2003ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாகொல பாத்திமா கார்டன் பள்ளிவாசவில் தொழுகையை முடித்துக் கொண்டு தொலை பேசி அழைப்புக்காகக் காத்திருந்தேன்.
அக்கினிச் சுவாசம் எனும் பாடல் அல்பம் ஒன்றினைச் செய்வதற்காக ஜாமியா நளீமிய்யாவிலிருந்து ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் விடுமுறை எடுத்துக் கொண்டு இப்படி ஒவ்வொரு பிரமுகராகச் சந்திப்பது வழக்கம்.
எப்படி ஒவ்வொரு பிரமுகராகச் சந்திப்பது வழக்கம்?
அக்கினிச் சுவாசம் அல்பத்திற்காக எனக்கு பத்துப் பாடல்கள் தேவை 01.எஸ்.நளீம் 02.ஏபிஎம்.இத்ரீஸ் 03.அஸ்ரப் ஷிஹாப்தீன் 04. பாலைநகர் ஜிப்ரி 05. எம்கேஎம்.ஷகீப் 06.பஹீமா ஜஹான் 07.முல்லை முஸ்ரிபா 08.பைஸல் ஐயூப் 09.ரவுப் ஹஸீர் அடுத்து அதில் ஒன்றுஅஜ்வத் அலி மற்றும் நான்
ஆகியோர்தான் பாடல் எழுதுவதாக இருந்தது அதற்காக ஹஸீரைச் சந்திப்பதற்காக அவர் வீவரைச் சென்றுதான் அவரின் அழைப்புக்காக காத்திருந்தேன். நான் மாகொலைக்குச்சென்றிருந்த சமயம் அவர் இன்னும் வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை.
ஹஸீர் நல்லா உணர்வு பூர்வமா கவிதை எழுதுவார் அதனால் அவரிடம் ஒரு பாடல் கொடுத்துப் பாருங்கோ என்று சொன்னது அஸ்ரப் ஷிஹாப்தீன்தான்
அதிலிருந்து ஹஸீர் மீது ஒரு இனம் புரியாத பற்று.
அவர் வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதால் என்னை அவரது வீட்டில் இருக்கச் சொல்லி தகவல் கிடைத்ததும் அவர் வீட்டில் அவரது வருகைக்காகக் காத்திருந்தேன்.
காத்திருக்க வைத்தமைக்காக மன்னிப்புக் கோரினார் வந்த விசயத்தைப்பற்றி முழுமையாகக் கேட்டுத் தெரிந்து கொண்டார். ஒரே ஒரு பாடல் எழுதச் சொல்லி மெட்டும் கொடுத்தேன் மிகவும் சுவாரஸ்யத்துடனும் உட்சாகத்துடனும் அதை வாங்கிக் கொன்டு இலக்கியம் பற்றி நீண்ட நேரம் கலந்துரையாடினார், விரைவாகப் பாடலை எழுதித்தருவதாக வாக்களித்தார்
முஸ்லிம் சமூகம் குறித்தும் நீண்ட நேரம் உரையாடினார் அன்று பகல் போசனமும் அவர் வீட்டில்தான். அந்தச் சுவையான உணவுக்காக அன்று அவர் மனைவிக்குப்பாராட்டுச் சொல்லக் கிடைக்கவில்லை அதற்காக இப்போது நன்றியோடு அந்தச்சுவையான உணவுக்காக ஆயிமாயிரம் நன்றிகள் அந்தத் தாய்க்கு உரித்தாகட்டும். அதன் பின்னர் ஹஸீரோடு அடிக்கடி கதைத்துக் கொண்டேன்.
2004 ஆகியது தேர்தல் வந்து தொடர்புகளைத் துண்டித்து விட்டது.
பாடல் அல்பத்திற்காக பாட்டு எழுதித் தருமாறு வேண்டியதில் பைசல் ஐயூப் உடனடியாக அனுப்பிவைத்தார் பஹீமா ஜஹானும் குறித்த நேரத்திற்குத் தந்தார் ஜிப்ரி பல முறை பொய் சொல்லி பின்னர் என் கரைச்சல் தாங்காமல் எழுதியாயிற்று, மற்றவர்கள்யாராலும் பாடல் தர முடியாமற போயிற்று, ஹஸீரும் தரவில்லை...
எனக்குப் பொல்லாத கோபம் வந்தது. இவர்கள் யாருமே பாடல் தரவில்லை என்பதற்காகஅல்பம் வெளியிடும் முயற்சியைக் கைவிடும் எண்ணமில்லை
நேராக கோல் பேஸ் போனேன் இதமான காற்று அழைகளின் இனிய சங்கீதம் மெதுமெதுவாக ஆறுபாடல்களை எழுதி முடித்தேன் பின்னர் கனதியான வேலைப்பலு யாருடனும் தொடர்பு கொள்ளமுடியவில்லை,
அல்பம் வேலைகளும் மெதுமெதுவாக நிறைவுபெற்றது
2004.09.24 வெள்ளிக்கிழமை – கொழும்பு ஸாஹிரா கல்லூரி – அக்கினிச் சுவாசம் வெளியீட்டு விழா
ஜாமியா நழீமியா நிருவாகம் அதிரடி முடிவெடுத்திருந்தது, இந்த வெளியீட்டுவிழாவுக்குப் போகின்றவர்களை நழீமிய்யாவை விட்டும் விலக்குவதாக அறிவித்தது. அது எனது வகுப்புத் தோழர்களுக்காகன நேரடிக் கட்டளையாகவும் இருந்தது. எல்லாம் குழம்பிப் போனது இது குறித்து நிறைய எழுத வேண்டும் பின்னர் பார்ப்போம்.
