Friday, February 26, 2016

பாவுட்டியுடே நாமத்தில்

மலையாள சினமாவின் அற்புத நடிகன் மட்முட்டியின் நடிப்பில் எனக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு இருக்கின்றது. அதற்காகவே மட்டுமுட்டியின் திரைப்படங்களை மிஸ் பண்ணாமல் பார்ப்பதுண்டு. அன்மைக்காலமாக திரைப்படங்கள் பார்க்க நேரமொதுக்க முடியாமலட இருந்தது. ஆயினும் இப்போது ஒரு நாளைக்கு ஒரு திரைப்படமாவது பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றேன். 


அந்த அடிப்படையில் பாவுட்டியுடே நாமத்தில் என்ற மலையாளத் திரைப்படத்தை நேற்றுப் பார்த்து முடித்தேன்.
ஒரு முஸ்லிம் கதாபாத்திரத்தில் முன்மாதிரியான பல்வேறு விடயங்களை முன்னிறுத்தி மம்முட்டி நடித்திருக்கின்றார். திரைப்படமே முஸ்லிம் கதைமாந்தர்களுக்குள்ளால்தான் நகர்கின்றது. 

அர்ஜீன் விஜயகாந்த் போன்ற வகையறாக்களுக்கு செருப்பால் அடிப்பது போன்ற திரைப்படம். முஸ்லிம்கள் என்றால் பயங்கரவாதிகள் என்று காட்ட முனையும் அனைவர் முகத்திலும் மலத்தால் அடித்தமாதிரி ஒரு படம். 

தமிழ் நாடுதான் அமைதிப் பூங்கா என்று கத்தும் மனிதர்களின் திரைத்துரை இன்னும் பயங்கரவாதிகள் என்ற கதாபாத்திரங்களுக்கு தாடியையும் தொப்பியையும் போட்டு அழகு பார்க்கையில் மாமன் மச்சான் உறவு சொல்லி வெறுமனே கதைத்துத் திரிகையில் கேரளா அந்த உறவை வாழ்தலை அன்றாட நிகழ்வுகளை நம்பிக்கையை பிடிப்பை பற்றை விசுவாசத்தை வெடிகுண்டு மாயையில் இருந்து காப்பாற்றி நமக்கு முன்னால் விரித்திருக்கின்றது. 

ரஞ்சித் எழுத்தித் தயாரித்த இத்திரைப்படத்தை ஜீ.எஸ்.விஜயன் இயக்கி இருக்கின்றார். 

குத்தாட்டமில்லாத காற்றில் பறக்கும் சண்டைக்காட்சிகள் இல்லாத யதார்த்தினை மிஞ்சாத காதல் இயல்பான கதாபாத்திரங்கள் என்று குடும்பத்துடன் அமைதியாக இருந்து பார்த்து நிம்மதியைப் அனுபவிக்க நல்லதொரு திரைப்படம் 
இது குறித்து நிறைய எழுத வேண்டும் விரைவில் எழுதுகின்றேன். 
மை நேம் கான் என்ற சாருக்கானின் திரைப்படத்திற்குப் பின்னர் எனக்கு ஆறுதல் தந்த முஸ்லிம் கதையம்சம் கொண்ட இந்தியத் திரைப்படம் இது.

No comments:

Post a Comment