Tuesday, July 31, 2012

கேர்ணலின் வாக்குமூலம்


கேர்ணலின் வாக்குமூலம்

கேர்ணல் லத்தீப் என்றால் அறியாதவர்களே இல்லை. அவர் ஒரு முரண்பாட்டின் சின்னம். அவரோடு யாரும் கதைப்பதில்லை. ஐந்து நேரமும் மழையானாலும் வெயிலானாலும் புயலானாலும் அவர் தொழுகைக்காக பள்ளியில் இருப்பார். அவரை சந்திக்க யாரும் வருவதில்லை. அப்படித்தான் சந்திக்க வேண்டுமானாலும் தொழுகை முடிந்து, எல்லோரும் சென்றுவிட்ட பின்னரும் கூட, பள்ளிவாயலின் உள்ளே, ஒரு தூணில் சாய்ந்து ஒருவர் யோசித்துக் கொண்டிருப்பார், அவரைத் தெரியாதவர் கூட இலகுவாக அடையாளம் காணலாம். அஸர்த் தொழுதுவிட்டால் நீண்ட நேரம் அவர் ஒரு மூலையில் தியானத்தில் இருப்பது போல இருப்பார். இப்போது அவருக்கு அந்த அமைதி தேவைப்பட்டிருக்கிறது. 
கேர்ணலைப் பற்றி எனக்கு நிறையக் கதைகள் கிடைத்தன. அவற்றில் எல்லாம் அவர் மிகமிகப் பயங்கரமான மனிதர். எனக்கு அந்த ஒரு நொடியில் சிந்திக்கத் தூண்டியது, 'அவர் பயங்கரமான மனிதர்' என்பதுதான். ஏன் அவர் பயங்கரமான மனிதர்? எப்படி அவர் அப்படி மாறினார்? அப்படி என்ன செய்து விட்டார்? அவரின் பயங்கரத்திற்கு பின்னால் ஏதும் நியாயம் இருக்குமா? சில வேளை எனது சமூகம் அவரைப் புரிந்துகொள்ள வில்லையா? அவரைச் சந்தித்துக் கதைத்துவிட வேண்டும் என்ற ஆவல் என்னுள் வேரூன்றியது.
அதற்கு முன்னர் அவரை நான் சந்திப்பது குறித்து, விசயம் அறிந்தவர்களிடம் ஆலோசனை கேட்டேன். எல்லோரும் சொன்ன ஒரே பதில். 'உனக்கெதற்கு தேவையில்லாத வேலை' அவர்கள் பதில் என்னைக் கொஞ்சம் சிந்திக்க வைத்தது. ஆயினும் அவரைச் சந்தித்து எல்லோரும் உங்களை பயங்கர மனிதனாக சொல்கிறார்களே ஏன்? என்று கேட்க வேண்டும் என  மனதில் தோன்றியது. சந்திப்பதென்று முடிவெடுத்தேன். அவர் பெயர் தெரிந்தளவுக்கு அவர் முகம் தெரியாது. கொஞ்சம் விசாரித்ததில் அவரை வாழைச்சேனை ஜூம்ஆ பள்ளிவாயலில் அஸர்த் தொழுகையின் பின்னர் சந்திக்கலாம் என்ற செய்தி உறுதியாகக் கிடைத்தது. தொழுகைக்கு விரைந்தேன். எல்லோரும் தொழுதுவிட்டு வெளியேறினார்கள். ஏற்கனவே எனக்குச் சொல்லப்பட்ட தூண் சமாச்சாரத்தை வைத்து நோட்டமிட்டுக் கொண்டிருந்தேன், எல்லோரும் சென்றுவிட்டபின்னரும் ஒருவர் கைகளிரண்டிலும் முகத்தைப் புதைத்தபடி தரையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் பார்வை எங்கும் அலைபாயவில்லை. மிகவும் சாவகாசமாக அமர்ந்திருந்த அவர் அதே அமைதியுடன் மெதுவாக எழுந்து கொண்டார், தன்னைச் சூழ உள்ள எதைப்பற்றியும் யாரைப்பற்றியும் கொஞ்சம்கூட அலட்டிக் கொள்ளாதவராக அமைதி குழையாமல் மெதுவாகவே சென்று தூணோடு சாய்ந்து அமர்ந்து கொண்டார். 
அவரை அடையாளப்படுத்திக்கொள்வது அவ்வளவு கடினமாக இருக்கவில்லை. முகமன் கூறி அவருக்கு முன்னால் அமர்ந்தேன். சத்தமேதுமில்லாமல் பார்த்தார். அந்த வெற்றுப் பார்வையை இலகுவாக என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. என்னை அறிமுகப்படுத்திக்கொண்டவனாக 
'உங்களோடு கதைக்க வேண்டும் முடியுமா?' என்று கேட்டேன். 
'என்னோடு கதைப்பதற்கு ஒன்றுமேஇல்லை' என்றார். 
அவர் என்னோடு கதைப்பதற்கு தயாரில்லை என்பதை அவரது முகபாவனை சுட்டிக் காட்டியது. அவரது பார்வை 'என்னை அமைதியாக இருக்கவிடு' என்பது போல என்னை மன்றாடி வேண்டியது. கொஞ்ச நேரம் அமைதி நிலவியது. அதைக் குழைத்தேன். 
'ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியவர் மண்ணுக்குள்ளே புதைந்து போன சேதி தெரியுமா?' பாடலைப் படித்தேன்.
அவர் என்னை விநோதமாகப் பார்த்தார், தமிழ் சினமாவில் வரும் பாடல்வரிகளை பள்ளிவாசலில் படித்தது பாவமான காரியமாகக்கூட தோன்றியிருக்கலாம், அதனால் அவர் என்னை அழுத்தமாகப் பார்த்திருக்கலாம், அல்லது தன்னைப் பார்த்து ஒருவன் நக்கலடிப்பது போல இப்படிப் பாடுகிறானே என்று நினைத்தபடி பார்த்திருக்கலாம், பார்வை என்னைவிட்டும் விலகவில்லை, அவர் பார்த்துக்கொண்டேயிருக்க நான், 
'கேர்ணல்...' என் உச்சரிப்பில் தனித்துவமான அழுத்தம் இருந்தது. அந்தப் பெயர் கொண்டு அவர்  நீண்ட நாட்களுக்குப் பின் அழைக்கப்படுவது அவரில் பரவசத்தை உண்டு பண்ணியிருக்க வேண்டும். சாய்ந்து அமர்ந்தார். 
