ஹறாங்குட்டி - பலவீனங்களால் கட்டமைப்பட்ட ஒரு விம்பம்
மன்சூர் அப்துல் காதிர்
(இது படிகள் சஞ்சிகையிலும் பிரசுரிக்கப்பட்டது)
I
ஆவணவியலில் அதீத ஆர்வத்தைக் கொண்டுள்ளவரும் அத்துறையின் நுட்பங்களில் பரிச்சயமுள்ளவருமான எழுத்தாளர் முஸ்டீன் தற்போது சிறுகதைத் தொகுதி ஒன்றை வெளியீடு செய்துள்ளார்.
இலங்கை முஸ்லிம் இனத்துவ அரசியலின் பல்வேறு பரிமாணங்களையும் புரிந்த பின்னர்தான் அது பற்றிய படைப்புக்களை உருவாக்குதல் வேண்டும் என்ற கருத்து நிலையை அழகியல் முழுமைவாதிகளும் அமைப்பியலாளர்களும் சிலவேளை நிராகரிக்கவே செய்வர். இந்த நிராகரிப்பை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளக்கூடிய நுட்பத்தை நன்கு புரிந்து கொண்டவராய் எழுத்தாளர் முஸ்டீன் தனது படைப்புகளை உருவாக்கியுள்ளார் என்ற கருத்து இதனை வாசிக்க ஆரம்பித்த உடனேயே ஒரு வாகசகனிடம் உருவாக்கத் தொடங்கி விடுகின்றது.
முழுவதும் வாசித்து முடித்த பின்னர் கருத்தியல் ரீதியான பக்கச் சார்புகளைப் புறந்தள்ளி விட்டுஇ தன்னந் தனியனாய் நின்று சிந்துத்துப் பார்த்தபோதும் கூட அழகியல் முழுமை வாதிகளும் அமைப்பியல் வாதிகளும் (structuralists) புனைகதைகளின் உள்ளடக்கம் சார்ந்த கருத்தியல் நிலைப்பாட்டில் செய்த நிராகரிப்பை முஸ்டீன் தனக்கு பெரிதும் பக்கபலமாகவும் சாதமமாகவும் ஆக்கிங்கொண்டுள்ளார் என்ற கருத்தே உறுதிப்படுத்துகின்றது.
இத்தொகுதி மீதான இவ்விமர்சன கருத்துருவாக்கம் படைப்பியலிலும் அழகியலிலும் முழுமை தொடர்பான உடன்பாடதோர் அபிப்பிராயத்தை நான் கொண்டிருப்பதாக பலர் விளங்கிக்கொள்ளும் ஓர் ஆபத்தும் மேற்படி எனது கூற்றினால் உருவாக் கூடும். ஆனால் தொடக்கத்திலேயே முடிவொன்றை பிரஸ்தாபிக்க வேண்டிய அவசியம் இக்கட்டுரைக்கு இல்லை.
அத்தகைய ஒரு சிந்தனைசார் அசம்பாவிதம் விமர்சகனின் எண்ணக் குவியலிடையே பீறிட்டு எழுவதினால் படைப்புக்களினதும் படைப்பாளரினதும் பலமான அம்சங்களை விடவும் அவற்றினதும் அவரினதும் பலவீனமான அம்சங்கள் மிகைப்படுகின்றன என்ற மற்றொரு யதார்த்தத்தை இங்கு புறந்தள்ள முடியாதுள்ளது.
ii
இதனால் இத்தொகுதி தொடர்பான என்னுடைய அபிப்பிராயங்களை நிரற்படுத்தும்போது எனக்குள் வலியுறுத்தப்படும் பலவீனமான அம்சங்களை முதலிலும் அது நியாயப்படுத்தப்படுமாற்றை அதனைத் தொடர்ந்தும் அதன் பின்னர் இவ்வாசியரின் எழுத்துக்கு உருவாகவுள்ள வாய்ப்புக்களைப்பற்றியும் இவ்வெழுத்தின் மூலம் சமூகத்தின்மீது திணிக்கப்படப்போகும் அச்சுறுத்தல்கள் பற்றியும் இங்கு வழமைக்கும் இயற்கைக்கும் முறையியலுக்கும் மாறாக எடுத்துரைக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது.
01. சிறுகதை அமைப்பியல் மற்றும் அழகியல் பற்றிய எண்ணக்கரு:
எல்லோரும் அறிந்திருப்பதுபோல சிறுகதை ஒரு மொழி சார்ந்த கலைப்படைப்பு ஆகும். புனைகதை இலக்கியத்துள் பல் வேறு தரப்பான வாசகர்களையும் உள்வாங்கும் சக்திவாய்ந்த ஓர் இலக்கியப்படைப்பாக இது பார்க்கப்படுகின்றது. மொழிசார்ந்த அழகியல் ஊடகங்களுள் சிறுகதைக்கு ஓர் உன்னதமான ஸ்தானம் வழங்கப்படுகின்றது. அதற்கான காரணம் பல்வேறு வயதுப் பகுப்புக்களையும்இ பல்வேறு அறிவுசார் மட்டங்களையும் சேர்ந்த வாசகர்களை இது கொண்டிருப்பதாகும்.
