இலக்கியத்
திருட்டு: அறபாத் அனார்
அறபாத்
சொல்ல வருவதென்ன?
இலக்கியம்
படைத்தல் என்பது கொஞ்சம் சுவாரஷ்யமான
விசயம். புதிதாகப் படைக்கும் ஆற்றல் அதாவது புத்துருவாக்கம்,
மாதிரியின்றிப்படைத்தல் என்பது இறைவனுக்கு மட்டுமேயுள்ள
தனித்துவமான பன்பு. அது மிகவும்
சவால் மிக்கது. அல்குர்ஆன் என்பதும் அப்படிப்பட்ட சவால் மிக்க ஆக்கம்தான்
அதன் ஆசிரியர் அல்லாஹ். அவர் விட்டிருக்கும் பெருஞ்சவால்
முடிந்தால் அல்குர்ஆனில் உள்ளது போன்று ஒரு
அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். அல்லது
ஒரு வசனத்தையேனும் கொண்டு வாருங்கள் என்பதாகும்.
அப்படி சவால் விட்டுவிட்டு பின்னால்
அது உங்களால் முடியாது இதை நாமே இறக்கினோம்,
நாமே பாதுகாப்போம். அதாவது நூலாசிரியர் லேசுமாசான
ஆள் கிடையாது என்பது அதன் அர்த்தம்.
அதனால்தான் அல்குர்ஆன் என்ற புத்தகம் பூமிக்கு
வந்து 14 நூற்றாண்டுகள் கழிந்து போயும் கூட
அல்லாஹ் விட்ட சவால் இன்னும்
நிலைத்திருக்கிறது.
நான்
தயாரித்த திரைப்படத்திற்கு தீ நிழல் என்று
பெயர் வைத்தேன். அந்தப் பெயர் எனக்குச்
சொந்தமானதல்ல அது அஷ்ஷெய்ஹ் ஏ.பி.எம். இத்ரீசிங்குச்
சொந்தமானது. ஜாமியா நளீமிய்யாவில் நான்காம்
ஆண்டு மாணவனாகப் படித்துக் கொண்டிருந்த போது நரக நெருப்பு
கொழுந்து விட்டெரிவதை அல்குர்ஆன் விபரிக்கும் விதத்தினை அவர் சுவாரஷ்யமாகச் சொல்லிக்
கொண்டு போனார். அப்போதுதான் தீயின்
நிழல் என்ற வார்த்தையை அவர்
பிரயோகித்தார். அது எனக்குக் கிளிக்
ஆகியது. இது நடந்தது 2004ம்
ஆண்டு. பின்னர்
2008ம் ஆண்டுதான் தீ நிழல் என்ற
பெயரை படத்திற்கு வைப்பதற்கு முடிவெடுத்தேன் சுமார் நான்கு வருடங்களாகியும்
அந்தப் பெயர் மனதில் என்னவோ
செய்து கொண்டுதானிருந்தது. படத்திற்கு அந்தப் பெயர் கனகச்சிதமாகப்
பொருந்திப் போயிற்று. 2007 முற்பகுதி போல படத்திற்காக முகைதீன்
மௌலவி ஒரு கதை கொண்டு
வந்தார் அந்தக் கதை அவ்வளவு
சுவாரஷ்யமாக இருக்கவில்லை, கலீல் மீராலெப்பையைச் சந்தித்த
போது அவர் தனது அனுபவங்களைப்
பகிர்ந்து கொண்டார் அவை தான் படத்தின்
உயிரோட்டமுள்ள காட்சிகளாகப் பரிணமித்தன. அதனால்தான் படத்தில் கதை என்ற இடத்தில்
முகைதீன் என்றும் கதை உதவி
என்று கலீல் மீராலெப்பை என்றும்
போடப்பட்டது. இங்கு தீ நிழல்
திரைப்படத்தின் உயிரோட்டமுள்ள கதை, அல்லது படத்தையே
உயிரோட்டமாக்கியது கலீல் மீராலெப்பை. ஆனால்
நல்ல கதை என்று பெயர்
கிடைத்தது முகைதீனுக்கு. இப்படி எல்லாவற்றிலும் ஒன்றிலிருந்து
ஒன்று மாறிக் கொண்டும் ஒன்றிலிருந்து
ஒன்றை ஒருவர் புதுமையாகப் பார்ப்பதும்
புதுமையெனப் படைப்பதும் இயல்பாக நடை பெற்றுக்
கொண்டே செல்லும். இந்த உண்மைகளை ஏற்றுக்
கொண்டுதானாக வேண்டிய நிர்ப்பந்தம் ஒரு
இலக்கிய கர்த்தாவுக்கு ஏற்படும்.