'இப்போது உங்களுக்கு தேவைப்படும் அமைதி ஒன்றுமில்லாதவனுக்கு ஒருபோதும் தேவைப்படாது. உங்கள் முகத்தில் கவலையும் கைசேதமும், தெரிகிறது. மரணத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ஒருவனின் இருப்பு போன்றது உங்கள் இருப்பு... இந்த உலகமே போலி, நன்றி கெட்டது, என்று முடிவெடுத்தவன் எப்படி இருப்பானோ அப்படித்தான் எனக்கு நீங்களும் தெரிகின்றீர்கள். துரோகம் என்றால் என்னவென்பதை பலமுறை அனுபவித்த ஒருவனின் வேதனையின் படிமங்கள் உங்கள் முகத்தில் தெரிகிறது. இப்போது நீங்கள் பேசாவிட்டால் காலமெல்லாம் நீங்கள் மகா மோசமானவன்தான். சரி அப்படியே மோசமானவனாக இருந்து விட்டுப் போகட்டும் ஆனால் உங்களின் செயற்பாடுகளுக்கு பின் உங்களுக்கு ஒரு காரணமும் நியாயமும் இருக்க வேண்டும். அதைப் பற்றியாவது சொல்லுங்களேன். சில வேளை அது வரலாறாக கூடுமல்லவா?' என்றேன். 
எனது பேச்சு அவரை சிந்திக்க வைத்தது. அவர் என்னை நம்பினார். அவரது முகத்தில் மாறுதல் தென்பட்டது. மூச்சை பெரிதாக இழுத்து விட்டார். அவர் கண்கள் கலங்கின. கண்ணீர் எட்டிப்பார்த்தது. அவர் நொறுங்கிப் போனார். 
'உண்மைதான் உண்மைதான்' அழுதார் தேம்பித் தேம்பி அழுதார். அவர் சிறுபிள்ளை போல அழுதார். அவரால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நீண்ட நாள் தேக்கிவைத்திருந்த கண்ணீர். 
நன்றாக அழட்டும். அவர் அழுது முடித்து ஓய்விற்கு வந்ததும் அவரே கதைப்பார் என்று எதிர்பார்த்திருந்தேன். அரை மணித்தியாலம் அழுதார். அவர் சட்டை நனைந்திருந்தது. அது உண்மையான கண்ணீர். அது அவரை ஆறுதல்படுத்தும். அவர் நெஞ்சை அது அமைதிபடுத்தும். 
கண்களைத் துடைத்துக்கொண்டார். மீண்டும் பெரிதாக மூச்சை இழுத்து விட்டார். என்னை ஆழமாய்ப் பார்த்தார். அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன. அவர் முகத்தில் சாந்தம் தென்பட்டது. எனது கைகளைப் பற்றிக்கொண்டார். 
'நமது உரையாடலைப் பதிவு செய்யலாமா' என்றேன். 
எதைப்பற்றிய யோசனையுமின்றி தலையசைத்து அனுமதித்தார். 
ரெக்கோர்டரை இயக்கினேன். அது அனைத்தையும் அவரது வாக்குமூலமாக உள்வாங்கத் தொடங்கியது. 
'ஏன் உங்களை இந்த ஊர் ஒரு கெட்டவனாக பார்க்கிறது. 
'அறுபத்தொன்பது கொலைகள் செய்தவனை வேறு எப்படிச் சொல்லும்' 
'அறுபத்தொன்பதா? ... ஏன்? என்ன நடந்தது?'
'ஒவ்வொன்றும் பசுமையாக ஞாபகமிருக்கிறது. அதில் பத்துப் பேர் அப்பாவிகள். பதினொரு பேர் எமது தவறுகளால் விளைந்தது. மிகுதி எல்லாம் நியாயமானது. எங்கள் எதிரிகளுடையது...' 
'யார் உங்களின் எதிரிகள்...? 
