Saturday, June 18, 2016

புரொய்லர்களால் ஆளப்படும் ஜம்இய்யதுல் உலமா சபையும் உலக அரசியலும் - 2

புரொய்லர்களால் ஆளப்படும் ஜம்இய்யதுல் உலமா சபையும் உலக அரசியலும் - 2
முஸ்டீன்

கடந்த வாரம் இக்கட்டுரையின் முதல் பகுதியை பதிவேற்றியிருந்தேன். குறிப்பிட்டசில நண்பர்கள் மாத்திரம் தமது ஆதங்கத்தினைப் பகிர்ந்து கொண்டார்கள். ஊடகவியலாளர் தாஹாமுஸம்மில மாத்திரம் கட்டுரையிலேயே தனது கருத்தினைப் பதிவு செய்திருந்தார். அதிலும் ஒரேயொரு விடயம் தொடர்பில் மாத்திரம் அவரது பின்னூட்டம் அமைந்திருந்தது. தொடர்பு கொண்டு பேசியவர்கள் குறிப்பிட்ட விடயங்களில் இருந்து அவர்கள் முன்வைத்த ஆதங்கம் அல்லது விமர்சனம் ஆகியவற்றிலிருந்து இப்பகுதியை எழுதலாம் என்று நினைக்கின்றேன்.
எழுதிவிட்டு பதிவேற்றுவதா இல்லையா என்று யோசித்து பதிவேற்ற சிலமாதங்களாயிற்று  இருந்தாலும் காலங்கடந்துவில்லை.

குறிப்பாக ஜம்இய்யதுல் உலமாவை இந்தளவுக்குக் கிண்டலடித்து விமர்சிப்பதைத் தவிர்க்கலாமே.
உலமா சபைக் கட்டமைப்பில் உங்களுக்கு என்ன பிரச்சினை
இப்போதைய சமூகவீழ்ச்சிக்கு ஜம்இய்யதுல் உலமா மட்டுமே பொறுப்பேற்க முடியுமா?
நிலமையைக் கையாள உலமா சபைக்கு ஆலோசனை வழங்கலாமே
கட்டுரை மிதமிஞ்சி அச்சுருத்துவதாகத் தெரிகின்றது.
ஐஎஸ்ஐஎஸ் துருக்கியை இலக்காகக் கொள்ள சியோனிசத்தின் பின்புலத்தில் என்ன வரலாற்றுத் தேவை இருக்கின்றது.

உண்மையில் அக்கட்டுரை யாரையும் கிண்டலடிக்கவோ விமர்சிக்கவோ எழுதப்பட்டதல்ல நமக்குப் பக்கத்தில் இருக்கும் அபாயம் பற்றிய முன்னெச்சரிக்கையை அறிவிப்பதும் அதனை எதிர்கொள்ளத் தயார்படுத்துவதும்தான் பிரதான எண்ணம். உதாரணமாக புயல் மையங்கொண்டிருக்கின்றது என்பதை எல்லோராலும் புரிந்து கொள்ளவோ விளங்கிக்கொள்ளவே இயலாது. மையங்கொண்டிருக்கும் புயலை அடையாங் கண்ட பின்னர் அது எந்தத் திசையில் நகரும் என்ன வேகததில் நகரும் என்ன விதமான பாதிப்புகளையெல்லாம் உண்டாக்கும் என்ற எச்சரிகையும் அதனைத் தொடர்ந்து எடுக்கப்படும் பாதுகாப்பு எச்சரிக்கைகளும் முன்னேற்பாடுகளும் வளிமண்டலத் திணைக்களத்தின் அதிகாரிகளால் அறிவிக்கப்படுவது போன்றுதான் இதுவும். இந்த இடத்தில் சர்வதேச மட்டத்தில் மையங்கொண்டிருக்கும் பிரச்சினை இலங்கைச் சமுகத்தை நோக்கி எப்படி முன்னர்கின்றது என்பதை முன்கூட்டியே உணர்ந்துகொண்டு முன்கூட்டியே நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய உலமா சபை அதை கவனியாது இருப்பதால் எழுகின்ற கோபத்தின் விளைவுகள்தான் அவ்வாறு வெளிப்படுகின்றன. இது நக்கல் அல்ல முன்னெச்சிரிக்கையை உணர்ந்துகொள்ளாத 'பேத்தனமான ஆட்கள்' மீதான கோபம் அவ்வளவுதான்.