சிறுகதை எனப்படும் மொழிசார் கலைப்படைப்பு தனது அழகியல் முழுமைத் தன்மையில் காண்பிக்கின்ற வெற்றியானது அதன் உள்ளடக்கம் மற்றும் ஏனைய கருத்தியல்சார் துறைகளில் தான் காட்டும் அக்கறைகளை விடவும் முக்கியமானதாகும். ஓர் அழகியல் சார்ந்த படைப்பானது 'தான் ஓர் அழகியல் படைப்பு என்பதில் முழுமை பெற்றிருக்கின்றதா' என்பதைப் பொறுத்தே அந்தப் படைப்பின் வெற்றியும் தோல்வியும் தங்கியிருக்கின்றது.
இவ்வடிப்படையில் பார்க்கும்போது முஸ்டீன் படைத்தளித்துள்ள இத்தொகுதியில் பின்வரும் அம்சங்களை இங்கு கோடிட்டுக் காட்ட முடியும்.
(அ) அழகியல் ரீதியான அம்சங்களுள் பிதானமானது மொழிக் கையாளுகை சம்மந்தமாக ஆசிரியருக்கு உள்ள திறனும் பரிச்சயமும் ஆகும். சிறுகதையின் மொழியானது நாவல் மற்றும் ஏனைய புனை கதைகளின் மொழிக் கையாளுகையில் நின்றும் பெரிதும் வேறுபடுகின்ற ஓர் அம்சமாகும். அதாவது ஆற்றல் வாய்ந்த ஒரு கவிஞனுக்குரிய மொழிச் சிக்கனமும் அந்த மொழிக் கையாளுகையினூடே அவன் காட்சிப்படுத்த நினைக்கின்ற பாத்திரங்களின் உளவியல் பரிமாணமும் ஒரு கைதேர்ந்த சிற்பிக்கு உரித்தான வெளிப்பாட்டுத் திறன்களுடன் ஒரே நேர் கோட்டில் வந்து சங்கமிக்குமாயின் அந்த சிறுகதையானது மொழிக்கையாளுகை ரீதியான அழகியலின் முழுமையை அடைந்து விட்டதாகக் கருதப்படலாம்.
இவ்விரு அம்சங்களும் இங்கு சிரத்தையுடன் வடிவம் பெற்றுள்ளதா என்ற கேள்விக்கு திருப்திகரமான ஒரு பதிலைத் தேடுவது சிரமமாக உள்ளது. ஏனெனில் ஆசிரியரின் மொழிக் கையாளுகையானது தங்கு தடையற்ற ஒரு பிரவாகமாய் பெருக்கெடுத்து வரும் அதே வேளை சிறுகதையின் சிக்கனமான மொழிக்கையாளுகை என்பது ஆசிரியன் பிரக்ஞைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கவில்லை. வார்த்தகைளில் வீறிட்டெழும் கருத்தாக்கமானது அவற்றின் வீண் விரயத்தினால் அதன் உயிர் நைந்து போகின்ற ஒரு தன்மையை கதையின் ஓட்டமெங்கிலும் ஏற்படுத்தி விடுகின்றது.
ஆதலினால் இவரிடம் இயல்பாகக் காணப்படும் ஆற்றல் மிக்க மொழி ஆளுமையும் அதன் மூலம் இயல்பானவே பரிணமிக்க வேண்டிய அழகியல் அம்சமும் சொற்ளால் 'மேக்அப்' பண்ணப்பட்டு தான் கொண்டுள்ள கருத்தியலை நோக்கிய நகர்வுக்கு அனாவசியமாக பயன்படுத்தப்படுகின்றது என்ற ஓர் அகவயப்பட்ட பிரக்ஞையை இங்கு ஏற்படுத்தி விடுகின்றது.
(ஆ) மொழிக் கையாளுகையில் காணப்பட்ட அதீத சிரத்தையின்மை பாத்திர வார்ப்பு அளவில் இல்லை. பெரும்பாலான பாத்திரங்கள் படைக்கப்பட்டிருப்பதனை அதன் கருத்தியல் நேர்மையைப் பிரதானப்படுத்தாது நோக்குகையில் அவற்றின் உணர்ச்சி சார் வெளிப்பாட்டுத்திறனும் அதன் படிமப்பாங்கான காட்சிப்படுத்தலும் புறந்தள்ளத் தக்கதன்று. ஓர் ஆவணவிலாளன் தனக்கு அதிலுள்ள தேர்ச்சியினை அடிப்படையாகக் கொண்டு சிறுகதை ஒன்றைப் படைத்தால் அதன் படிமப் பாங்கிலும் காட்சிப்படுத்துதலிலும் காணப்படும் நேர்த்தி முஸ்டீனிடம் பிரதிபலிக்கவில்லை என்று கூறுவதும் அபத்தமாகும்.