புலிகள் ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்யத் துவங்கியது முதலும் முஸ்லிம்களைக் கொல்லத் துவங்கியது முதலும் அவர்கள் எமது எதிரிகள். அவர்களுக்கு எவ்வளவோ உதவி செய்த எங்களைச் துரோகிகள் என்றார்கள். எங்கள் மக்களைக் கொன்றார்கள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க என்னால் முடியவில்லை. அவர்களை எதிர்க்கத் தொடங்கினோம். எதிர்ப்பதென்றால் சும்மா விசயமில்லை என்பது பின்னர் விளங்கியது. எங்களை அவர்களிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஆயுதங்கள் தேவைப்பட்டன. ஆயுதம் வாங்க பணம் தேவைப்பட்டது. பின்னர் அவர்களுக்கு நாங்கள் பலமான எதிரிகளானோம். எங்களைக் குறி வைத்து கொல்லத் தொடங்கினார்கள். நாங்களும் அவர்களை குறிவைத்துக் கொல்லத் தொடங்கினோம். ஒரு கட்டத்திற்குப் பின்னர் எமக்கு ஆதரவளிப்போர், தகவல் தருவோர், எம்மைச் சார்ந்திருப்போர் எமது உறுப்பினர்கள் என்று வேட்டையாடத் தொடங்கினர். அதுபோல் நாமும் அவர்களது உறுப்பினர்கள், தகவளாளிகள், பணம் கொடுப்போர், அவர்களுக்கு உதவுபவர்கள் எல்லோரும் இனம் மதம் கடந்து எங்களுக்கு எதிரிகளாயினர், அவர்களையும் நாம் தாக்கினோம். நேரடியாக பெரும் யுத்தம் செய்ய எங்களால் முடியவில்லை. அந்தளவுக்கு பலமுமில்லை, தந்திரமாகத் தான் நாங்கள் அவர்களை எதிர்த்தோம், அழித்தோம். அவர்களுக்கு இராணுவத்தை எதிர்கொள்வதை விட எங்களை எதிர்கொள்வது பெரும் சவாலாக இருந்தது. எங்களிடம் பதினைந்து துப்பாக்கிகள் தான் இருந்தது. எங்களது பலம் இவ்வளவு தான் என்று தெரிந்தால் ஒரே நாளில் எங்களை அழித்துவிடுவார்கள். அதனால் ஆலோசனை செய்தோம். அப்போது இந்தியா இராணுவம் புலிகளுடன் பலமாகப் போரடிக் கொண்டிருந்த நேரம். நாங்கள் முடிவெடுத்தோம் பாகிஸ்தானில் இருந்து ஆயிரம் நவீன துப்பாக்கிகளும், ஆயுதங்களும் வந்திருப்பதாகவும், ஐந்நூறு பேர் பயிற்சிக்கு போயிருப்பதாகவும், இருநூறு பேர் பயிற்சி முடித்துக்கொண்டு வந்திருப்பதாயும் அவர்களுக்கு நம்பகமான வழிகளில் செய்தி அனுப்பினோம். அது திருப்திகரமான முறையில் வேலை செய்தது. ஒரு ரீட்டாவோடும் பத்து பதினைந்து தோட்டாவோடும் எல்லையில் தைரியமாக நின்றோம். பாகிஸ்தான் ஆயுதமும் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற வீரர்களும் அவர்களை கடுமையாக அச்சுறுத்தியிருக்க வேண்டும். அவர்கள் பதுங்கினார்கள். அது உண்மையா என்பதை மேலும் மேலும் உறுதிப்படுத்திக்கொள்ள முனைந்தார்கள். அது பொய் என்று கண்டுபிடித்தால் வரும் பிரச்சினையின் பாரதூரத்தை நாம் புரிந்து கொண்டோம். உடனடியாக பெரிய ஒரு தாக்குதல் நடத்தி அவர்களை இன்னும் அச்சம் கொள்ள வைக்க வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டது. அதுவும் அவர்களின் எல்லைக்குள் புகுந்து செய்யத் தீர்மானித்தோம்.
 எங்களுக்கு இரண்டு சவால்கள். ஒன்று இராணுவம், அவர்கள் கண்ணில் பட்டாலும் எங்களைச் சுடுவார்கள். அடுத்து புலிகள், அவர்கள் கண்ணில் பட்டாலும் சுடுவார்கள். புலிகள் மட்டுமல்ல தமிழ் டீம் எது கண்டாலும் சுடும். பெரிய ஒபரேஷன் செய்வது அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. இரண்டு மாதங்கள் தகவல் எடுத்தோம். ஆனாலும் அடிக்கடி கள நிலவரங்கள் மாறிக் கொண்டிருந்ததால் சரியாக எதையும் திட்டமிட முடியவில்லை. கும்புறு மூலையில் வைத்து ஆமியை அடிக்க சாமான்கள் நகர்த்தப் போகிறார்கள் என்று செய்தி கிடைத்தது. நாங்கள் முடிவெடுத்தோம். அதை மடக்கிப் பிடிப்பது என்று. பேத்தாலையில் இருந்து வாழைச்சேனையூடாக மீராவோடை போய் அங்கிருந்து கும்புறு மூலை நோக்கி நகர்வது என்பது அவர்கள் திட்டம். 
சாமான் நகர்த்துபவர்கள் போராடத் தயாராக இருக்க மாட்டார்கள். எப்படியாவது ஆயுதங்களைக் கவனமாக நகர்த்தி தாக்குதல் அணியிடம் ஒப்படைப்பார்கள். அவர்களை மீராவோடையில் வைத்து திசைதிருப்பி ஆற்றால் செல்லச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து இரண்டு தோணிகளையும் தயார் நிலையில் வைத்திருந்தோம். தமிழ் ஆட்;களே தகவல் தந்தார்கள். அவங்க முஸ்லிம் ஆட்களை வைத்து தகவல் எடுக்குக்கும் போது எங்களுக்கு தமிழாக்கள வச்சு தகவல் எடுக்கிறது பெரிய வேலையாகத் தெரியல, எல்லாத்தையும் கவனமாக அவதானிச்சோம். 
பேத்தாலையில் இருந்து வெளிக்கிட்டு திட்டமிட்டபடி சென்றார்கள். மூன்று மூன்று பேராக மொத்தம் பன்னிரெண்டு பேர். நாங்கள் எதிர்ப்பார்த்ததை விட மிகப் புத்திசாலித்தனமாக நகர்த்தினார்கள். ஓட்டமாவடியில் வைத்தே திசை திருப்பினோம். உடனடியாக இன்னும் மூன்று தோணிகளைத் தயார்படுத்தினோம். தோணிக்காரர்களை அவர்கள் எதிர் கொள்ளும் வண்ணம் உலாவ விட்டோம், நாம் எதிர்ப்பார்த்தபடி அவர்கள் மீராவோடையில் இருந்து ஆற்றைப் பயன்படுத்தத் தீர்மானித்தார்கள். எம்மால் தயார்படுத்தப்பட்டிருந்த தோணிகளையே பயன்படுத்தினார்கள். தோணிக்காரர்களும் அங்கால ஆமி நிக்கான் என்று அவர்களை எமது பொறிக்குள் கொண்டு வந்தார்கள். அவர்களைப் பிடிப்பது அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லை. 
பன்னிரெண்டு பேரையும் பிடித்தோம். ஆயுதங்களைக் கைப்பற்றினோம். அவர்களைக் கட்டிவைத்தோம். நிறைய ஆயுதங்கள், பத்துத் துப்பாக்கிகள். நிறையக் குண்டுகள், எல்லாவற்றையும் பாதுகாப்பாக எமது வீடுகளுக்கு நகர்த்தினோம். ஒருவனை மட்டும் உயிரோடு கண்ணைக் கட்டிக் கொண்டுபோய் இரவு வேளையில் பேத்தாளையில் விட்டோம். அவனிடம் நிறைய செய்திகள் அனுப்பினோம். 