இந்த நிலைமையைச் சரிப்படுத்த வேண்டிய பொறுப்புள்ள அமைப்பு உலமா சபைதான் அவர்கள்தான் இதைச் செய்தாக வேண்டும். அதனால்தான் அவர்கள் மீது பாய வேண்டியிருக்கின்றது. இந்தச் சிக்கலை விளங்கிக் கொள்ள மூளை இருக்க வேண்டும். இஙகு பிரச்சினையே இவர்களில் பெரும்பகுதியினருக்கு என்ன நடக்கின்றது என்பது பற்றியதெளிவே இல்லை என்பதுதான். உலக நடப்புத்தெரியாமல் சும்மா கன்னியத்துக்குரிய மேலான சோதர்களே பெரியார்களே என்று பயான் பண்ணித் திரிவதை ஒவ்வொருவாரமும் காண நேர்கின்ற அவலத்தின் மீதுள்ள ஆற்றாமையின் வெளிப்பாடு.

ஏனெனில் சில நாட்களுக்கு முன்னர் அவர்கள் திருகோணமலை அனுராதபுரச் சந்திப் பள்ளிவாயலில் நடாத்திய மாநாட்டை அவதானிப்பதற்கென்றே கொழும்பில் இருந்து பயணப்பட்டேன். அங்கு பலரையும் அளவிட முடிந்தது. அவர்களின் லட்சனத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. நளீமியாவின் சேகுமார்கள் பலர் அப்போது என்னுடன் உரையாடினார்கள் அவர்களிடம் பிரஸ்தரிபத்த விடயங்களையே பின்னால் தெளிவாக எழுதுகின்றேன்.

உம்ரா பிஸ்னஸ் பண்ணித்திரியும் உலமாக்களாலும் ஹலால் பத்வா விற்பனை உலமாக்களாலும் இந்த சமுகத்தை நோக்கி திட்டமிட்டு நகர்த்தப்படுகின்ற சிக்கலான நிலையை உள்வாங்கவோ அதன்பாதிப்புகளில் இருந்து சமுகத்தைக் காப்பற்றவோ முடியாது என்பதை வேறு எப்படித்தான் வெளிப்படுத்துவது?