ஒருவருடைய
கவிதை இன்னொருவருக்கு ஒரு கதைக் கருவாக
முடியும். ஒருவருடைய கதை மற்றொருவருக்கு ஒரு
நாவலுக்கான கருவாக முடியும். ஒரு
நாவல் ஒரு காப்பியத்திற்கும் காப்பியம்
ஒரு கவிதைக்கும் கூட மாதிரியாக மாறலாம்.
அது போல ஒரு தலைப்பு
இன்னொருவருக்கு புதிய படைப்பிலக்கியமொன்றுக்கு வழிகாட்டலாம் இப்படித்தான்
சிலவை நடந்தேறும் அது வாஸ்தவமானது. அதில்
தப்பில்லை என்றுதான் கருதுகிறேன் ஆனால் அதற்கான தூண்டுதல்
இதுதான் என்று அறிவித்துவிடுவது உத்தமத்தனம்
மறைத்துக் கொண்டு சொந்தச் சரக்கேதான்
என்று பாவ்லா காட்டுவது அபத்தம்.
இந்தக் கள்ளத்தனம் வெளிப்படும் போது அது படைப்பாளியைச்
சுடும். இப்படிக்
கள்ளத்தனம் மிக்க பலர் உலா
வந்து கெண்டேதான் இருப்பர். ஆனால் ஒரு படைப்பையே
மொத்தமகச் சுட்டுக் கொள்வதும் தனது பெயரைப் போட்டுக்
கொள்வதும் ரொம்ப
மோசமான விசயம். அப்படியும் சிலர்
மூத்தபடைப்பாளிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் உண்மைகளை இணையம் என்று ஒன்று
வந்த பின்னர் மிக இலகுவாக
அடையாளங் கண்டு அதிர்ந்து போய்
நிற்க நேரிடும்.
2008களில் அஷ்ரப்
ஷிஹாப்தீனின் ஜைத்தூன் கவிதையினை பலஸ்தீனக் கவிஞர் தர்வீஸின் கவிதையுடன்
ஒப்பிட்டு அது திருடப்பட்டது என்று
வீர கேசரியில் அறபாத் போன்றவர்கள் புணைப்
பெயரில் எழுதினார்கள் அங்குமுன்வைத்த காரணம் ஜைத்தூன் கவிதையில்
அஷ்ரப் ஷிஹாப்தீன் சொல்வது போல புலிகள்
முஸ்லிம் பெண்களைக் கடத்தவில்லை கற்பழிக்கவில்லை என்பதுதான். ஆனால் அவர்களின் அந்த
வாதம் பொய்த்துப் போன போது அஷ்ரப்
ஷிஹாப்தீன உறுதியாக நிலைப்பெற்று நின்றார். ஜைத்தூனும் பொலிவு பெற்றாள். அது
போல தகவம் ஏற்பாடு செய்திருந்த
ஒரு விழாவில் கலந்து கொண்ட எஸ்.எல்.எம்.ஹனிபா
இலக்கிய உலகில்சுவாரஸ்யம் வேண்டும் என்று காப்பியக் கோ
ஜின்னாஹ் ஷரிபுத்தீனைக் கண்டபடி அவமானப்படுத்திடும் வண்ணம்
அவர் காப்பியங்கள் சொந்தக் சரக்கில்லை என்று
வாதிட்டு கிறுக்குத்தனமாகப் பேசி பின்னர் தரமாக
வாங்கிக் கட்டிக் கொண்டிருந்த தருனத்தில்
'என்னுடைய நெருங்கிய நண்பன் நான் பெற்ற
குழந்தைக்கு தனது இன்னிசியலை வைத்துவிட்டான்' வை
அஹமதின் கதைகள் திருடப்பட்டது குறித்த
டயறிக் குறிப்பொன்றின் பின்னால் எழுந்த கருத்து மோதல்
எஸ்.எல்.எம்.ஹனிபா
திருடினாரா? இல்லையா! என்ற வாதப்பிரதி வாதங்கள்
தமிழ் மிரரிலும் சாஜஹானின் முகநூல் பக்கத்திலும்
சூடாகச் சென்று கொண்டிருந்த போது
ஹனிபா இறைவன் மீது ஆணையிட்டுச்
சத்தியம் செய்ய முன்வந்ததுடன் வலுவிழந்து
போனது. இங்கு ஹனிபா சத்தியம்
செய்ய முன்வந்தது மிக முக்கியமான விடயம்.