அவர்களின் ஆயுதங்களை ஒன்றாகப் பரத்தி விட்டுச்சொன்னோம். இதெல்லாம் நமக்குத் தேவையில்லை. நம்மிடம் இருக்கும் பாகிஸ்தான் ஆயுதங்களே போதும். இதெல்லாம் தூக்கி ஆற்றில் எறிவோம். அப்போது தான் என்னை கேர்ணல் என்று அழைத்தார்கள். அன்றிலிருந்து நான் பாகிஸ்தான் கேர்ணல் ஆனேன். மற்ற பதினொரு பேரையும் என் கையாலேயே கொன்றேன். அவர்களுக்காக தோட்டாக்களை வீணாக்க நாங்கள் விரும்பவில்லை. ஆற்றில் மரங்கள் வளர்ந்து பெரும்பரப்பாக இருந்த புட்டிக்குள் புதைத்துவிட்டு நாங்கள் வெற்றியோடு சென்றோம். 
உயிரோடு போனவன் நிகழ்வுகளை அப்படியே சொல்லியிருப்பான். அதன் பின்னர் மிக நீண்டகாலமாக அவர்கள் எப்படி ஆயுதங்களை நகர்த்துகிறார்கள் என்பது எங்களுக்கு தெரியவில்லை. அத்துடன் இன்னொரு செய்தியையும் அனுப்பினோம். இனி எங்கள் ஆட்கள் மீது கை வைத்தால் நாங்களும் உங்கள் ஆட்கள் மீது கை வைப்போம் என்ற எச்சரிக்கையாக அது போனது. அதன் பின்னர் சிறிது காலம் கொஞ்சம் நிம்மதியாகத் திரிந்தோம். அவர்கள் ஊர்ப்பக்கம் வருவதில்லை. ஆனால் அந்த நிகழ்வுக்குப் பின்னர் ஊருக்குள் இருக்கும் நிறைய முஸ்லிம் தகவலாளிகளை அவர்கள் பணம் கொடுத்து உருவாக்கினார்கள். அதைக் கண்டுபிடிக்க எங்களுக்கு நீண்ட காலம் எடுத்தது. பணத்திற்காக அவர்கள் எங்களைக் காட்டிக் கொடுத்தார்கள். அப்படிக் காட்டிக்கொடுத்தவர்களின் வீடுகளை கொள்ளையடித்தோம். மிக அபாயமானவர்களை கொலை செய்தோம். ஏறாவூர், காத்தான்குடியில் இருந்தும் தொடர்புகளை வலுப்படுத்தினோம். 
ஒருமுறை காத்தான்குடியில் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் ஆறு பேரைப் பிடித்தோம். அந்த ஆறு பேரையும் எவ்வளவு விசாரணை செய்தும் எங்களுக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அவர்களில் ஒருவனை உயிருடன் விட்டோம். அப்போது அந்த அறுவரில் ஒருவன் கேட்டான் 'அண்ணே நீங்க யார்?' என்று. எங்களில் ஒருவன் சொன்னான். 'நாங்களாடா பாகிஸ்தான் ஜிகாத்டா... காக்கா மார்ர மேல்ல கை வெச்சா என்ன நடக்கும் எண்டு போய்ச் சொல்லு, பாகிஸ்தான் ஜிஹாத் இனி சும்மா இருக்காது என்டும் சொல்லு' ஆறு பேரில் ஒருவன் கொண்டு சென்ற செய்தி நன்றாக வேலை செய்தது. அத்துடன் அறுவரில் ஒருவனை மட்டும் உயிரோடு வைத்துக்கொண்டு மற்றவர்களை விடுவிக்கப்படப்போவனின் முன்னால் அறுத்துக் கொன்றோம். துப்பாக்கியைப் பயன்படுத்துவதில் அதன் சத்தம் எங்களைக் காட்டிக் கொடுத்துவிடும் என்பதால் அதைப் பெரும்பாலும் பயன்படுத்தாமல் வைத்திருந்தோம். அப்போது உயிரோடு இருந்தவன் சொன்னான். அந்த நாலு பேரும் அப்பாவிகள் என்று. நாங்கள் இருவர் மட்டும் தான் புலி என்றான். எங்களுக்குக் கவலையும் கோபமும் வந்தது. அவனை அடித்தே கொன்றோம். ஐந்து அப்பாவிகளை முதன் முறையாக கொன்றது வேதனையை உண்டு பண்ணியது. அதன் பின்னர் தகவல்களை மிகக் கவனமாக பரிசீலனை செய்தோம். எமது நடவடிக்கைகளில் நிதானம் வந்தது. இராணுவ அறிவு தேவைப்பட்டது. ஒரே நேரத்தில் இரண்டு எதிரிகளைச் சமாளிப்பது கடினம் என்பதால் இராணுவத்துடன் தொடர்புகளை வலுப்படுத்தினோம். 
'ஜிஹாத்துக்காரனுகள் என்றால் மிகப் பொல்லாதவர்கள்' என்ற நிலைப்பாடு எல்லா இயக்கங்களிலும் பரவின. இராணுவத்திடம் மாட்டினாலும் ஜிஹாத்துகாரன்களிடம் மாட்டிவிடக் கூடாது என்பதில் புலிகள் மிகமிக கவனமாக இருந்தார்கள். இஞ்ச புலி என்டு சொல்றது மத்த டீமுகளையும் சேத்துத்தான், எங்கட செயற்பாடுகள் மட்டக்களப்பைத் தாண்டி அம்பாரை திருகோணமலை என்று பரந்தது. அதற்கு இராணுவத்துட தொடர்புகள் பேருதவி புரிந்தன. 