ஆனால்இ கருத்தியல் அடிப்படையிலான ஆடம்பரமான மொழிசார் பரோபகாரத் தன்மை அல்லது வீண் விரயம் பாத்திர வார்ப்பை பாதிக்கவில்லை என்றும் நிதானித்துச் சொல்லவும் முடியாதுள்ளமை இத்தொகுதியின் மற்றொரு அம்சமாகும். பாத்திரங்கள் செதுக்கப்பட்டிருப்பதில் சில மொழிசார்ந்த உள்ளக பிசிறல்கள் இங்கு இரண்டறக் கலந்து காணப்படுகின்றன. இப்பலவீனமானது ஒன்றில் ஒன்று தங்கிய சங்கிலித் தொடராக வெளிப்படக்கூடிய ஆபத்தைச் சார்ந்தது. ஓன்றைத் தவிர்த்தால் மட்டுமே மற்றதையும் தவிர்த்திருக்க முடியும்;. இந்த ஆபத்தை முஸ்டீனின் மொழிப்பிரவாக அலை ஏற்படுத்தியுள்ளது.
(இ) முஸ்டீனின் கதை சொல்லும் உத்தியானது அந்தக் கதையின் மையப் புள்ளியில் இருந்தே பெரும்பாலும் ஆரம்பிக்கின்றது. அதாவது மையப் புள்ளியை காட்டிவிட்டு அதை நோக்கி கதையை நகர்த்திச் செல்லுகின்ற உத்தியானது பெரிதும் இலக்கியத்தின் பயன்பாட்டு வாத்ததை முதன்மைப்படுத்தும் உத்தியாகும். இலக்கியப் பயன்பாட்டுவாதக் கோட்பாட்டாளர்கள் இலக்கியம் படைக்கின்ற தொழிலில் ஈடுபட்டாலும் கூட பெரும்பாலும் இலக்கியத்தின் படைப்பியல்சார் பிரதான பாதையை விட்டு நெடுந் தூரம் தன்னிச்சiயாகவே பயணிக்கின்ற ஆபத்தை அவர்களை அறியாமலேயே விலைக்கு வாங்கி விடுகின்றனர். இத்தகைய ஒரு போக்கு முஸ்டீனிலும் தோற்றம் காட்டுகின்றது. இது பொதுவாகவே அழகியலைச் சிரச்சேதம் செய்துவிடும் ஆடம்பரங்களாகும்.
(ஈ) சிறுகதையின் அளவுகோல்இ கட்டமைப்புஇ சட்டகம் அல்லது பௌதிக உருவம் பற்றிய எண்ணக்கருவை எடுத்த எடுப்பிலேயே நிராகரிக்க முடியாது. ஏனெனில் அதற்கான பௌதீக வடிவமைப்புப்பற்றிய தவிர்க்க முடியாத ஒரு வரைபு இருக்கின்றமைதான் இன்றைய யதார்த்தமாகும். அதனை இரண்டாக வகைப்படுத்தி நாம் சுருக்கமாகக் கூற முடியும். ஓன்று உருவம் பற்றிய சட்டகம். மற்றது உள்ளடக்கம் பற்றிய சட்டகம். எழுத்தாளர் முஸ்டீன் இந்த இரண்டு அம்சங்களிலுமே புதுமை செய்யும் ஆர்வத்தோடு தனது கதைகளை நகர்த்திக் கொண்டு சென்றாலும் மேற்படி இரண்டு அம்சங்களிலும் தனக்கு இன்னும் பரிச்சயம் தேவை என்பதை சாதாரண வாசகனிடம் இல்லாது போனாலும் விமர்சகனிடம் சொல்லிக்கொண்டிருக்கின்றார்.
இதனை இன்னும் விளக்கமாகச் சொன்னால் உருவம் பற்றிய வரையறையை அவர் திட்டமிட்டுக் கொண்டே கதையை நகர்த்திக்கொண்டு செல்லுகின்றார் என நாம் எடுத்துக் கொண்டாலும் கதையின் நடுவிலும் முடிவிலும் அபரிமிதமாக அதனை வளர்த்துக்கொண்டு சென்று தன்னுடைய உணர்ச்சிகளுக்கக் கடிவாளமிடத் தவறிவிடுகின்றார். நகர்த்திச் செல்லப்படும் கெமறாவுக்கும் ஸ்ரில் கெமறாவுக்கும் இடையில் காணப்பட்ட பாரிய வித்தியாசத்தை அவர் புரிந்துகொண்டதாகத்த தெரியவில்லை. இது இவ்வாசிரியரிடம் காணப்படும் பாரிய குறைபாடாகும். கதையின் உருவத்தில் மட்டுமன்றி உள்ளடக்கத்தில்கூட இக்குறைபாடானது காணப்படாமல் இல்லை. சில கதைகள் சிறுகதைத் தன்மையை விட நாவலுக்கான எத்தனைங்களைக் கொண்டிருப்பதுபோன்ற ஒரு குழப்பத்தன்மையும் வாசிப்பாளர்களிடையே உருவாக்கக் கூடும்.