ரிழா
என்றொருவர் பேஷ் புக்கில் இருந்த
பலரது வரிகளையும் ஆங்காங்கே கொய்து இணைத்துக் கவிதை
நூல் வெளியிட்டது கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தியது.
அந்தத் தொகுதியில் ஏ.எம்.தாஜ் எழுதிய
பல கவிதைகள் அப்படியே சின்னச் சின்ன மாற்றங்களுடன்
திருடப்பட்டதை அறிந்த போது இப்படியுமா
என்று அலுத்துக் கொண்டேன். இது குறித்து தமிழ்ச்
சங்கத்தில் நடந்த நிகழ்வொன்றில் ஒருவர்மிகக்
காரமாகக் கருத்துரைத்தார்.
ஒன்று
இன்னொன்றைப் பிரதிபலித்தல் என்பது அவ்வளவு பிரச்சினைக்குரியதல்ல
உதாரணமாக அன்மையில் எனது நண்பர் ஒருவர்
ஒரு ஆங்கிலக் கவிதையின் இணையச் சுட்டியை அனுப்பியிருந்தார்
அப்பிரதியைப் படித்தவுடன் அதே சாரத்தினைக் கொண்ட
இன்னொரு கவிதையும் நினைவுக்கு வந்தது. இலக்கிய நண்பர்கள்
சந்தித்துக் கொள்ளும் போது இது பற்றியும்
பேசிக் கொண்டோம் உங்கள் வாசிப்புக்காக அந்த
இரு பிரதிகளையும் தருகின்றேன்.
Phenomenal Woman
Pretty women wonder
where my secret lies.
I’m not cute or
built to suit a fashion model’s size
But when I start to
tell them,
They think I’m
telling lies.
I say,
It’s in the reach
of my arms,
The span of my
hips,
The stride of my
step,
The curl of my
lips.
I’m a woman
Phenomenally.
Phenomenal
woman,
That’s me.
I walk into a room
Just as cool as you
please,
And to a man,
The fellows stand
or
Fall down on their
knees.
Then they swarm
around me,
A hive of honey
bees.
I say,
It’s the fire in my
eyes,
And the flash of my
teeth,
The swing in my
waist,
And the joy in my
feet.
I’m a woman
Phenomenally.
Phenomenal woman,
That’s me.
Men themselves have
wondered
What they see in
me.
They try so much
But they can’t
touch
My inner mystery.
When I try to show
them,
They say they still
can’t see.
I say,
It’s in the arch of
my back,
The sun of my
smile,
The ride of my
breasts,
The grace of my
style.
I’m a woman
Phenomenally.
Phenomenal woman,
That’s me.
Now you understand
Just why my head’s
not bowed.
I don’t shout or
jump about
Or have to talk
real loud.
When you see me
passing,
It ought to make
you proud.
I say,
It’s in the click
of my heels,
The bend of my
hair,
the palm of my
hand,
The need for my
care.
’Cause I’m a woman
Phenomenally.
Phenomenal woman,
That’s me.
