வரலாறு எனக்காகக்
காத்திருக்க வேண்டும்
எனது சொல் வீச்சையும்
உறுதியான செயல் வீச்சையும்
எதிர் கொள்வதற்காய்
காலம் காத்திருக்க வேண்டும்.
உள்ளத்தைப் பட்டை தீட்டி
உறுதியாலும் நம்பிக்கையாலும்
அலங்கரித்து
பக்தியாலும் இறையச்சத்தாலும்
பதப்படுத்தி
அசையாத திடத்தோடு
இயங்கத் தொடங்குகையில்
கட்டமைக்கப்பட்ட வீண்களெல்லாம்
தூர்ந்து பறக்கும் தூசுகளாய்
அதென்றும் வெகு தூரமில்லை
காலம் காத்திருக்கத்தான் வேண்டும்
பகலில் போர்வீரனாயும்
இரவில் இறை சந்நிதானத்தில்
மனம்விடடுச் சிரம்பணியும்
அடிமையாயும் இருப்பதில் இஷ்டம்
துன்பமும் இன்பமும் சூழ் கொள்ள
என்னை நானே அளவிடுகிறேன்
பட்டை தீட்டி முடியட்டும்
பளிச்சென்று ஒளிக்கற்றை
பார்வைகளைப் பறித்துப் பிரகாசிக்க
எல்லோரும் பொருத்திருக்க வேண்டும்
வரலாறும் காலமும்
எனக்காக் காத்திருக்க வேண்டும்
இறைவனின் அடிமை
படை நகர்த்தி வருவதைக்
கண்டுகளிக்க
No comments:
Post a Comment