அதில் 04வது தொடரில் அவரிடம் கேட்கப்பட்டு இன்னும் பதில் கிடைக்காத கேள்விகள்.
00000000000

வாழ்த்துக்கள் கருணாகரன். புலிகள் தரப்பின் உள்வீட்டுச் சமாச்சாரங்கள் பெரிதாக எனக்குத் தெரியாது ஆனால் சாடைமாடையாக வந்தடைந்தவைகளைத் தொகுத்து வைத்திருக்கிறேன்.உங்கள் எழுத்து மிகத் தெளிவாக பலதையும் அலசிச் செல்சதையும் யதார்த்தத்தின் மீதே புனைவுகளற்றுப் பயணிக்கவும் முயற்சிக்கும் தன்மைக்காகப் பாராட்டுக்கள். முக்கியமான சிலவிடயங்கள் குறித்து தங்கள் நியாயமான கருத்துக்களை அறிய ஆவல்.
01. கிழக்கில்முஸ்லிம்களுக்கெதிரான யுத்தகாலத்துப் புலிகளின் நிலைப்பாடு
02.வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றமும் பின்னரானவையும்
03.ஹகீம்- பிரபா ஒப்பந்தம்
04.யுத்த நிறுத்த காலத்தில் முஸ்லிம்கள் பற்றியதான புலிகளின் நிலைப்பாடுகள்
05. பிராப-கருணா பிளவு
06.வெருகல்படுகொலை
07.கருணா அணி மீதான தாக்குதல்கள்(சரணடைந்தவர்களைக் கையாண்ட விதம்-கொல்லப்பட்டது எரிக்கப்பட்டது உட்பட)
08.முதூர்2006 கைப்பற்றப்பட்டமை
09.புலிகள் 2005 ஜனாபதித் தேர்தலைப் பிகஷ்கரித்தமை
10.கிழக்கு மாகாணத்தை இழந்தது
11. கிழக்கு மாகாண சபைத் தேரிதல்
12.கட்டம் கட்டமாகப் புலிகள் பின்வாங்கியதுஇ
13. இடையே நடந்த கருத்து மோதல்கள்
14.மக்கள் நிலைப்பாடு
15.கடைசி யுத்தம் நிறைவு வரை
16.கே.பி மற்றும் அவரது மகன்
17.முரண்பட்டுத் தளர்வடைந்த புலிகளின் சர்வதேசக் கட்டமைப்பு

இங்கு அதிக தகவல்களையும் தரவுகளையும் நிகழ்வுகளையும் பதிவுகளையும் இருபக்க இராணுவச் செயற்பாடுகளையும் திரட்டி விட்டேன். பல நேரடி அனுபவங்கள்இ

இப்போதுள்ள பிரச்சினை அவற்றை எழுத்த தொடங்கும் போது சில முரண்பட்டு இடித்துக் கொண்டு இருக்கின்றன.

வரலாறு பற்றிய பொய்யையும் போலியையும் சுவாரஷ்யமாக எழுதிவிட்டுப் புதினம் பார்க்க நான் தயாரில்லை. அதைச் சரியாகச் செய்ய வேண்டுமெனறு நினைக்கிறேன். உங்கள் எழுத்துக்களில் நம்பிக்கை துளிர்விட்டிருக்கிறது, நீங்கள் அளிக்கும் சில விடயங்களில்அடிப்படையில் எனது நிலைப்பாடுகளைச் சரி செய்து கொள்ளலாம் என்று கருதுகின்றேன்.
கட்டாயம் மின்னஞ்சலில் தொடர்புகளைப் பேணவும் என அன்பாய் வேண்டுகிறேன்.

முஸ்டீன்



No comments:

Post a Comment