Maya
Angelou, “Phenomenal Woman” from And Still I Rise. Copyright ©
1978 by Maya Angelou
ஒரு காட்டாறு
ஒரு பேரருவி
ஓர் ஆழக் கடல்
ஓர் அடை மழை
நீர் நான்
கரும் பாறை மலை
பசும் வயல் வெளி
ஒரு விதை
ஒரு காடு
நிலம் நான்
உடல் காலம்
உள்ளம் காற்று
கண்கள் நெருப்பு
நானே ஆகாயம்
நானே அண்டம்
எனக்கென்ன எல்லைகள்
நான் இயற்கை
நான் பெண்
ஒரு பேரருவி
ஓர் ஆழக் கடல்
ஓர் அடை மழை
நீர் நான்
கரும் பாறை மலை
பசும் வயல் வெளி
ஒரு விதை
ஒரு காடு
நிலம் நான்
உடல் காலம்
உள்ளம் காற்று
கண்கள் நெருப்பு
நானே ஆகாயம்
நானே அண்டம்
எனக்கென்ன எல்லைகள்
நான் இயற்கை
நான் பெண்
-அனார்-
மாயா
அஞ்சலோவின் ஈத்தம் பழத்தைப் பிழிந்து
எடுத்த ஒரு துளிப் பாணி
போன்றது அனாரின் கவிதை. இதே
கவிதையைத்தான் அனார் சிகரம் தொட்ட
பெண்கள் விருது வழங்கும் நிகழ்விலும்
அனைவருக்குமாகச் சொன்னதும் குறிப்பிடத் தக்கது.
மாதிரிப்
பிரதிபலித்தல் என்பதெல்லாம் மனிதர்களுக்கு இயல்புதான். நமக்குள் வெளிப்பட அவஸ்தப்பட்டுச் சிக்குண்டிருக்கும் ஓர் உணர்வை
ஒருவரின் கவிதை அல்லது கதை
அல்லது தலைப்பு, வார்த்தை, உரையாடல் எதுவாயினும் ஒன்று வெளிக் கொணரக்
கூடும். கொலை வழக்கில் சிக்குண்டு
சிறைக்குச் சென்ற பின்னர்தான் எனக்குள்
சிக்குண்டிருந்த பலவிடயங்களை கவிதை, சிறுகதை, குறுநாவல்,
நாவல், போன்றவைகளாக நான் நினைத்துக் கொண்டு விடுவிக்க
முடிந்தது. ஹராங்குட்டி சிறுகதைத் தொகுதி மௌனப் போரும்
புன்னகை ஆயுதமும் கவிதைத் தொகுதி அடுத்துவரும்
மாதங்களில் வெளிவரவிருக்கும் இரத்தக்குளியல் குறுநாவல், எண்ட ராசாத்தி நாவல்
ஆகினவும் பிறவும் அங்கிருந்து செதுக்கியவைகள்தாம்.
இதில் முக்கிய விசயம் என்னவென்றால் ஒவ்வொரு
விடயமும் எழுதப்படுதற்கு எனக்குக் கிடைத்த மாதிரிகள் சிறைக்குள்
இருந்தவைதான். அதனால்தான் பிரதிபலிப்பும் கூட மிக வித்தியாசமானது.
அவற்றை நான் வெளிப்படுத்தத் தயங்குவதில்லை.
மேற்படி
இரு கவிதைகளையும் ஒரு தோழியின் வாசிப்புக்குவிட்டபோது
அனாரைப் பெருமிதப்படுத்திப் பேசினார். ஒரே மாதிரி இருவர்
சிந்திக்கலாம்தானே என்பதும் பிரதிபண்ணல் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அப்படி பிரதி
பண்ணப்பட்டது என்று யாரேனும் சொன்னால்
அது மிகப்பெரிய ஜோக் என்று ஒரு
காரணமும் முன்வைத்தார். இப்போதைக்கு மட்டுமல்ல எப்போதைக்கும் அந்தக் காரணத்தை நான்
வெளியிடப் போவதில்லை. அவ்வளவு சுவாரஷ்யமான காரணம்.
அதை வெளியிடுவதால் தேவையில்லாத மனவுடைகளும் பகைமையும் விளையக்கூடும்.
இங்கும்
அந்தத் தோழி சுட்டிய விடயங்களுக்கு
நானும் ஒரு லைக் போட்டுவிடுகிறேன்.
ஏனெனில் நல்ல புரிதல் அப்படித்தான்
இருக்கும். பரந்த மனதும் வஞ்சமில்லாத
எண்ணமும் உடையவர்களிடமிருந்து மட்டுமே வெளிப்படும் சாரம்சம்
அது.