சில அரசியல்வாதிகள் எமக்கு புதிய வகை ஆயுதங்கள் கிடைக்க ஏற்பாடு செய்தார்கள். அது மிகவும் பேருதவியாக இருந்தது. ஆனால் கவலையாக இருக்கிறது. அவர்களின் சுயநலன்களுக்காக எங்களைப் பயன்படுத்தினார்கள். பின்னர் தூக்கி எரிந்தார்கள். எங்கள் வேலைகளுக்காக கட்டுக்கட்டாகப் பணம் தந்தார்கள். நாங்கள் அவர்களுக்காக பாவம் செய்து விட்டோம். எங்கள் போராட்டமும் தொய்வு நிலைக்கு வந்தது. நிறையப் போராட்டக் குழுக்கள் தோன்றின. யார் யாரோ தோற்றுவித்தார்கள். புலிகளே தோற்றுவித்து நிறைய முஸ்லிம் குழுக்களை பணமும் ஆயுதமும் கொடுத்து பயிற்றுவித்தார்கள். எங்களுக்குள் நாங்கள் மோதிக்கொள்ளும் நிர்ப்பந்தம் வந்தது. இராணுவத்துடன் சேர்ந்த பலர் எங்களை எதிரிகளாக்கிக் கொன்றார்கள். ஒரு கட்டத்தில் எல்லா இயக்கங்களையும் அச்சுறுத்திய 'பாகிஸ்தான் ஆயுதங்களும், பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற வீரர்களும்' பலனற்றுப் போயினர். அது பொய் என்பதைப் புலிகள்  கண்டுபிடிக்க நீண்ட காலம் எடுத்தது. 
அதன் பின்னர் வேகமாக எங்களின் உறுப்பினர்களைக் கொன்றார்கள். காட்டிக்கொடுக்கும் கயவர்கள் எல்லாமே சோனி! கஞ்சா யாவாரத்துக்கும், கள்ள மர யாவாரத்திற்கும், கள்ள மாட்டு யாவாரத்திற்கும், மீன்பிடிக்க கடலுக்குப் போக தடையில்லாமல் இருப்பதற்கும், இந்தச் சோனிகள் எங்களைக் காட்டிக் கொடுத்தார்கள். இப்படிப்பட்ட 'புண்டாமக்களின்' வீடுகளில் புகுந்து கொள்ளையடித்தோம். சிலரைச் நாயைச் சுடுர மாதிரி சுட்டுக் கொன்றோம். எதுவும் பலனளிக்கவில்லை. ஒருவன் இல்லாட்டி இன்னொருவன் காட்டிக் கொடுத்தான். அதை எங்களால் நீண்ட காலம் சமாளிக்க முடியவில்லை. 
எங்களுடன் இருந்தவர்களுக்கு பெரிதாக எதையும் செய்ய எங்களால் முடியவில்லை. நிறையப் பேர் தங்கள் வசமிருந்த ஆயுதங்களை பணத்திற்காக விற்கத் தொடங்கினார்கள், சிக்கல் பெரிசாச்சு, அதனால் ஆயுதங்களை விற்றவர்களை குற்றவாளிகளாகப் பார்க்கவும் முடியவில்லை. எல்லாம் மாறியது. எல்லாருக்கும் நல்ல காலம் பிறந்தது. எல்லோரும் பணக்காரர் ஆனார்கள். நாங்க கொஞ்சப் பேர் ஒன்டுக்கும் வழியில்லாமப் போனோம், எங்களால் ஆயுதம் வித்து பொழப்பு நடத்த முடியல அத விட சாகிறது நல்லம் என்டு பட்டது, வார எல்லாக் கஷ்டத்தையும் பொறுத்துக் கொண்டு வாழ்றது என்டு முடிவெடுத்தோம், அப்படியே வாழத் தொடங்கினோம். 
ஒரு நாள் நான் வீதியில் வரும் போது என்னைக் காட்டி ஒருவன் மற்றவனிடம் சொன்னான். 'இந்தா போரான் ஊர நாசமாக்கிய களிசர' எனக்கு கோபம் வந்தது. அவனிடம் போனேன் அவன் நினைத்தான் அவன் சொன்னது எனக்கு கேட்காது என்று. அவன் அருகே நின்று கேட்டேன். 
'புன்டா மகனே இப்ப என்னடா சொன்னாய்' 
'நான் ஒன்டும் சொல்லல்லை' என்றான். 
'எனக்குக் கேட்டதுடா வேசாமகனே நீங்க ராவையில பொண்டாட்டிமாரோடு பயமில்லாம ஓக்கிறத்துக்கு நாங்க ஊர் எல்லையில விடிய விடிய தூக்கமில்லாம காவலுக்கு நின்டதுக்கு இப்ப கதைக்கிறீங்க... சொல்லுடா என்ன புன்டயடா நான் நாசமாக்கின பரவேசமகனே.. சொல்லுடா... சொல்லுடா.. நாயச் சுடுர மாதிரி சுட்டுத் தள்ளிப் போடுவன் ராஸ்கல்...' எனது எந்த கேள்விக்கும் அவன் பதில் சொல்லவில்லை. 
அவர்கள் இருவருமே வாத்திமார்கள். அந்த நிகழ்வு என்னை மிகவும் சிந்திக்கத் தூண்டியது. இரவெல்லாம் தூக்கம் வரவில்லை. எனது மனைவி மக்கள் இவர்களுக்கு நான் என்ன செய்து விட்டேன்?. அன்றிலிருந்து ஒவ்வொருவரினதும் தராதரங்களைப் பார்த்தேன். என்னை விட எல்லோரும் நான்றாய்த்தான் இருந்தார்கள். அவர்கள் படித்திருந்தார்கள். உத்தியோகம் பார்த்தார்கள். வீடு வாசல் இருந்தது. மூன்று வேளையும் நிம்மதியாய்ச் சாப்பிட்டார்கள். இப்படியெல்லாம் இருந்து கொண்டு எங்களை களிசரை என்கிறார்கள். இவர்கள் நல்லா இருப்பதற்காக நாங்கள் எமது முழு வாழ்வையும் நாசமாக்கிக் கொண்டோம். எங்கள் பிள்ளைகளுக்கு கல்வியைக் கொடுக்கவில்லை. ஆயுதங்களைக் கொடுத்திருந்தோம். 