02. வெளிப்பாட்டுத்திறன் பற்றிய எண்ணக்கரு:
அழகியலுக்கு அடுத்ததாக இவ்வாசிரியரின் வெளிப்பாட்டுத்திறன் பற்றிய எண்ணக்கரு கருத்திற் கொள்ளப்படத்தக்கது. வெளிப்பாட்டு அம்சம் தொடர்பில் வாசகர்களை உணர்ச்சி வசப்படுத்தலோடு சம்மந்தப்படுத்திப் பார்க்கும் ஓர் அபிப்பிராயம் நமது இலக்கிய உலகில் காணப்படுகின்றது. ஆனால்இ அது ஓர் இலக்கியக்காரனின் வேலையல்ல. ஓர் அரசியல் வாதியால் அதனை இன்னும் கச்சிதமாகச் செய்து முடிக்க இயலும். கலையைக் காசாக்கும் ஓர் இலக்கிய விபச்சாரி இன்னும் கவர்ச்சிகரமாக அதனைச் செய்து முடிப்பான்.
அவ்வாறன்றி இலக்கியம் அறிதலை நோக்கிய ஆர்வத்தை ஏற்படுத்துகின்ற ஓர் ஆரோக்கியமான பணியையே செய்கின்றது என்பது உலகப் பிரசித்தி பெற்ற இலக்கியங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அறிவார்ந்த ஒரு காட்சிப்படுத்தலின் ஊடாக வாசகனை உணர்ச்சிப்படுத்தலுக்குப் பதிலாக அறிதலின் கிளர்ச்சசிப்படுத்தலை உலகின் சக்தி வாய்ந்த இலக்கியங்கள் செய்திருக்கின்றனஇ செய்து கொண்டும் இருக்கின்றன.
வெளிப்பாட்டுத் திறன் என்பது படைப்புலகின் நுட்பமான (வநஉhழெடழபல) அம்சங்களுடன் தொடர்பு பட்டதாகும். எல்லா ஆக்கங்களினதும் வெற்றியும் தோல்வியும் சிருஷ;டி கர்த்தா அப்படைப்புக்கு தான் உபகரணமாகக் கையாண்ட வநஉhழெடழபல யுடன் சம்மந்தப்பட்டும் தீர்மானிக்கப்படுகின்றன. இந்த வகையில் முஸ்டீன் கையாண்டுள்ள வெளிப்பாட்டு நுட்பங்கள் அவரை ஒரு ஜனநாய இலக்கியத்தின் ஜாம்பவானாகக் காட்டிக்கொள்ள சிலவேளை துணைபுரிந்தாலும் கூட அறிவர்ந்த இலக்கியத்தின் பரிமாணங்கள் உள்வாங்கப்பட்ட படைப்புக்களை வெளியே கொண்டு வர அவருக்குத் துணைபோகவில்லை.
சாரு நிவேதிதாவின் ஸீரோ டிக்றி என்ற நாவலுக்கு இந்திரா பார்த்தசாரதி பிற்காலத்தில் விமர்சனம் செய்யும்போது 'ஜூகுப்ஸம்' என்ற ஒரு ஸமஸ்கிருதப் பதப்பிரயோகத்தைச் சுட்டிக்க காட்டி ஜூகுப்ஸம் என்பது தமிழில் வழங்கும் 'இழிவரல்' என்பதன் அர்த்தத்தை விடவும் கூடுதலான அர்த்த புஷ;டியுடன் உள்ளது என்றும் விளக்கினார். ஸீரோ டிக்றி ஜூகுப்ஸத்தின் வெளிப்பாடு போன்ற ஒரு பரபரப்புத் தன்மையினை ஏற்படுத்தக் கூடியது என்றும் அவர் நிறுவிக்காட்ட முன்வந்தார். இக்கூற்றுக் கூட ஒரு வகையில் மனவெழுச்சி (நஅழவழையெட) சார்ந்த அபிப்பிராயம் என்றோ அல்லது குழும உணர்ச்சியால் கிளர்ந்த அபிப்பிராயம் என்றோ கருதுவோரும் உள்ளனர்.
சல்மான் றுஷ;டி கூட கேவலமான ஒரு விபச்சாரத்தையே தனது சாத்தனிய வசனங்களில் வெளிப்பாட்டு அம்சமாக சாதித்துக் காட்டினார். அது அவருக்கு விருதுகளையும் டொலர்களையும்
அள்ளி வளங்கின. மதம் சம்மந்தமான குரோதம் தலைதெறிக்க உணரப்படும் காலமெல்லாம் ஒரு குறிப்பிட்ட மக்கட் பிரிவினர் அவரை தலைமேல் தூக்கிக் கூத்தாடவே செய்வர். அதற்காக அவர் சாத்தனிய வசனங்களின் மூலம் ஏற்படுத்திய கிளர்ச்சி ஒரு நீலப்படத்தின் கெமெறா மேன் ஏற்படுத்திய மனக் கிளைர்ச்சியை விடவும் உயர்வானதாக நாம் கருத வேண்டியதில்லை.
