Sunday, June 24, 2012

மதிப்பிழந்து...



சாலையோரத்தில்
சங்கீதக் கச்சேரி
நடாத்தியது
பிச்சைக்காரன்
அவன் பாடல் வயிற்றுப்பசிக்கானது
அவன் இசை வயிற்றுப்பசிக்கானது
அவனது புல்லாங்குழல் அழுதது
அவனுக்காக அது...

அவனும் கலைஞன்
குசேலர் போல
பாவம்
ஒருபிடி அவலுக்கேனும் வழியில்லாதவன்.

அச்சம் நிறைந்த இரவுகள் அவனுக்கானது
ஒரு நாள்
அதுவும் மிக விரைவில்
கோரமான சாவு
அவனுக்காகக் காத்திருக்கிறது

ஒரு சர்வதேச மாநாடு நடக்க வேண்டும்
அப்போது
பாராங்கல் ஏந்திய எமன்
மநநோயாளியாய் உருக்கொண்டிருப்பான்.

பாவம் அவன்
நல்ல கலைஞன்
பிச்சைக்காரனாய் உலாவரும் பரிதாபமான...
விருதுக்காகவேனும் பரிந்துரைக்கப்படாத
புகழேதுமில்லாத பழைய கடதாசி போலாய்...

பின்னரும்
எந்த அரசியல் நீட்சியின் எச்சம்
அவனைத்தொடர்கிறது
அவிழ்க்கப்படாத பல புதிர்கள் போல

முஸ்டீன்
04.06.2012

No comments:

Post a Comment