அன்மையில்
அனாரின் கவிதைகள் திருடப்பட்டது குறித்து ஆதாரங்களுடன் வாதப்பிரதிவாதங்கள் உலாவந்தன. அதை ரியாஸ் குரானா
பொது வெளியில் காத்திரமாக முன்வைத்துச் செயலாற்றியதும் பின்னர் அனார் அதுகுறித்து
பெருவிளக்கம் கொடுத்து ஊடறு ரஞ்சியின் பதிவுக்கு
வரிக்கு வரி பதில் அளித்ததும்
நடந்தது. அனாரின் முகப்பக்கத்தில் பலரதும்
பல்வேறுபட்ட கருத்துக்களை முன்வைத்து பதிப்பு மற்றும் தொகுப்பு
ஒழுக்கம் பற்றியும் கருத்தாடல் காத்திரமாகவே இடம்பெற்றது. இதில் ஒரு உண்மையை
நிறுவுவதற்கு பலர் முன்வந்ததும் கருத்தாடியதும்
மிக ஆரோக்கியமான விடயம். அத்தோடு நாங்களும்
இருக்கிறோம் என்று கருத்து முன்
வைத்தவர்களும், அனார் மீது கொண்ட
அன்பின் உந்துதலாலும் ரஞ்சி மீது கொண்ட
கோபத்தின் உந்துதலாலும் கருத்துரைத்தவர்களும் உண்டு. எப்படியோ மலையகப்
பொண்கள் எழுதிய கவிதைகள் அடங்கிய
தொகுதியில் அனாரின் கவிதை வேறு
ஒருவரால் எடுத்தாளப்பட்டது என்பது மட்டும் நிருபனமானது
மகிழ்ச்சிக்குரியது. ஆயினும் ரொம்ப நாளாகவே
ஒருவிடயம் இடித்துக் கொண்டிருந்தது அது அனார் கவிதைகள்
குறித்து ஓட்டமாவடி அறபாத் சில இடங்களில்
முன்வைத்த பின்னூட்டங்கள்தான்.
அனார்
பற்றியும் அறபாத் பற்றியும் சில
அறிமுகக் குறிப்புக்களை நான் பகிர்ந்து கொள்ள
வேண்டும். 2009ம் ஆண்டு போதைப்
பொருள் வியாபாரம் மற்றும் வியாபாரிகள் தொடர்பான
இரகசியத் தகவல்களைச் சேகரிக்கும் பணியில் தலை நகரில்
ஈடுபட்டுக் கொண்டிருந்த மிக முக்கியமானதும் நெருக்கடியானதுமான
காலப்பகுதியில்தான் தீ நிழல் திரைப்படத்தின்
வெளியீட்டுப்பணிகளையும் கவனித்து வந்தேன். அப்போது நேத்ரா அலை
வரிசையில் என்னுடைய நேர்காணல் ஒளிபரப்பானது அதன் பின்னர் வந்த
தொலை பேசி அலைப்பில் மறு
முனையில் இருந்தவர் அனார். ஈரானியத்திரைப்படங்கள் பற்றியும் திரைப்பட
அழகியல் பற்றியும் நான் பேசிய கருத்துக்களின்
மீதான கருத்தாடலாக அது இருந்தது. பின்னர்
தனக்கு ஈரானியத் திரைப்படங்கள் வேண்டும் என்றும் அவற்றைப் பார்ப்பதற்கு
தந்துதவ முடியுமா என்றும் கேட்டார் அவரது
ஆர்வ மிகுதிக்காக ஏழுபடங்கள் வரைத் தேர்வு செய்து
அவற்றை எப்படி கிடைக்கச் செய்வது
என்று கேட்ட போது எஸ்.எல்.எம்.ஹனீபாவுக் கூடாகக் கொடுத்து அனுப்புமாறு சொன்னார். நானும் அவ்விதமே செய்தேன்.
அதிலிருந்து அடிக்கடி அனார் கதைத்துக் கொள்வார்
இதுவரை அவரை நேரில் சந்தித்தது
கிடையாது. அதன் பின்னர் அடிக்கடி
வெளிநாட்டுப் பயணங்கள் வேலைப்பலு யுத்தம் முடிந்த தறுவாயில்
நிகழ்தேறிய அம்சங்களின்பலான கவனக்குவிப்பு என்று காலம் வெறிநாய்
போலத் துரத்திக் கொண்டே இருந்தது. அதனால்
பலரதும் தொடர்புகள் அறவே அற்றுப் போயின
அனாரின் தொடர்பும் அப்படித்தான்.