பொதுபலசேனா மிகப் பகிரங்கமாகவும் வெளிப்படையாகவும் ஹலால் என்ற ஆயுதத்தை தூக்கி அடிக்கத் தொடங்கியிருந்த காலத்தில் அதன் போக்கைத் தெளிவாகப் புரிந்து கொண்ட ஓர் உலமாசபை உறுப்பினரைத்தானும் என்னால் அடையாளப்படுத்திக் கொள்ள முடியவில்லை. இந்த ஹலால் பிரச்சினை மூலம் வெளிப்பட்டது இலேசானபிரச்சினை கிடையாது அது இன்னும் பத்து வருடங்களுக்குள் வேறுவிதமான வடிவங்களை எடுக்கும். ஏனெனில்முஸ்லிம் சமுகத்தi குறிவைத்து தாக்குவதற்குத் சர்வதேச அதிகாரம் தேர்வு செய்திருக்கும் ஆயுதம் பௌத்த பேரினவாதம். இந்தப் பேரினவாதத்தை எந்தவொரு சிங்கள அரசியல்வாதியும் எடுத்த எடுப்பில் எதிர்மறை நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தவோ கையாளவோ முடியாது. என்ன செய்தாலும் அது அவர்களது வாக்கு வங்கியில் தாக்கம் செலுத்தும். பிழையான விசயமாகத் தெரிந்தாலும் பார்த்துக்கொண்டுதான் இருக்க முடியும். அந்தப் பார்த்துக்கொண்டிருத்தலை இயலாமை என்று இலகுவாகக் கடந்துசொன்றுவிடவும் முடியாது முஸ்லிம் சமுகம் வெறுமனே அவர்களைப்பழிசொல்லியபடி இன்னுமொரு சக்தியைத் தேடிச் செல்லவும் கூடாது. உதாரணமாக   அளுத்கமை தர்கா நகர் கலவரம் மிகவும் திட்டமிடப்பட்டு அமுல்படுத்தப்பட்டது. மஹிந்த ராஜபக்ச அரசுதான் அதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்றாக வேண்டும் என்ற கருத்தியல் மகிந்த அரசில் எமக்குப் பாதுகாப்பில்லை என்று மக்களை உணரச் செய்தது. இப்போது புதிய அரசாங்கத்தைத் தெரிவுசெய்ய வைத்திருக்கின்றது. இந்த அரசாங்கத்தில் மீளவும் ஒரு கலவரம் கண்டியிலோ குருவாகலையிலோ மாவனல்லையிலோ இடம்பெற்றால் இப்போதுள்ள மைத்திரி-ரணில் அரசினால் அதைத் தடுக்க முடியாது. அளுத்கமையைவிட நூறுமடங்குபொருளாதார இழப்பைத் தந்தாலும் அதைத் தடுக்க அரசு என்ன செய்தாலும் முடியாது. அத்தகையதொரு களவர சூழல் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

எல்லாப் பிரச்சினைக்குப் பின்னாலும் பொதுபலசேனாவும் சிங்கள ராவயவும்தான் இருக்கும் என்பதை மட்டும் நீங்கள் என்ன வேண்டாம். கண்டியில் கலவரம் நடந்தால் வேறு அமைப்பும் நபரும் அடையாளப்படுத்தப்படுவார்கள் குருநாகலில் கலவரம் நடந்தால் அதற்கு வேறு அமைப்பும் நபரும் அடையாளப்படுத்தப்படுவார்கள். மாவனல்லையில் கலவரம் நடந்தால் இதுவும் வேறுவிதமாகத்தான் இருக்கும். இத்தகைய நிலைமைகளைக் கூட  எலமா சபை புரிந்து கொண்டு அதற்கேற்றமாதிரி செயற்படத் திராணியற்று இருக்கின்றதே என்ற ஆதங்கத்துக்கும் கோபத்துக்கும் எங்கிருந்து வார்த்தைகளைத் தேடி வெளிப்படுத்துவது?