ஆனால் படைப்பாளனின் வெற்றி என்பது அவன் வெளிப்பாட்டுத் திறனுக்குக் கிடைக்கும் வெற்றியே என்று நாம் மொழிபெயர்த்துக் கொள்வதில் தவறில்லை. இப்படிப் பார்க்கும்போது ஜூகுப்ஸத்தை விடவும் தற்போதைய அறிவியல் உலகில் பேசப்படுகின்ற emotional intelligence ஊடான ஒரு படைப்பியல் வெற்றியையே இலக்கியத்தின் வெற்றி என்று நாம் கருதுதல் சாத்தியமாகலாம்;. இந்த அடிப்படையில் பார்க்கும்போது பயன்பாட்டு வாதிகளை சற்றேனும் அனுசரித்துப்போக வேண்டிய ஒரு தேவையும் படைப்பாளிக்கு விதியாக்கப்படுகின்றது.
எந்த வகையான எல்லைகளைக் கடந்து போனாலும் அல்லது எத்தகு கோட்பாட்டாளர்களை அனுசரித்துக் கொண்டு போனாலும் படைப்பும் அதன் சிருஷ;டி கர்த்தாவும் வெளிப்பாட்டுத் திறனில் கொண்டுள்ள தேர்ச்சி நிலைதான் படைப்புலகுக்கான அவனின் ஆயுளைத் தீர்மானிக்கின்றது. முஸ்டீனைப் பொறுத்த வரையில் ஒரு ஜனரஞ்சகமான வெளிப்பாட்டுத்திறன் உள்ளவராகவே அவர் தன்னைக் காட்ட முயற்சிக்கின்றாரே தவிர அறிவார்ந்த ஒரு விமர்சகனின் பாரம்பரியமான அல்லது அதனைக் கடந்த கவன ஈர்ப்பை அவர் பெறுவதற்கு இன்னும் தனது வெளிப்பாட்டுத் தன்மையை அதிகரிக்க வேண்டிய ஒரு தேவை தென்படுகின்றது.
03. கதைப்பின்னல் என்ற நுட்பம்:
வெளிப்பாட்டு அம்சத்தில் பின்னடைவு காணப்படின் அது கதைப்பின்னலிலும் செல்வாக்குச் செலுத்துவதற்கான சாத்தியப்பாடுகளே பெருமளவுக்கு வெளிப்பட்டு நிற்கும். இந்த அம்சத்தை அல்லது பலவீனத்ததை நாம் கண்டு பிடிக்க பெருமளவுக்கு அவஸ்தைப்படத் தேவையில்லை.
முஸ்டீன் கூட இவ்விதிக்கு விலக்காக முடியாது. இத்தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ள ஏராளமான கதைகளில் கதைப்பின்னலின் பலவீனமான அம்சங்கள் வெளிப்பாட்டுத்திறனின் குறைபாட்டினால் ஏற்பட்டதே.
அத்துடன்; கதையின் மையப்பகுதியை கனதி பண்ணவேண்டிய நிலைமை பெரும்பாலும் கருத்திற் கொள்ளாத கதாபாத்திரங்களை சரளமாகப் படைத்து விடுதலும் முஸ்டீனின் கதைகளின் தராதர இறுக்கத்தை (qualitative inflexibility) ஐதாக்கி விடுகின்றது.
முன்பு ஓர் இடத்தில் குறிப்பி;ட்டது போன்று கதையின் மையப் பொருளில் தொடங்கி கதை பின்னப்பட்டுள்ளமை சராசரி வாசகனுக்கு ஓர் அசுவாரஸ்யமாகவே இருக்கப் போகின்றது.
அதற்காக சந்தைப்படுத்தல் உத்தி கதைஞனுக்கு வேண்டும் என்பது எனது கருத்தல்ல. கதைப்பின்னலும் அழகியலுடன் சார்ந்த ஓர் அம்சம் என்பதே எனது கருத்ததாகும்.
04. உள்ளடக்கமும் எதிர்காலம் பற்றிய பீதியும்:
பெரும்பாலான கதைகள் தமிழ் ஈழப் போராட்டத்தின் பக்கவிளைவுகளுடன் சம்மந்தப்பட்டதாகும். வெளிப்படையாகக் குறிப்பிட்டால் தமிழ் ஈழப் போராட்டமானது எவ்வாறு ஒரு விடுதலைப் போராட்டத்துடன் சம்மந்தப்பட்டது என்பது உண்மையோ அவ்வளவு உண்மையானது அது பிராந்திய விஸ்தரிப்பு வாதத்தின் புவிசார் அரசியல் அபிலாiஷகளுக்கு (புநழ pழடவைiஉயட யளிசையவழைளெ) அனுசரித்துச் செல்ல வேண்டியதும் அத்துடன் சர்வதேச ஆயுதச் சந்தையின் நெளிவு சுழிவுகளுடன் அனுசரித்துச் செல்ல வேண்டியதும் என்ற பல்வகை கடப்பாடுகளைக் கொண்டுள்ளது என்பதுமாகும். தங்களுடைய இலக்கு எவ்வித காப்புக் கலப்பும் இல்லாமல் கொண்டு சேர்க்கப்பட வேண்டுமெனில் பிராந்திய விஸ்தரிப்பு வாதத்துக்கும் சர்வதேச ஆயுத அங்காடிகளின் ஆசைகளுக்கும் சோரம் போயாக வேண்டிய ஒரு தேவை அவர்களுக்கு ஏற்படவே செய்கின்றது.