அறபாத்
எனது பிரதேசத்தைச் சேர்ந்தவர். ஆயினும் அவரது எழுத்துக்களுக்கூடாகவே
எனக்கு அறிமுகமானவர். சுயம் என்றொரு பத்திரிகை
வெளிவந்து முதல் இதழோடு நின்று
போனது அதன் பின்னர்தான் அறபாத்துடன் எனக்கு
மிக நெருக்கம் உண்டானது. அது பல தளங்களிலும்
விரவிப் பயணித்தது. தீ நிழல் திரைப்படத்திற்காக
1000 ரூபாய் டிக்கட் எடுத்தவர்களில் அறபாத்தும்
ஒருவர். அறபாத்தின் மீதிருந்த பேரபிமானம் சிறைக்குச் சென்று விடுதலையான பின்னிருந்து
இல்லாது போனது. எனது விடயத்தில்
அறபாத்தின் வார்த்தைகளும், எழுத்துக்களும் தேடல் அற்றதாய் பைத்தியகாரன்
வீசும் கற்கள் போல இலக்கின்றிப்
பயணிக்கத் தொடங்கிய போது தோன்றிய மோதல்
அது. ஆயினும் காலம் சில
விடயங்களைத் தீர்மானிக்கும் அப்போது அறபாத் சத்தியத்தின்
முன்னால் தலைகுணிந்து கைகட்டி நிற்பார் அது
வரைக்கும் அவரது மனசாட்சியொன்றே என்
மீதான பாய்சலை வழிநடாத்தப் போதுமானது.
இப்போதைக்கு
இந்தளவு அறிமுகம் போதும். இனி விடயத்திற்கு
வருவோம். அனாரின் கவிதைகள் தொடர்பில்
அறபாத் முன்வைக்கும் கருத்துக்களும் சரி இடுகின்ற பின்னூட்டங்களும்
சரி, பொடி வைத்துப் போகின்ற
ஒரு போக்கினை நான் அவதானித்திருக்கிறேன். மாதிரிக்கு இரண்டு
தெளிவான அம்சங்களை இங்கு முன்வைக்கலாம் அவைகள்
உறுதிப்படுத்துவதற்காகப் படங்களாக
இணைக்கப்பட்டுள்ளன. அனாரின் கவிதைகள் மீது
அறபாத்திற்குக் தீராத காதல் இருக்கிறது
என்பதை மறுதலிக்க முடியாது அந்தளவுக்கு வரிக்குவரி படித்து நினைவிலிருத்திக் கொள்ளும்
நேசம் அவரிடம் தாராளமாக இருக்கிறது.
அறபாத்தின்
கூற்று 01: அனாரின்
மீது அபாண்டம் சுமத்தியுள்ள ரஞ்சியின் அபத்தம் ஆச்சரியமாகவுள்ளது. படைப்பாளிகளின்
பின்புலத்தில் பல முகங்களை கண்டவன்
நான். இது ஆபத்தான அகழி.
இதை ரஞ்சி தோண்டியிருக்கக்கூடாது. ஏனெனில் அதற்குள்
விழுந்து கொண்டிருப்பதைப் பார்க்கின்றேன். அனாரின் எழுத்துக்கு சரியான
பதிலை தர வேண்டும் என
சிலர் கோரிக்கை விட்டிருக்கின்றனர். சரியான ஆளிடம்தான் சரியை
எதிர்பார்க்கலாம்.ஒரு வேளை அனாரின்
மீது இன்னும் சில அபாண்டங்களை
கட்டவிழ்த்து விடலாம். நான் அறிந்தவரை அனார்
யாரின் கவிதையையும் நகலெடுத்து எழுதுபவரல்ல. அனாரின் கவிதைகளை நகலெடுத்து
சிலர் கவிதை எழுதுவதை வரிக்கு
வரி நான் சுட்டிக்காட்டியிருக்கின்றேன். உண்மையை சொல்வதற்குப்பயப்பட்டாலும் ஒருவர் உண்மையை
சொல்லும் போது மௌனமாக இருப்பதும்
வன்முறையே. அதனால்தான் அனார் சொல்லும் வார்த்தைகள்
அத்தனையையும் உண்மை. அவர்பினை வெளிக்கொணர்வதற்கு
முன் நண்பர்களிடம் ஆலோசனை பெறுவது அவரின்
இயல்பு அவ்வாறே ரஞ்சியினுடைய தொடர்புகளையும்
அக்காலத்தில் அபிப்பிரயமாக கேட்டிருக்கின்றார். அதற்கு அனார் எடுத்த
முடிவினை நாங்கள் நல்லதென்று ஊக்கப்படுத்தியிருந்தது
நினைவில் நிற்கிறது. சக எழுத்தாளர்களை கௌரவிக்கும்
மனப்பாங்கு வரும்வரை நம் எழுத்துக்கள் வெறும்
காட்டில் எறித்த நிலாதான்.