அப்போது ஹலால் பிரச்சினையின்போது அதை சரியாகத் கையாளத் தெரியாத இதே எலமா சபை இன்னும் ஐந்து வருடத்துக்கு நிலைத்திருக்குமாக இருந்தால் இதேபோன்று பல்வேறு பிழைகளுக்காக சமூகத்தின் முன்னால் தமதுபிழைழய ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்கும் நிலை நிச்சயமாகத் Nhதன்றும் அப்போது என் போன்றவர்கள் அமைதியாகத்தான் இருப்பார்கள். ஏனெனில் நிலைமைகள் கைமீறிச் சென்றிருக்கம். இந்த ஹலால் பிரச்சினை எங்கும் பேசுபொருளாக இருந்த போது எனது குடியிருப்புத் தொகுதியில் இருக்கின்ற பௌத்த அயவலர் என்னிடம் சொன்ன ஒரு விடயத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
'ஹலால் சொல்லி சல்லி சேத்து தலிபானுக்கும் அல்காயிதாவுக்கும் உலமா கபையால அனுப்பி இருக்கிறாங்க பாருங்களே! இதெல்லாம் உங்களுக்குத் தெரியாதா'
அவரின் இந்தக்கூற்றுக்கு நான் தரமானதொரு விளக்கத்தைக் கொடுத்தேன் ஆயினும் கேட்டுக்கொண்டாரே தவிர ஏற்றுக்கொள்ளவில்லை. இத்தகைய பிரச்சாரம் என்னவிதாமன விளக்கத்தைக் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளச் செய்யாதளவுக்கு ஆழமாக செய்யப்பட்டிருக்கின்றதென்றால் இது ஒரு கட்டத்தில் அல்குர்ஆன்பிரதியொன்றைக் கையில் வைத்திருப்பதையே குற்றமாகக் காணும் நிலைiயொன்றினை நிச்சயம் தோற்றுவிக்கும். அப்போது தலிபான் பற்றிய பேச்சோ அல்காயிதா பற்றிய பேச்சோ இருக்காது இப்போது ஓடிக்கொண்டிருக்கும் அமெரிக்காவின் தயாரிப்பில் சவுதியின் இணைத்தயாரிப்பில் சியோனிசத்தின் இயக்கத்தில் வெளியான ஐஎஸ்ஐஎஸ் என்ற திரைப்படம் பற்றிய பேச்சு பேசுபொருளாக இருக்கலாம் அல்லது அதை வித வேறு லேட்டஸ் படம் வந்திருந்தால் அதைப்பற்றிய பேச்சு நிகழும். (இப்போதைக்கு மட்டுமல்ல இன்னும் பத்து வருடங்களுக்கு இந்த ஐஎஸ் திரைப்படம் ஓடும் என்பது தெரிகின்றது, அதனால் நிச்சயம் ப்போதும் இதே ஷ்கிரிப்ட் தாக்கம் செலுத்தும். இதெயெல்லாம் வேடிக்கையாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதுதான் எனது வேண்டுதல்.

அடுத்தது இன்னுமொரு அபாயகரமான நிலை இருக்கின்றது. பள்ளிவாயல்களை மையப்படுத்தி ஒருமுகப்படுத்தப்பட்ட சரியான ஒரு கட்டமைப்பையும் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட கி;டத்தட்ட 180 அரபு மத்ரசாக்களையும் ஒரே பாடத்திட்டன்கீழ் அரசாங்கத்தின் அனுசரனையின் கீழ் விரைவாகக் கொண்டு வந்து சேர்க்கும் பணியை ஜம்இய்யதுல் உலமா செய்ய வேண்டும். அதற்கு இந்த நேரத்தில் இருக்கும் அனைத்து அரசியல்வாதிகளையும் முரன்பாடுகளுக்கும் அரசியல் இலாபம் பற்றிய வேறுபாடுகளுக்குமப்பால் இணங்கச் செய்து சட்டமாக்கிக் கொள்ளவேண்டும் பாராளுமன்றின் அனுமதியைப் பெற்றுக்கொண்டு எதிர்காலத்தை வெளிப்படையாக எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். இதற்கான காரணங்களை நான் தெளிவாகவோ வெளிப்படையாகவே சொன்னால் நிச்சயமாக என்னைக்கொண்டுபோய் அங்கொடையில் சேர்த்துவிடும்படி இதே ஆலிம்கள் மிம்பர்மேடைகளில் பயான் பண்ணுவார்கள். இலக்கிய நண்பர்கள் முஸ்டீனுக்கு கலன்றுவிட்டது போலத்தான் தெரிகின்றது என்று கூறிக்கொள்வார்கள். என்மீது பிடிப்பில்லாத யோக்கியர்கள் 'அவன் ஹராங்குட்டி ஏஜெண்டு வேலபாக்கான், இப்பிடித்தான் சம்பந்தமில்லாம சம்பந்தமில்லா பேசுவான் நாம கண்டுக்கப்படா' என்று கதைப்பார்கள். இந்த சமுகத்தின் இப்போதைய நிலையில் எதைசொல்லவேண்டுமோ யாருக்குச் சொல்ல வேண்டுமோ  அவர்களுக்கு மட்டும்ந்தான் சொல்ல வேண்டிய விடயங்களைச் சொல்ல முடியும்.