ரவுப் ஹஸீருக்குத்தான் அக்கினிச் சுவாசத்தின் முதல் பிரதி கொடுப்பதாக இருந்தது, கட்டாயம் வருவேன் என்று சொன்னவர் வரவே இல்லை.
2012 கம்பன் விழாவில் சடுதியாக சந்திக்கக் கிடைத்தது, பெரிதாகப் பேசிக்கொள்ள அவகாசம் கிடைக்கவில்லை
2012.05.17 கொழும்புத் தமிழ்ச் சங்கம் - மௌனப் போரும் புன்னகை ஆயுதமும் எனது கவிதை நூல் வெளியீட்டு விழா
ஹஸீருக்கு அழைப்பிதழ் அனுப்ப அவகாசம் கிடைக்கவில்லை ஆனாலும் அவர் வந்திருந்தார். எனக்கு சந்தோசமாக இருந்தது, தகவலறிந்து வருகை தந்த அவர் மீது நல்லபிப்பிராயம் அதிகரித்தது.
2012.06.17 கொழும்புத் தமிழ்ச் சங்கம் - நிலவின் கீறல்கள் எனது மனைவியின் கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா
ஹஸீருக்கு கடைசி நேரத்தில் அலைபேசி மூலம்தான் அழைப்பு விடுக்க முடிந்து அப்போது அவர் சொன்ன பதில் 'நிகழ்வுக்கு இரண்டு மணித்துளிகளுக்கு முன்னால் அறிவித்தாலும் போதும் நான் வந்து விடுவேன்' அது போல அவரும் வந்தார் அவர் மீது எனக்கு இன்னும் நல்லபிப்பிராயம் அதிகரித்தது.
2012.06.30 கொழும்புத் தமிழ்ச் சங்கம் அஸ்ரப் ஸிஹாப்தீனின் ஒரு சுரங்கைப் பேரீச்சம் பழங்கள் மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா
ஹஸீர் கவிதை படிப்பதாக இருந்தது அதனால் அதைப் பார்க்கும் கேட்கும் ஆர்வம் மிகுதியாக இருந்தது, அதனால் ஒலிப்பதிவு செய்யக் கூட மறந்து போனேன்,
ஏற்கனவே மத்தளம் என்று அவர் முஸ்லிம் சமூகத்தின் அவல நிலைகளை முன்வைத்துப் பாடிய கவிதையொன்றை நவமணிப் பத்திரிகையில் படித்த ஞாபகம் அதற்காக அவரைப் பாராட்ட வேண்டும் என்று தோன்றியது, அவ்வளவு அழகாக சமூகத்தின் அவலநிலையைப் படம் பிடித்துக் காட்டியிருந்தார்.
சமூகத்தின் மீதான பற்று போலவே தமிழ் மீதும் அவருக்கிருக்கும் பற்று பலர் அறியாதது, அவரே எழுதிய குறிப்பொன்று 'நான் எனது மகளை தமிழ் மொழியில் உயர்தரம் கற்க வைத்துள்ளேன் தமிழையும் ஒரு படமாக எடுக்க ஆர்வமூட்டியுள்ளேன்' இப்போதுள்ள ஆங்கில மோகத்தில் ஹஸீரின் இந்த நிலைப்பாடு போற்றத் தக்கது காரணகாரியங்கள் இல்லாமல் ஆயிரம் பேர் தமிழில்கற்கலாம், தமிழுக்காக, தாய்மொழிக்காக, அதில் புலமை வேண்டும் என்பதற்காக லட்சியத்துடன் கற்பிக்கும் தந்தையும் தந்தையின் லட்சியத்தை அப்படியே மதித்து மனதார ஏற்றுக் கொண்ட மகளையும் பத்தோடு பதினொன்றாகக் கருதிட முடியாது, இப்படிப்பட்ட ஹஸீர் அன்று கவிதை பாடினார் மெய் சிலிர்த்துப் போனேன், அவர் கோபம் ஆத்திரம் எல்லாமும் நியாயமானது,
இந்தக் கவிதை பற்றியும் ஹஸீர் பற்றியும் அடுத்த பகுதியில் இன்னும் சுவாரஷ்மான தகவல்களுடன் சந்திப்போம் இன்ஷாஅல்லாஹ்.
-முஸ்டீன்-
No comments:
Post a Comment