அப்போது தோன்றிய யோசனையால்தான் அனைத்தையும் விட்டுத் தூரமாகினேன். ஒரு நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டேன். அது என்னை அமைதிப்படுத்தியது. எனது பிள்ளைகள் யாரையும் படிப்பிக்காமல் விட்டது நான் செய்த பெரிய தவறு. என்னைப் போல அவர்களையும் ஆயுதங்களுடன் எல்லையில் நிறுத்தியது அதை விடத் தவறு. ஒரு நாள் ஆத்திரத்துடன் எனது மகனிடம் சொன்னேன். 
'இந்த சமூகத்துக்கு நீ எதிரிடா உனக்கு எதையும் செய்யாமல் எல்லாவற்றையும் இந்த சமூகத்துக்கே செய்துவிட்டேன். நீ வாழ்வதற்குத் தேவையானதை இந்த சமூகத்திடம் இருந்தே பெற்றுக்கொள். இந்த சமூகத்துக்காக ஒரு நாளும் நன்மை செய்து விடாதே. இந்த சமூகம் உனக்கு ஒரு நாளும் நல்ல பெயர் தராது. நீ சாகும் வரை கெட்டவன் என்றே அழைக்கப்படுவாய். அதற்கு எனது பெயரையும் சேர்த்தே பயன்படுத்துவார்கள்' அதை அவன் வலுவாய் பற்றிப்பிடித்தான். அவன் செய்வது சரி என்று தான் எனக்குப் பட்டது. ஆனால் இப்போது கவலைப்படுகிறேன். நான் தவறு செய்து விட்டதாய். ஆத்திரத்தில் அவனுக்கு பிழையான வழியைக் காட்டிவிட்டதாய்  எனக்கு மன நிம்மதி தேவைப்பட்டது. யாரோடும் கதைக்கப் பிடிக்கவில்லை. கடைசியில்  சில ஆயுதங்களை வாழ்வதற்காக விற்றேன். சிலதை பொறுப்பாக இருந்தவர்களிடம் ஒப்படைத்தேன். எனது அமைதிக்காக பள்ளிவாசலைத் தேர்ந்தெடுத்தேன். அது எனக்கு நிம்மதியைத் தருகிறது. உலகில் செய்த பாவங்களுக்காக எனக்கு இங்கு தண்டனை கிடைக்கப் போவதில்லை. பாவமன்னிப்பாவது கிடைக்கலாமில்லையா? அது தான் பள்ளிவாசல் ஒரே துணை...' 
கேர்ணல் லத்தீப் தெளிவாக இருந்தார். 
அவர் மிகவும் நொந்து போயிருந்தார். 
அவரது இதயம் வேகமாக இயங்கியது. 
அவரது முகத்தில் ஒரு பிரகாசம் தென்பட்டது. 
எவ்வளவு பிரச்சினைகளுடன் இந்த மனிதன் வாழ்கிறான் என்று தோன்றியது. 
அவரைப் பார்த்துக் கேட்டேன். 
'உங்களுக்கு ஒரு அச்சுறுத்தலும் இல்லையா?' 
ஒரு ஏளனப் புன்னகையுடன் 
'மரணத்திற்காகத்தானே காத்திருக்கிறேன். என்னைப் புலியும் கொல்ல மாட்டான். ஆமியும் கொல்லமாட்டான். ஒரு சோனிதான் கொல்லுவான். எனக்குத் தெரியும் நான் ஏன் சாகிறேன் என்று... அவனுக்குத் தெரியாது, அவன் ஏன் என்னைக் கொல்கிறான் என்று... ஒன்று தம்பி நிச்சயம் என்னை துப்பாக்கித்தான் கொல்லும். சூரியன் மறைந்ததில் இருந்து அது உதிப்பதற்குள் எனது மரணம் நிகழும். அது விதி நானே இப்படி நடக்கும் என்று எழுதும்படி வாழ்ந்து விட்டேன். இறைவனும் அதைத் தடுக்க மாட்டான்'. 
'கொஞ்சம் கவனமாக இருக்கலாம் தானே' 
சிரிக்கிறார் சிரித்துக்கொண்டே இருக்கிறார். 
'எதற்காக? யாருக்காக? எதைப் பாதுகாப்பதற்காக? ஒன்றுமில்லை, எல்லாம் முடிந்து போயிற்று நான் எனக்கே பிரயோசனமில்லாதவன். இந்த கேடுகெட்ட சமூகத்துக்காக எல்லாவற்றையும் தொலைத்த ஒரு அதிஷ்டமில்லாதவன் ஒரு நல்ல மகனையாவது வளர்த்தெடுக்க எனக்கு அவகாசமில்லாமல் போயிட்டு அது எனது தலையெழுத்து நான் இப்படியே இருந்து சாக வேண்டியதுதான். ஒரு நாள் எனது மரணம் வீதி ஓரத்தில் நிகழும் எனது பிணம் ஊரார் புதினம் பார்க்கும் படி கிடக்கும்'. 
அவர் வார்த்தைகளில் உறுதி தொனித்தது. 
மரணத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு ஞானியின் தெளிவு அவரை ஆட்கொண்டிருந்தது. 
அவரின் இப்போதைய திருப்தி தொழுவதிலும் பள்ளிவாசலில் அமைதியாக அமர்ந்திருப்பதிலும் மரணத்தை எதிர்பார்த்து வீதியில் நடப்பதிலும் தான் இருந்தது. 
அவர் மரணத்தை அச்சத்தோடு எதிர்பார்க்கவில்லை. தைரியத்தோடே அதை எதிர்கொள்ள காத்திருந்தார். 
'என்னிடம் நிறையக் கேள்விகள் இருக்கின்றன. அவற்றுக்கு நீங்கள் தெளிவாக பதில் சொல்ல வேண்டும். இப்போதல்ல இறைவன் நாடினால் இன்னொரு நாள்' 
தலையசைத்தார். 
'இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்' என்றார். 
ஒரு தகவலுக்காக சொன்னேன். 