லத்திப் பாருக் போன்று திறனுள்ள ஊடகவியலாளர்கள் இங்கில்லை எல்லாம் லேபல் கேசுகள்தான் இருக்கின்றார்கள் அதுபோல புலனாய்வு ஊடகவியலாளர்கள் மருந்துக்கும் கிடையாது எனவே எழுத்துகளை அவர்களால் விளங்கிக் கொள்ள முடியாது. ஒரு பிரச்சினை தோற்றம் பெற்று அரங்கேறி அழிவுகளை விதை;தத பின்னர் எதிர்கொள்ளும் பொழுதுகளுக்க மட்டுமே அவர்கள் செய்தி சேகரிப்பார்கள் கருத்தரைப்பார்கள் அல்லது மீட்டிங் போடுவார்கள். இங்கு நான்சொல்லவது இரண்டு மூன்று வருடங்களுக்குப்பின்னரான தயார்படுத்தல் பற்றியது. இந்தத் தயார்படுத்தல் இல்லாத போது ஒருகட்டத்தில் நான் நோன்பு இல்லையென்பதை ரமலானில் தண்ணீர் குடித்து நிரூப்பித்துவிட்டுச் செல்லவும் இஸ்லாத்தில் அவ்வளுவ பற்றில்லதா முஸ்லிம் என்று காட்டுவதற்கா தாடிமழித்து பெண்களை அவிழ்த்துவிட்டுக் கூட்டிச் செல்லும் நிலை தோன்றும். அது சடுதியாக வெளிப்பட்டு நிற்காது இப்போதிருந்து நகர்த்தப்படும்காய்கள் அப்போது அத்தகைய நிலைக்கு எங்களைக் கொண்டு வந்து நிறுத்தி விடும்.