மறுபக்கத்தில் இவர்களை ஒழிக்கக் கங்கணங் கட்டியோருக்கும் இந்த இரு தரப்பாருக்கும் விட்டுக் கொடுக்க வேண்டிய தவிர்க்க முடியாமை உள்ளது. மேற்சொன்ன பிராந்திய விஸ்தரிப்பு வாதமும் சர்வதேச ஆயுத அங்காடியும் சர்வதேசிய அடிப்படையில் முஸ்லிம்களை தமது பாரம்பரியமான எதிரிகளாகப் பார்க்கக் கற்றுக் கொண்டவர்கள். அதனால் தமிழ் ஈழப் போராட்டத்தின் ஆணையிடும் சக்கிகளும் அவர்களைப் பூண்டோடு ஒழித்துவிடக் கங்கணங்கட்டியுள்ள சக்திகளும் முஸ்லிம்களின் உயிர்களையும் உடைமைகளையும் பகடைக் காய்களாக்கிக் கொண்டனர். இதனிடையே முஸ்லிம் உணர்வாளர்கள் கூட சிலவேளை பித்தம் தலைக்கேறி அள்ளுண்டு போனமையை இங்கு குறிப்பிடாமல் விட்டால் நேர்மையாகாது.
இந்த முத்தரப்பாரும் ஒரே நேர் கோட்டில் சங்கமிக்கும் கைங்கரியத்தை சர்வதேச சமூகம் அல்லது ஸியோனிஸம் செய்து முடித்தது. இதனால் இங்கும் ஓர் இரத்த ஆறு ஓடிற்று. இந்த வாய்ப்பாட்டைப் புரிந்து கொள்ளாமல் சிறுபான்மையைச் சேர்ந்த புத்திஜீவிகளும் குழப்பமான கருத்துக்களைச் சொல்லுகின்றனர். இன்னும் சிலர் வெளி நாடுகளில் இருந்து கொண்டு இங்கு என்ன நடக்கின்றது என்பதைப் புரியாமல் அல்லது சர்வதேச ஆயுத வியாபாரிகளின் கடை வாய்ப் பற்களின் ஊடாக வழியும் டொலர் சில்லறைகளுக்காக தமிழ் முஸ்லிம் மக்களிடையே மீண்டும் ஒரு குழப்ப நிலையைத் தூபமிடுகின்றனர்.
அதிலும் நாம் பயன்பாட்டு வாதத்தின் அடிப்படையில் இதனை நோக்கின் இன்றைய காலக் கட்டம் சிறுபான்மையினர் என்று இனங் காணப்பட்டவர்கள் தங்களின் கடந்த கால வெறுப்பு மிகு அனுபவங்களை முதலில் புறந்தள்ளிவிடல் வேண்டும். தங்களுக்குள் ஒற்றுமைப்பட்டு தனிப்படத் தனிப்படவும் முழுமையாகவும் தங்களுடைய உரிமைகளை வெண்றெடுப்பதற்கான தற்திரோபாயங்களையும் நிகழ்ச்சி நிரலையும் வகுக்க வேண்டிய தவிர்க்க முடியாத சூழலில் இருக்கின்றோம்.
அதனை தமிழ்; மற்றும் முஸ்லிம் வெகு ஜனங்களே இப்போது தெளிவாகப் புரிந்து வைத்துள்ளார்கள். தமிழ் மக்களை அரவணைத்துச் செல்லத் தயார் இல்லாத தம் தலைமைகளை முஸ்லிம்கள் புறக்கணித்து விடவும் முஸ்லிம் வெகு ஜனத்தின் உரிமைககை கண்டு கொள்ளாத தமிழ்த் தலைமைகளை தமிழ் மக்கள் புறக்கணித்து விடவும் தயாராகும் சிந்தனைத் தெளிவு ஏற்பட்டுள்ள ஒரு காலத்தில் அவற்றை செப்பனிட்டு உற்சாகப்படுத்த வேண்டியது சமுதாயவாத அல்லது பயன்பாட்டுவாத எழுத்தாளர்களின் பாரிய பொறுப்பாகும். இவ்வாறு சிந்திக்காத படைப்பாளர்கள் இன்னும் சிறுபான்மையினர்களுக்கு இடையிலான ஓர் இனக் கலவரத்தை அவாவி நிற்கும் பேரினவாத அடக்கு முறையாளர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு பல்லாக்குத் தூக்கும் கைங்கரியத்தை செய்வதாகவே படும்;. ஆகவே குறிப்பாக முஸ்லிம்களைப் பிரதிநிதிப்படுத்தும் படைப்பாளர்கள் இதில் சற்றேனும் கவனக் குறைவாக இருப்பதும் ஆபத்தனதாகும்.
