நீ
வார்த்தைளால் தகர்த்துவிட்ட
எனதுள்ளத்தைச் செப்பணிட
இன்னமும் முடியவில்லை
உண்மைகள் உறங்கிப் போக
போலிக்கு எத்தனை மவுசு
ஒரேயொரு
வாழ்க்கைத் தத்துவம்
நன்றாகப் புரிந்து போயிற்று
உண்மைகளைக் கிடப்பில்
அப்படியே போட்டுவிட்டு
ஒரு நடிகனாக
வாழ்ந்துவிட்டுப் போகலாமென்று
அப்போது
நீ
தகர்ப்பதற்று ஏதுமிருக்காது என்னிடம்
இல்லாதததை இருப்பதாகக் கொண்டு
மனநிறைவோடு திருப்திப்பட்டுக் கொள்வாய்
இனி நான்
நடிப்பதற்கு மட்டும்
கற்றுக் கொள்ள வேண்டும்
No comments:
Post a Comment