முதற்கட்டுரையில் சொன்னது போல் இந்நாட்டின் தேசாபிமானியாக வெளிப்படையாக அறியப்பட்ட ஒருவர் இந்நாட்டின் உயர்ந்த இடத்தில் அல்லது மதிப்பு இடத்தில் அல்லது மக்களுக்கான தவல் சொல்லும் இடத்தில் மொத்தத்தில் அது இந்நாட்டின் கௌரவமும் மதிப்பும் மிக்க இடமாக இருக்கும் அப்படிப்பட்ட இடத்தில் வைத்து சர்வதேச பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தி ஒருபெயர்ப்பட்டியலைச் சமர்ப்பித்தால் அதிலிருந்து இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குள் இந்நாட்டில் சம்பந்தமில்லாத இருவேறுதளங்களின் இந்நாட்டு மக்களை மரணபயத்தைக் கொண்டு அச்சுறுத்தும் சம்வங்கள் நடந்தேறினால் குறிப்பாக அல்லாவின் பெயரைச் சொல்லி வெடித்துச் சிதறினால் சுவர்க்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தும் மடையர்கள் அதற்கு முன்னோடிகளாக இருந்தால் அதன்பின்னர் மக்களே முஸ்லிம் என்ற காரணத்துக்காக உங்களின் தன்மானத்தின் மீதும் இருப்பின் மீதும் கல் பகிரங்கமாக வீசப்படும் நிலை இந்நாட்டில் தோன்றினால் இந்நாட்டு அரசாங்கம் செய்துகொள்ளும் சர்வதேச ஒப்பந்தங்கள் அனைத்தையும் வார்த்தைக்கு வார்த்தை படித்துப் பாருங்கள் ஏனெனில் அந்த சர்வதேச ஒப்பந்தங்களுக்குப்பின்னால் எந்த நாட்டின் தூதுவர் இருக்கின்றாரோ அவரின் கடந்தகாலப் பணிகள் மீது அவதானம் செலுத்தங்கள் (இன்னும் ஆறுவருடத்தில் நம்நாட்டுக்கு இஸ்ரல் நாடு தனது தூதுரை நியமிக்க வாய்யுள்ளது. அப்படியொரு தூதர் வரும் போது யார் ஆட்சியில் இருந்தாலும் இந்நாடு பாரிய பொருளாதார நெரு்கடியில் இருக்கும். அது அமெரிக்க டொலரை மையப்படுத்தியதாக இருக்கும். அப்போது சர்வதேச நாணய நிதியத்திடம் நம்நாட்டை சரணடையச் செய்வார்கள். நிர்க்கதியான நிலையில் அப்போது நம்நாட்டின் மீட்பராக முதன்முதலாக நியமிக்கப்படும் குறித்த அந்த நாட்டின் தூதர் தோன்றுவார். இதற்கு ஆதாரம் என்னவென்று கேட்டால் அதற்கு காலமே பதில் சொல்லும் என்பேன்.) 
மேற்சொன்ன களேபரம் அல்லாவின் பெயரால் வெடித்துச் சிதறும் நபர்களால் அரங்கேற்றப்படுமாயின் அப்போது மரணபயம் எங்கும் தலைதூக்கினால் இந்நாட்டின் வளங்கள் பற்றிய அல்லது சர்வதேசத்துக்கு அவசியமாகவுள்ள பொக்கிசங்கள் பற்றியும் அவதானம் செலுத்துங்கள். அதே நேரம் இஸ்லாத்துக்கு மதம்மாறிய நபர்கள் குறித்தும் அவதானம் கொள்ளுங்கள். ஏனெனில் புலனாய்வுப்பணி செய்ய எதிரிகளுக்கு இஸ்லாத்துக்கு மதம் மாறுவது மிச்சம் இலகுவானது. பாதுகாப்பானதும் கூட மேற்சொன்ன களேபரம் அப்படி இஸ்லாத்துக்கு மதம்மாறிய ஒருவரால் நிச்சயம் வழிநடாத்தப்பட வாய்ப்புள்ளது. அப்போது இந்தியாவையும் ரோவையும மறந்துவிடாதீர்கள். ஏனெனில் எமது நிகழ்வுகளுக்கான சுடசுட செய்தி ரிப்போட்டராக சு.சுவாமி போன்றவர்கள் இருப்பார்கள். அடுத்த ஐந்து வருட காலத்துக்கும் இந்திய மக்கள் மோடியைத்தான் தெரிவு செய்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம் அப்போது இங்கு ஒரு மிடருக் கஞ்சி கூட நிம்மதியாக இறங்காது. இப்போதுள்ள ஆட்சியாளர் அந்சந்தர்ப்பத்தில் இருந்தால் பாதுகாப்புக்காக நிச்சயம் பொறுப்புள்ள தலைவர்கள் நாட்டுக்கு வெளியில்தான் இருப்பார்கள். பந்தை ஆளையாள் மாறிமாறி பாஸ்பண்ணி விடுவார்கள் சர்வதேச தலையீடு பற்றி சில தலைவர் கொக்கரித்துத் திரிவர். அப்போது அங்கு மோடி ஆட்சி நிலைப்பட்டு நிற்றுகம் ஆட்சியைப் பிடிக்க சிம்பதி கிரியேசன் நடக்கும் அது தன் நாட்டு மக்கள் அதுவும் இராணுவத்தை பாகிஸ்தானிய பயங்கரவாத்தின் பெயரால் இந்திய அரசு பலிகொடுத்துவிட்டே தேர்தலை எதிர்கொள்ளும் அந்த அலையில் தமிழ்நாடும் கேரளாவும் மட்டுமே தப்பித்துக் கொள்ளும். மற்றறைய அனைத்து மாநிலங்களும் அந்த அலையில் மோதுண்டு அள்ளுண்டு திசைதெரியாமல் போகும் தமிழ்நாட்டில் மிகப்பிரதான கட்சிகளில் ஒன்று மோடியிடம் சரணடையும். அப்போது அது தலைமைத்துவ இடைவெளியில் தள்ளாடிக்கொண்டிருக்கும். எப்படியிரு்நதாலும் அந்தச்சரணைடைதல் வெற்றிபெறாது.  ஏனெனில் தமிழ்நாடு பற்றிய எதிர்வுகூறல் அதிகம் தேவைப்படாது ஏனெனில் அங்கு மோதவிகள் அதிகம் அதிகம் நமது பேச்சு அவ்வளுவு எடுபடாது. ஆனால் தமிழ்நாட்டில் இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் பிஜேபி அங்குள்ள பெருங்கட்சிகள் கூட்டோடு கைகோர்த்து பகிரங்கமாக எச்சரிக்கும் நிலையில் இலங்கையில் அனர்த்தம் நிகழ்ந்துவிட்டிருந்தால் இலகுவெற்றியைக் கண்டு அதன்பின்னர் தௌஹீத் அமைப்புகள் மீது வைக்கப்படும் கண் மொத்த இந்தியாவுக்கும் முஸ்லிம்களுக்கும் சொருகப்படும் ஆப்பாக மாறி விடும். அப்போது இந்திய மக்கள் கவனம் செலுத்தத் தவறிய உவைசி போன்றவர்கள் உங்களைக் காப்பாற்ற முடியும். ஏனெனில் இந்தியா சிறந்த வர்த்தகத்தளம் அதாவது நல்லதொரு சந்தை. இலங்கை சர்வதேச நகர்த்தல்களுக்கு சிறந்ததொரு மைதானம் இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும். ஏனெனில் இதற்குப் பின்னால் இருக்கும் ஒரு சின்ன விடயத்தை கட்டாயம் தெளிவுபடுத்தியாக வேண்டும். இந்திய சந்தையில் ஒரு சாதாரண மிட்டாய் பெக்டரி போட்டாலும் குறைந்தது மாதத்துக்கு பத்துக்கோடி மிட்டாய் விற்கலாம். வருடத்துக்கு என்ன கணக்கு என்பதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். அதே நேரம் இந்தியாவில் சிலவிடயங்களைத் தக்கவைக்க முன்னெடுக்கப்படும் அதிகாரப் போட்டி இலங்கையைமையமாக வைத்தே நகர்த்தப்படும். அப்போது இதற்கான ஊக்குவிப்புக் கருவியாக பௌத்த பேரினவாத சக்தி இருந்திருக்கும் அதேபோன்று அமெரிக்காவின் கை ஓங்கியிருப்பின் இஸ்லாமியப்பயங்கரவாதம் அச்சுறுத்தும் பேசுபொருளாக களத்தில் இருக்கும். அது இந்தியாவுக்கும் சேர்த்தே என்பதையும் நினைவல் கொள்க. இதெல்லாம் சர்வதேச பிஸ்னசப்பா புரிந்துகொள்ளவே நேரம் எடுக்கும்.

