Tuesday, June 26, 2012

சிறைக்கூடம் + கைதி




தோல்விகளை நோக்கியே
நகர்ந்து கொண்டிருக்கும் பொழுதுகள்
புன்னகைத்துக் கொண்டன
நாளைகள் மீது எதிர்பார்ப்பற்ற
மனிதர்களைப்பார்த்து
அவர்கள் சாகும் வரை வாழ்கின்றனர்
சாவதற்கு தயாரில்லாதவர்களாய்
மரணத்தில் இஷ்டமில்லாத மனதுகளுக்கு
வாழ்க்கை வசதிகள் கூட வசப்படவில்லை
மணிச்சப்தம் இயக்கும்
வரட்சியான வாழ்வு
உயிரோடு இருக்கிறார்கள்
அவ்வளவுதான்
அரச மதிப்பீடு.
ஒரு திருடன் கொள்ளைக்காரனாகவும்
ஒரு கொள்ளைக்காரன்
மகா கொள்ளைக்காரனாகவும்
பயிற்றப்படுகிறான்.
சட்டமும் அதிகாரிகளும் கேள்விக்குறிகளாய் மாற
அவன் உயர்ந்து செல்கிறான்
சட்டவிரோதமாக

ஆசான்களை மிகைத்து
அடிப்படைகளைத் தகர்த்து
தன்னைத் தக்கவைத்திடும் அவனை
இறுக்கமான சட்டங்களாலும்
கட்டுப்படுத்த இயவில்லை

அவனைப் பொருத்தவரை
அவன் எப்போதும்
சரியாக வாழ்கிறான்
அடுத்தவர் கண்ணீரில்.

No comments:

Post a Comment