'உங்களோடு சம்பந்தப்பட்டவர்களின் பெயர் விபரம், இப்போது  அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? உங்களுக்கு தெரிந்த வகையில் இங்கு யார் யாரிடம் ஆயுதம் இருக்கிறது? யார் யாரெல்லாம் ஆயுத வியாபாரம் செய்கிறார்கள்? இந்த சமூகத்தின் நலனுக்காக நீங்கள் சொல்ல வேண்டும். அது எதிர்கால சந்ததிக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை நாம் பரிசளிக்க உதவும் சொல்வீர்களா?' 
அவர் யோசித்துக்கொண்டிருந்தார். 
'உங்களைப் போல் இன்னொரு கேர்ணல் இந்த சமூகத்தில் உருவாகி விடக் கூடாது என்று நினைக்கிறேன்' 'கட்டாயம் கட்டாயம் சொல்கிறேன்' என்றவர் உடனே 
'இதெல்லாம் திரட்டி வேலை செய்யப் போனால் உன்னைக் கொன்று விடுவார்களே' 
'உங்களைப் போல் தான் நானும் மரணத்துக்கு அஞ்சவில்லை. எனது தந்தையும் வீரச் சாவடைந்தார். நானும் வீரச் சாவுதான் அடைய வேண்டும் என்று எழுதியிருந்தால் அதை யார் மாற்ற முடியும். எனது ஆயுதம் இதுதான். இன்னும் இது போன்று பல்வேறு ஆயுதங்கள் இருக்கின்றன' 
என்று பேனையையும் ரெகோடரையும் கெமராவையும் காட்டினேன். 
நீண்ட காலத்திற்குப் பின் அவர் மனம் விட்டுச் சிரித்தார். 
'இதனால் உயிரைக் கொல்ல முடியாது. ஆனால் தலை விதியை மட்டுமல்ல ஒரு சமூகத்தையே மாற்ற முடியும். இரத்தம் சிந்தாமல்' என்றேன் 
'உலகம் மாறி விட்டது நீங்களாவது புத்திசாலிகளாக இருங்கள். எங்களைப் போல வழி தவறிவிடாதீர்கள்' 
'எனக்கு முதல் உங்கள் மரணம் நிகழ்ந்தால் நிச்சயம் அதில் நான் கலந்து கொள்வேன் அதை வீடியோவும் எடுப்பேன்' 
'தம்பி வேண்டாம் நான் ஒரு நல்ல முன்னுதாரணமாக இருந்தால் பரவாயில்லை. நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று மரணச் சடங்கில் நீ கலந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கக் கூடாதென்று' 
'அதை இறைவன் தீர்மானிக்கட்டும்' விடைபெற்றேன். 
எனது சமூகம் இன்னும் எத்தனை கேர்ணல்களைச் சுமந்து நிற்கிறதோ என்று மனது கனத்துப் போனது. இதெல்லாம் மாறும்  நிச்சயம் மாற்றப்படனும்,
தூரத்தில் இருந்து விமர்சிப்பவர்கள் இதையெல்லாம் சீர்திருத்தக் கூடாதா கேள்விகளுக்கு மேல் கேள்விகளும் பதில்களுமாய் மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது.
0  0   0
மீண்டுமொரு நாள் கேர்ணலை சந்தித்தேன், எனக்காக அவர் நிறையத் தகவல்களைச் சேகரித்து வைத்திருந்தார் அனைத்தையும் அவர் குரலிலேயே பதிவு செய்து கொண்டேன்.
விடைபெற்றுக் கொண்ட போது என்னைக் கட்டித் தழுவி 'முஸாபஹா' செய்து கொண்டார். 
மறுநாள் அதிகாலை செய்தி வந்தது. 
சுபஹத் தொழுகைக்காக சென்று கொண்டிருந்த கேர்ணல் லத்தீபை வீதியில் யாரோ சுட்டுக் கொன்று விட்டார்களாம். அவர் சொன்னது போல் அவரது பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொண்டான் போலும் அவர் ஜனாசாவில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. 
இந்த ஆயுதங்களுக்கு முடிவு கட்டாமல் ஓய்வதில்லை என்றும் முடிவெடுத்துக்கொண்டேன். 
சில மாதங்களின் பின்னர் கேள்விப்பட்டேன் 
கேர்ணல் லத்தீபின் மகனின் கொள்ளைக் கோஷ்டி ஆயுதங்களுடன் பிடிபட்டதாம் என்று, 
நான் நினைத்துக்கொண்டேன், அவர் பெயரைச் சொல்லியே அவர் மகன் தூற்றப்படுவான் என்று அவர் சொன்னது உண்மையானது. 
இந்த சமூகத்தால் பராமறிக்கப்பட முடியாத அவர் மகனை அரசாங்கம் பராமறிக்கப் பொறுப்பேற்றுக்கொண்ட திருப்தி. 

நான் கேர்ணலின் பதிவு செய்யப்பட்ட உரையாடலை மீண்டுமொரு முறை கேட்டு எழுதத் தொடங்கினேன்.

1 comment:

  1. புக்காரி (5​:268)”நபிகள் நாயகம் இரவு நேரத்திலும்,பகலிலும் தனது 11 மனைவிகளுடனும் மொத்தமாக உடலுறவு கொள்கிறாரே,அவருக்கு அதற்கேற்ப சக்தி இருக்கிறதா ?” என்று நான் அனாஸிடம் கேட்டேன்.”அவருக்கு 30 ஆண்களின் பலமிருக்கிறது ” என்று ஆனாஸ் பதிலளித்தான்.