அறபாத்தின்
கூற்று 02: அனார் நீங்கள் தவமிருந்து
கவிதை எழுதுவீர்கள். திடீரென யாருக்காவது சிறகு
முளைக்க உங்கள் கவிதைகளை நகலெடுத்தல்லவா
பறக்கத் தொடங்குகின்றார்கள். வெட்கம் கெட்டதுகள் சுயமாக
கருத்துச் சொல்லவும் முடியாது, சுயமாக கவிதை எழுதவும்
தெரியாது. இவர்களெல்லாம் கவிதாயினிகளாக வலம் வருவது ஆசியாவின்
ஆச்சரியங்களில் ஒன்று.
அறபாத்
யாரையோ இலக்கு வைத்துத் தாக்க
முற்படுகின்றார் பின்னர் தயங்கித் தயங்கித்
தாக்குகிறார்;. (சிறகு முளைக்க – கவிதாயினி)
என்று இந்தியப் பத்திரிகைகளில் கிசு கிசு எழுதுபவர்
போல இரண்டு தகவல்களைத் தருகின்றார்
இதையெல்லாம் வைத்து இணைத்துப் பார்க்கும்
போது ( சிறகு முளைத்த பெண்
- ஸர்மிளா ஸெய்யத்) என்ற இணைப்பு எனக்குக்
கிடைக்கிறது அடுத்து இது தொடர்பில்
அறபாத்தின் காட்டம் மிகவும் அதீதமானது
'வெட்கம் கெட்டதுகள், சுயமாக கருத்துச் சொல்லவும்
முடியாது, சுயமாக கவிதை எழுதவும்
தெரியாது' இதை வைத்துப் பார்க்கும்
போது அவர் சாடுவது ஸர்மிளாவைத்தான்
என்று உறுதியானது. இது தொடர்பில் ஸர்மிளாவுடன்
தொடர்பு கொண்டு
கேட்டபோது அறபாத் இப்படியொரு கருத்தை
பின்னூட்டமாக இட்டிருக்கிறார். உங்கள் கவிதைகள் அனாரின்
கவிதைகளை நகலெடுத்து எழுதப்பட்டவைகளாகச் சொல்கிறார் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
அதற்கு
ஸர்மிளாவின் பதில் "நாம் கண்டு
கொள்ளத் தேவையில்லை. எனக்கு இவை எதற்குமே
பதில் சொல்ல விருப்பமில்லை. என்
கவிதை நூல் காலச்சுவடு வெளியீடு.
காலச்சுவடு அனாரின் நூலையும் போட்டுள்ளது.
