Monday, February 25, 2013

செய்ஹ் இஸ்மாயீல் ஞாபகார்த்த தயாரிப்பகம் - அறிமுகக் குறிப்பு



1985 ஏப்ரல் 29ம் திகதி இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூக்கர்கல் எனும் பகுதியில் வைத்து எட்டு முஸ்லிம்கள் தமிழ் ஆயுதக் குழுவொன்றினால் கடத்தப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சாக்குப் பை அளிக்கப்பட்டு அதனை மண்ணைக் கொண்டு நிரப்பப் பணிக்கப்பட்டனர் பின்னர் அந்த மண்மூடையுடன் அவர்கள் இணைத்துக்கட்டப்பட்டனர் பின்னர் உயிரோடு ஆற்றில் மூழ்கடிக்கப்பட்டு மிகக் கொடுரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். இதுதான் கிழக்கில் நிகழ்ந்த முதலாவது கூட்டுப்படுகொலை. அவர்களில் முதலாவதாகக் கொலை செய்யப்பட்டவர் காவத்தமுனையைச் சேர்ந்த செய்ஹ் இஸ்மாயீல் என்பராவார். இவரது ஞாபகார்த்தமாக 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதே செய்ஹ் இஸ்மாயீல் ஞாபகார்த்த தயாரிப்பகம் (சிம் புரடக்ஷன்)

இலங்கை முஸ்லிம்களின் சமய, சமூக, கலாச்சார மற்றும் ஊடக, கல்வி, பொருளாதார அரசியல் உட்பட அனைத்துப் படித்தரங்களிலும் சீர்திருத்தங்களை ஏற்படுத்தும் நீண்டகாலத் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்பட உறுதிபூண்டிருக்கிறோம். அந்த அடிப்படையில் ஒரு முதன்மைத் தேவையாக முஸ்லிம்களுக்கான ஊடகத் தேவையைக் கருத்திற் கொண்டு செயற்பட முடிவெடுத்தோம். அதன் பிரகாரம் கடந்காலங்களில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு இங்குள்ள எந்த ஊடகமும் முக்கியத்துவம் கொடுக்கவில்லையாதலால் முஸ்லிம்கள் எதிர்கொண்ட மிகப்பாரிய அவலங்கள் கூட பேசப்படவில்லை அதன்படி முஸ்லிம்கள் கடந்தகாலங்களில் எதிர்கொண்ட அவலங்களை ஆவணமாகப் பதியும் முயற்சியை முன்னெடுத்தோம் அதில் வெற்றியும் கண்டோம் பல ஆவணப்படங்களையும் உருவாக்கினோம். 

உலகில் காட்சி ஊடகம் முஸ்லிம்களை தீவிவிரவாதிகளாகவும் இஸ்லாத்தை தீவிரவாதமாகவும் சித்தரிப்பதைப் பார்த்து வெகுண்டெழுந்த நாம் அதே காட்சியூடகம் முலம் எமது பிரச்சினைகளைப் பேசலாம் என்பதற்கான பரீட்சார்த்த முயற்சிதான் தீ நிழல் எனும் திரைப்பம் - இது இலங்கையின் முதலாவது முஸ்லிம் திரைப்படம் - முலம் 1992ல் அழிஞ்சிப்பொத்தானை எனும் கிராமம் ஆயுததாரகளின் கொடூரமான தாக்குதலினை சந்தித்தமையையும் அதன்பின்னர் அக்கிராமமக்கள் எதிர்;கொண் சமூகப்பிரச்சினைகளையும் வெளிக்கொண்டுவந்தது 2007ல் தயாரிக்கப்பட்டு 2009ல் வெளியிடப்பட்டது. 

இந்த நீண்ட பயணத்தில் எமக்கான தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ள நாம் அதிகவிலை கொடுக்க வேண்டியிருந்தது.  எமக்கான தேவைப்பாடுகள் அனைத்தையும் நிவர்த்தி செய்யும் பொருட்டு ஒரு கட்டடத்தினை அமைக்க முவெடுத்து 2006ம் ஆண்டு அதன் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. மாநாட்டு மண்டபம், தகவல் தொழிநுட்ப அறை, ஒலி-ஒளிப்பதிவு ஸ்டுடியோ, அச்சுஊடக அறை, இலத்திரனியல் ஊடக அறை, அச்சகம், பிரமுகர் அறை, கணனிப் பிரிவு, வாசிகசாலை போன்றவற்றை உள்ளடக்கியதாக அது திட்டமிடப்பட்டு கட்டடவேலைகள் 25 வீதம் முடிவுற்ற நிலையில் அப்படியே இருக்கிறது. 

 இலங்கை முஸ்லிம்களுக்கென்று ஒரு தினசரி செய்திப்பத்திரிக்கை கூட கிடையாது அதை உருவாக்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அது சாத்தியப்பட்டதும் தொடர்ந்தும் இலத்திரனியல் ஊடகப்பரப்பில் கால்பதிக்க உத்தேசித்துள்ளோம்.


No comments:

Post a Comment