இத்தனைக்கும் மேலாக இனப்பிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம்களுக்கான அதிகார அலகு பற்றிய சிந்தனைகளும் நம்மிடம் இருந்து தோன்றிற்று. அதனைக் கேட்டவர்கள் பிரக்ஞை பூர்வமாக புரிந்துதான் கேட்டார்களோ இல்லையோ அதன் பாரதூரத்தையும் அது புவிசார் அரசியலாளர்களிடையே தோற்றுவித்த குலை நடுக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு நம்மை சிந்திக்கத் தூண்டும் சில உதிப்புக்களையே முஸ்டீன் பிரதான இலக்கியக் களமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் அவரிடையே இயல்பாகக் காணப்படும் ஆவணவாக்கம் சம்மந்தமான ஆற்றல் அவரை செயல்படத் தூண்டியுள்ளது. இனப் பிரச்சினையில் முஸ்லீம்கள் தொடர்பான ஆவணவாக்கத்தின் ஒரு பகுதியை அவர் வெற்றிகரமாகச் செய்ய ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அந்த விடயதானங்கள் தொடர்பில் அவரிடம் காணப்படும் உள்ளகக் குழப்பங்களை அவர் நிச்சயமாக இனங்காணல் வேண்டும்.
அத்துடன் கிட்டத்தட்ட எல்லாக் கதைகளிலும் ஒரு பாத்திரம் ஆயுதங்களுடன் உலாவருவது இத்தொகுதியின் பிரதான பலஹீனமாகும். அது நமது சமகால தலைமுறையின் பலஹீனம் அல்லது காலத்தின் குறியீடு என்ற ஒரு இலகுவான பதிலை தயார் நிலையில் வைத்துக் கொண்டாலும் வன்முறையை நோக்கிய ஒரு மக்கள் கூட்டத்தின் நகர்வை ஏதோ ஒரு வகையில் உற்சாகப்படுத்தும் கைங்கரியத்தையே இவரின் கதாநாயக வழிபாடான அப்பாத்திரம் ஏற்படுத்தப் போகின்றது. அது இரத்தத்தையும் வன்முறையை நிராகரித்து விட்டு எங்காவது ஒரு புள்ளியில் இருந்து சமாதானத்தை நோக்கிய நகர்வை அங்கலாய்க்கும் சராசரி மனிதாபிகளுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஆகவே அந்த கருத்தியல் ரீதியான ஒரு மனக் குழப்பம் ஆசிரியரை தன்னுடைய எல்லையை மீறி ஆட்கொண்டிருப்பதானது நஅழவழையெட iவெநடடபைநnஉந தொடர்பான முன்னெடுப்புக்களை உற்சாகப்படுத்தாது. அதேவேளை ஆவணவாக்கத்தக்கான ஸ்கிறிப்ற் ஒன்றை அடிப்படையாக வைத்து அதனை சிறுகதையாக்கலாம் என்ற நம்பிக்கையை காரியமாக்க இன்னும் சில படிகளை அவர் தாண்ட வேண்டும்.
பலவீனங்களின் வரிசைக்குள்ளே ஹறாங்குட்டி என்ற சிறுகதையை அடக்குவதில் சில பிரச்சினைகள் காணப்படவே செய்கின்றன. ஹறாங்குட்டி என்ற இக்கதையையே பெயராக இத்தொகுதிக்கு வைத்ததன் மூலம் இத்தொகுதியின் master piece கதை இதுவே என ஆசிரியரே கூறியுள்ளார் என்று நாம் அபிப்பிராயப்படுவதில் தவறில்லை. அதில் வரவேற்கத்தக்க அம்சங்கள் காணப்பட்டபோதும் துப்பாக்கியுடன் அலையும் ஒரு தீவிர ஆத்மாவையும் பள்ளிவாசலுக்குள்ளே வைத்து பாவியைக் கொல்லத் துடிக்கும் 'அரசியலையும்' இளைய மனங்களில் விதைப்பதை ஒப்புக்கொள்ள முடியாதுள்ளது. அப்படியென்றால் பாக்கிஸ்தானில் ஷPஆக்களின் அல்லது சுன்னிகளின் அல்லது கிறிஸ்தவர்களின் வணக்க ஸ்தலங்களில் குண்டு வைத்து பள்ளிவாசலையும் தகர்த்து அங்கு வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களையும் கொல்லத் துணியும் மனங்களை நாம் நியாயப்படுத்துவதும் அங்கீகரிப்பதும் சரிகாணப்பட வேண்டிய விடயங்களாகி விடலாம் அல்லவா? அதனை இலங்கையில் வியாபாரிகளினதும் அரசியல் வாதிகளினதும் கையிலே சிக்கியுள்ள ஒரு மதவாத அமைப்பு செய்யும் வேலைகளுடனும் மொழி பெயர்த்து ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.