அதுமாத்திரமல்லாது எனது கவிதைகைளை காலச்சுவடு
கவிஞர் சுகுமாரனைக் கொண்டு பகுத்தாய்ந்த பின்னர்தான்
வெளியிட்டது. அனாரின் கவிதைகள் முழுவதையும்
வாசித்த சமயவேல் இம்மாத காலச்சுவடில்
விமர்சனம் எழுதியிருக்கிறார். சமயவேல் எழுதிய
விமர்சனத்தில் அனாரின்
கவிதைகளின் சாயல் இருப்பதாகக் கூட
குறிப்பிடவில்லை"
இதற்குப்பின்னர்
அறபாத்தின் கருத்து தொடர்பில் ஒரு
கேள்வியை இங்கு முன்வைக்க முடியும்
அந்தளவுக்கு
காலச்சுவடு பதிப்பகத்திற்குப் பஞ்சம் வந்துவிட்டதா? பிரதிபண்ணிய
கவிதைகளைக்கூட கண்ணை மூடிக் கொண்டு
சிறகு முளைத்த பெண் என்ற
பெயரில் தொகுதியாக வெளியீடுகின்ற அளவுக்கு? அங்குள்ள கவிஞர்களுக்கெல்லாம் கிறுக்கு முத்திவிட்டதா? அறபாத்திற்குத் தெரிந்த உண்மை கவிஞர்
சுகுமாரன், கவிஞர் சமயவேல், சுரேஷ்குமார
இந்திரஜித்? ஆகியவர்களுக்கெல்லாம் தெரியாமல் போய்விட்ட மர்மம் என்னவோ?
சரி
அறபாத் நீங்கள் சொல்வது போல
'அனாரின் கவிதைகளை நகலெடுத்து சிலர் கவிதை எழுதுவதை
வரிக்கு வரி நான் சுட்டிக்காட்டியிருக்கின்றேன்.'
என்கிறீர்கள். யாருக்கு? எப்போது? எங்கே?
என்று எங்களுக்கும் புரியும்படியாகச் சொல்லுங்கள். உங்கள் பார்வையில் ஸர்மிளாதான்
என்றால் தெளிவாக அவற்றை முன்
வையுங்கள். அவரல்லாது வேறு யாரும் என்றால்
அதையும் முன்வையுங்கள். உங்களுக்குப் பிடிக்கவில்லைனெ்றால் இலக்கியத்தின் பெயரால் திருட்டுப்பட்டம் சூட்டத்
தேவையில்லை அது ஒரு இலக்கிய
வாதிக்கு அழகுமல்ல நியாயமான இலக்கிய விமர்சனம் இல்லாமல்
தான்தோன்றித்தனமாக இதை முன்வைத்திருப்பீர்களாயின் உங்கள் வார்த்தைகளில்
சொல்வதானால் சக எழுத்தாளர்களை கௌரவிக்கும்
மனப்பாங்கு வரும்வரை நம் எழுத்துக்கள் வெறும்
காட்டில் எறித்த நிலாதான்.
இப்படியும்
சொல்கிறீர்கள் அப்படியும் செய்கிறீர்கள்? நீங்க நல்லவரா கெட்டவரான்னு
புரிந்து கொள்ள முடியல்ல.
ஆனாலும்
உங்கள் எழுத்துக்கள் மீதான எனது உண்மையான
காதலை எப்போதைக்கும் மறுதலிக்க முடியாது.
ஆக
நீங்கள் பதில் சொல்லுவீர்கள் என்று
திடமாக நம்புகின்றோம் அனார் கவிதைகளைத் திருடிய திருடிகளை
நீங்கள் இயத சுத்தியோடு தோலுரித்துக்
காட்ட வேண்டும் அது இலக்கிய உலகுக்கு
நீங்கள் செய்யும் மற்றுமொரு மகத்தான பணி. அதுமட்டுமல்ல அனார் பெயரால் வாழ்ந்து
கொண்டிருக்கும் அல்லது அனார் கவிதைகளின்
போக்கில் வரி பிதுக்கிப் பிழைப்பு
நமாத்தும் நாசாகாரப் பேர்வழிகளிடமிருந்து அனாரின் கவிதைகளைப் பாதுகாத்த
பெருமையும் உங்களையே சாரும்.
பொறுத்திருந்து
பார்ப்போம் அறபாத் இனி என்ன
செய்யப் போகிறார் என்று
பதிலா?
பம்மலா?
இலக்கிய சண்டை இது . நான் நினைக்கேன் இதுக்கு முற்றுப் புள்ளி இருக்காது.
ReplyDeleteஉண்மைதான் நிஃமா. சிலர் கள்ளத்தனமாக ஆரம்பித்து வைக்கிறார்கள் அதை யாராவது என்னைப் போன்ற ஒரு கிறுக்கன் பற்றிக் கொள்கிறான்.
Deleteஇலக்கிய சண்டைதான் ,என்னவோ பெண்கள் பேய் எல்லாம் ஞாபகம்வருகிறது
ReplyDelete