துருக்கி பற்றியும் எதிர்காலத்தில் அது எத்தகைய சவால்களை ஐஎஸ் பேரில் எதிர்கொள்ளப்போகின்றது என்பது பற்றியும் இதற்குப் பின்னால் உள்ள வரலாற்றுக் காரணிகள் பற்றியும் முடிந்தால் அடுத்த பகுதியில் பார்ப்போம். இன்னும் ஐந்து வருடங்களுக்குள் உலகம் ஸ்தம்பிதமடையும். கல்வியும் உலக பொருளாதாரமும் புதியவடிவம் பெறும் அப்போது எலகை புதிய சக்திகள் கட்டுப்பாட்டில் வைததிருக்கும். எல்லா நாடுகளும் அந்தச் சக்திக்கு அடிபணிந்தே ஆக வேண்டும். உலகப் போக்குவரத்து தடைப்பட்டால் எத்தகைய பொருளாதாரச் சிக்கல் தோன்றும் என்பதை இப்போது சொன்னால் நகைப்பாக இருக்கும் அதையெல்லாம் உணரும் போது மட்டுமே புரியும். மொத்தத்தில் உலகே ஸ்தம்பிதமாகும் நாடுகள் அனைத்தும் அடுத்து என்னசெய்வதென்று திண்டாடிக்கொண்டிருக்கும். 2020களுக்குப் பின் சோதனைக்காலம்தான். இதெல்லாம் உலக அரசியல் இதை முன்னுணரும் நபர்களால் மட்டுமே நாட்டையோ தனது மக்களையோடு இனத்தையோ சமுகத்தையோ வழிநடாத்த முடியும். அதற்கு புரொய்ளர் கோழிகள் போன்ற வக்கற்ற உலமாசபையால் வழிநடாத்தல் கொடுக்க முடியாது. இப்போது போர்ச்சேவல் போன்ற தில்லான கட்ஸ் மிக்க ஆலிம்கள்தான் நமக்குத் தேவை. 