அத்துடன் இங்கு ஹோமோ ஸெக்ஸில் ஈடுபடுவாதாக சித்தரிக்கப்படும் மதகுரு விடயம் கூட சமூகத்தில் பகிரங்கப்படுத்தி அந்த விடயம் பற்றி அறியும் ஆவலை உண்டாக்குவதும் மதக்கல்வி ஸ்தாபனங்கள் இதைச் சரளமாக செய்யும் இடங்களாகப் பிரகடனப்படுத்தப்படலும் ஒரு வகையில் 'அரச சாhபற்ற நிறுவனங்களின'; பிரதான பணிகளில் பங்கேற்பதாவே அமையும். அதை மிகுந்த 'அதபு'டன் அடக்கி வாசித்திருக் முடியும் என்பதே ஒரு சராசரி மனிதனின் எதிர்பார்ப்பாகும்.
05. ஆளுமையை நிலைநிறுத்தும் அம்சங்கள்:
இத்தொகுதி பற்றிய விமர்சனத்தில் எதிர்மறையான அம்சங்கள் முதலில் எடுத்து விளக்கப்பட்டமையானது இவரின் இலக்கிய ஆளுமையின் மறுபக்கத்துக்கு உதாரணங்கள் இல்லை என்ற அர்த்தத்தில் அல்ல. கதைகள் அடுக்கி வைக்கப்பட்ட ஒழுங்கில் இருந்து பார்த்துப் பழகிய ஒரு முறையியலுக்கு ஆட்பட்டமையினால் என் போன்றவர்களுக்கு அத்தகைய விபத்தானது தவிர்க்க முடியாமற் போகின்றது.
தொகுதியின் பெயராக ஹறாங்குட்டி எடுக்கப்பட்டமையினால் அப்படைப்புக்கு ஆசிரியர் முக்கிய இடம்கொடுத்துள்ளார். ஆனால் படைப்பு என்று நோக்குகையில் ஓரளவுக்கு தேறக் கூடிய கதை மனமாற்றம் என்பது மட்டுமேயாகும். ஆசிரியர் தன்னுடைய பலவீனங்களை ஒரு பக்கத்தில் ஒதுக்கி வைத்து விட்டு அழகியல் அக்கறையோடு இக்கதையை கையாண்டுள்ளார். ஏனைய கதைகளை விட அமைப்பிலும் கதைப் பின்னலிலும் கதை நகர்த்திச் செல்லும் பாணியிலும் பயன்பாட்டு வாதத்தை விட அழகியல் அக்கறை மேம்பட்டுச் செல்லுகின்ற போக்கு கதை எங்கணும் விரவிச் செல்கின்றமை இக்கதைக்கான தனித்துவமாகும்.
மனமாற்றம் என்ற கதை எங்கணும் மொழிக்கையாட்சி நறுக்கெனவும் செப்பமாகவும் ஒரு சிற்பிக்கான நிதானத்துடன் செய்யப்பட்டடுள்ளது. உணர்ச்சிகள் வார்த்தைகளால் கட்டுக்கடங்காது செல்லாது கடிவாளமிடப்பட்ட தன்மையும் இதில் ஓரளவு காணப்பகின்றது.
இந்தக் கதாசிரியரின் பிரதான பண்பாகக் காணப்படும் மையப்புள்ளயில் இருந்து கதையை நகர்த்திச் செல்லும் பண்பானது கூட இக்கதையில் முற்றுமுழுவதுமாகக் கைவிடப்பட்டிருக்கின்றது. இக்கதை 'சுட்டுப்போட்டாலும் இவரால் கதை எழுத முடியாது' என்ற அபிப்பிராயத்தை நிராகரித்து இவருக்குள்ளும் ஒரு சிறுகதையாளன் உறங்கிக்கொண்டு இருக்கின்றான் என்ற ஒரு தோற்றப்பாட்டை இவரில் ஏற்படுத்தி விடுகின்றது. ஆக ஆவணவியலாளர் முஸ்டீன் சிறுகதை எழுத்தாளராக புனர் ஜென்மம் எடுக்க இக்கதை இவருக்குக் கைகொடுத்துள்ளது. ஆனால் அதைத் தொடர்ந்து வரும் கதையில் பழைய குறுடி கதவைத் துறடிதான். நூலின் அட்டை விNஷட கவனத்துடன் கையாளப்பட்டமை பாராட்டத்தக்கது.
iii
முடிவுரை:
ஓட்டு மொத்தமாக பார்க்கும்போது சிறுகதையின் ஆசிரியன் ஒருவன் போட்டுக் கொள்ளவேண்டிய கடிவாளத்தை உதறிவிட்டு அலைந்து திரியும் ஒரு சிறந்த ஆவணவியலாளன்இ மனமாற்றம் போன்ற சிறுகதைகளில் தான் எடுத்துக்கொண்ட அக்கறையை எதிர்காலத்தில் தொடருவாராயின் அவர் பெயர்பெற்ற சிறுகதைகளைத் தரும் வாய்ப்புள்ளது. அதனைத் தீர்மானிக்க வேண்டிது முஸ்டீன் மாத்திரமே.
அதே வேளை உற்பத்தி மற்றும் பக்க அமைப்பு, அதன் இடைவெளிகள் தொடர்பில் அச்சகர் விட்ட கவனக்குறைவு நூலின் குறைபாடாக வந்து சேர்ந்தமை ஆசிரியன் துர்அதிஷடமே.