    அலி இப்னு ஹுஸம் அல்டினால் (மற்றொரு பெயர் :அல்-முதக்கி அல்-ஹிண்டி) எழுதப்பட்ட,கன்ஸ் அல்-உம்மல்(தொழிலாளிகளிம் சொத்து) என்ற நூலில்,’ பெண்கள் விஷயம் ‘ என்னும் அதிகாரத்தில்,முகமது ஒரு பிணத்துடன் உடலுறவு வைத்துக்கொண்டான் என்று போட்டிருக்கிறது…இந்த நூல் ஹடித்துக்களை ஆதாரமாகக் கொண்டது..இந்த நூலின் பழைய ,காண அரிதான ஒரு பகுதி,அயர்லாந்தில் உள்ள chester beatty நூலகத்தில் உள்ளது….இனி,இதில் என்ன போட்டிருக்கிறதென்று பார்ப்போம் : ” இவள் (பாத்திமா,அலியின் தாய்) சொர்கத்தின் ஆடைகளை அணிய,நான்(முகமது) எனது ஆடைகளை இவளுக்கு அணிவித்தேன்,இவளின் பிணத்தின் அழுத்தத்தை குறக்க,இவளின் பிணத்தின் அருகில் படுத்தேன்.அபு தலிபுக்கு அடுத்து,இவள் தான் எனக்கு அல்லாவால் கொடுக்கப்பட்டவர்களில் சிறந்தவள் ” ….இட்தாஜாத் என்னும் அரபு சொல் ,பொதுவாக உடலுறவு வைத்துகொள்ள கீழே படுப்பதை குறிக்கும்..முகமது இவளின் பிணத்துடன் உடலுறவு வைத்துக் கொண்டதால்,இவள் நம்புபவர்களின்(முஸ்லிம்கள்) தாயாக நினைக்கபடுகிறாள்……இவன் ஏன் படுத்தானென்றால்,இறுதி நாளுக்கு கத்திருக்கும் வரை,ஒரு பிணம்,இடுகாட்டில் சித்திரவதைக்கு உட்படும் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை….ஆதலால்,இந்த பாத்திமா இந்த சித்ரவதைக்கு உட்படாததற்கு,இவன் இவளுடன் படுத்தானாம்….இந்த வரியில் “அழுத்தத்தை குறைக்க” என்பது முகமது,இவளின் பிணத்துடன் உடலுறவு வைத்துகொள்வதால்,இவள் சித்ரவதைக்கு உட்படமாட்டாள்,ஏனென்றால்,இவள் முஸ்லிம்களுக்கு தாயாக ஆகிவிட்டாள் (முகமது இவளுடன் படுத்ததால்) என்பத குறிக்கிறது …அதுவும் இவன் தனது இறந்த அத்தையுடன் உடலுறவு வைத்து கொண்டான்…

    இந்த ஹீன காமுகன் தான் இஸ்லாத்தின் இறை தூதனாம்.நல்ல கேலி கூத்து.சிவ பெருமானின் பக்தனான கிருஷ்ணனை பற்றி ,இந்த மட்டமான முகமதியர்கள் வாய் கூசாமல் ‘காமுகன்’ என்றும் ‘இஸ்திரி லோலன்’ என்றும் சாடுகிறார்கள்.ஆனால்,தங்கள் நிலையை இவர்கள் நினைத்து பார்க்கவில்லை போலும்.அல்லது தெரிந்தும்,தெரியாததுபோல் இருக்கிறார்களோ ?இந்த இந்துக்களுக்கு,இதெல்லாம் தெரியாது,நாம் மூடி மறைத்து விட்டு,இந்து மதத்தையே தாக்கி,அவர்களை குல்லா போட வைத்துவிடுவோம்,என்று நினைத்துகொண்டிருக்கிறார்கள்.பூர்வ கால சரித்திரங்களான புராணங்களும் இதிஹாசங்களும் உண்மையாகவே நடைபெற்ற சம்பவங்களைக் கொண்டே வேத வியாசர் உருவாக்கினார்.அதில் சில சம்பவங்கள் ஆபாசமாக வேளியே தோன்றினாலும்,உள்ளே தோண்டி பார்த்தால், பல உண்மைகள் நமக்கு தென்படும்.ஆனால் காட்டுமிராண்டி மதமான இஸ்லாத்தை சேர்ந்த முகமதியர்களோ இவை ஆபாசமென்று சுட்டிகாட்டிவிடுவார்கள்.அதன் உட்பொருள் அவர்களுக்கு தெரியாது,தெரியவும் போதிய அறிவு இருக்காது.முகமதியர்களுக்கும் அறிவுக்கும் நிறைய தூரம்,ஏனென்றால் குரானே அறிவியலுக்கு பொருத்தமில்லாது பல கூற்றுகளை உள்ளடக்கியது.குரான் பொதுவாகவே வறட்டு தத்துவங்களை போதிக்கும் நூல்.பசுமையில்லாத,வறட்டு பாலைவனத்தில் தோன்றிய மதம் வேறு எப்படி இருக்க முடியும் ?இந்த வறட்டு தன்மை,பெரும்பான்மையான முஸ்லிம்களுக்கு பொதுவாகவே இருக்கும் ஒரு குணம்.இஸ்லாத்தில் புதுசாக புகுந்தவர்களுக்கும் இந்த குணம் இயல்பாகவே வந்துவிடும்.ஒரு காமுகனை இறை தூதனென்று சொல்லும் இஸ்லாமியர்களை என்ன வென்று சொல்வது.குரானிலும் ஹடித்துக்களிலும் பல ஆபாசமான சம்பவங்கள் இருக்கின்றன.ஆனால்,வேத மத புராணங்கள் இதிஹாசங்களை போல் அல்லாமல்,இந்த ஆபாசமான சம்பவங்களுக்கு பின் எந்த தத்துவமும் இல்லை.இந்த ஆபாசமான வரிகளைத்தான் முகமதியர்கள் இறைவனின் வாக்கென்று தலைக்கு மேல் வைத்துகொண்டு கொண்டாடுகிறர்கள்.ஆதலால்,காமுகனான முகமதுவை தேவ தூதனென்று சொல்வது எவ்வளவு பெரிய தப்பென்று தெரிந்து கொள்ள,நாம் நம் தலையை போட்டு உடைத்துக்கொள்ள வேண்டாம் .ஏனென்றால்,அதான் குரானும் ஹடித்தும் இருக்கவே இருக்கின்றன.அவைகளிலிருக்கும் சில வரிகளே போதும்,இந்த முகமது ஒரு காம வெறி பிடித்த மிருகம் என்று நிரூபிக்க.

    ReplyDelete