எது எப்டியோ இறுதியாக மக்களே உங்களை வஹாபிசத்தைக் கொண்டு எச்சரிக்கின்றேன். செச்சனியாவிலும் டாகெஸ்தானிலும் நமக்கு நிறையப்படிப்பினைகள் இருக்கின்றன இப்போது சவுதி மையப்பட்டு நன்கொடைபெற்றுக்கொண்டு பள்ளிகளை வீதிகொன்றாகக் கட்டித்திரியும் வியாபாரிகள் விரைவில் தாம்பெற்றுக்கொண்ட ஒவ்வொரு றியாலுக்கும் பொறுப்புச் சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் வரும் அபபோது உங்கள் பையில் உள்ள பேனைகள் கூட பயங்கர கூரிய ஆயுதமாகச் சித்தரிக்கப்படும். எனவே தௌஹீத் குஞ்சுகளே உங்களுக்குப் பின்னால் நீண்டு போய் இருக்கும் கயிற்றில் எந்த இடத்தில் வஹாபிசம் பிணைக்கப்பட்டு இருக்கின்றது என்பதை சரியாக இனங்கண்டுகொள்ளுங்கள். அதேபோல் மை;இயயதுல் உலமா இது தொடர்பில் விரைவாகச் செயற்பட்டு  பள்ளிகளை முன்னிறுத்திய சமுகத்தை திறம்பட ஒழுங்குபடுத்தும் வேலையைச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஆளையாள் காட்டிக்கொடுத்துவிட்டாவது தப்பித்துவிடுவோம் என்று யாநப்சி ஓட்டம் எடுப்பீர்கள். அபபோது இயக்கங்கள் ஜட்டியோடு அம்மனமாக நிற்கும்.

இறுதியாக மேலதிக குறிப்பு: இப்போதுள்ள உலமா சபையில் ரிஸ்வி முப்தி தலைமையில் இருக்கின்ற பலர் ஓதப்பள்ளி நடத்துவதற்கு மட்டுமே பொருத்தமானவர்கள் அதனால் அதைச் செய்ய முயலுங்கள். இப்போதுள்ள மக்தப் வேலைத்திட்டதோடு உங்கள் அறிவைப் பயன்படுத்துங்கள். ஏனெனில் உங்களைப் போன்றவர்களால் இந்தச் சழுகத்தை ஒழுங்குபடுத்தவும் முடியாது காப்பாற்றவும் முடியாது என்னை சமுகத்தில் உள்ள பித்னா வாதியாகப் பிரகடனப்படுத்தினாலும் இதுதான் உண்மை.

மீண்டும் சந்திப்போம்

No comments:

Post a Comment