Friday, November 30, 2012

ஹராங்குட்டியின் வீடியோ முனனோட்டம்


விரைவில் வருகிறான் ஹராங்குட்டி

விரைவில் வருகிறான் ஹராங்குட்டி

விரைவில் வருகிறான் ஹராங்குட்டி



மூர்க்கமான யுத்த வீரனாக



உணர்வுகளையெல்லாம் ஒன்றுதிரட்டி
அனைத்தையும் மறக்க நினைக்கிறேன்
காலம் புன்னகைத்துக் கொள்கிறது
முடியாததை முயற்சிப்பதாக

ஆதரவுக்காய் ஒரு குரலேனும் ஒலிக்காது
ஏகாந்தமாய்க் கைவிடப்பட்ட பொழுதில்
மனசாட்சி  சாந்தம் கொண்டிருந்தது
உணர்வுகளேதுமற்று மரத்துப் போய்...

இழைக்கப்பட்ட துரோகத்தை நினைக்கையில்
உடல் வெப்பம் உச்சமடைந்து வியர்த்து
வெறி கொண்டு செயற்படத் தூண்டிற்று மனது
புத்தி அமைதி தெளிக்க பொறுமை வியாபித்தது

இறையச்சம் கட்டிப் போட
கண்கள் கலங்கி சிரம் தாழ்ந்தது
இறைவா நீ
தண்டிக்கிறாயா?
சோதிக்கிறாயா?
இயல்பாக உதிரும் வார்த்தைகள்

ஆண்டவன் மீது அனைத்தும் சாற்றி
ஏதுமற்று வெறுமையாகிப்போகையில்
அனைத்தையும் மறக்க நினைக்கிறேன்
அப்போதும் முடியாமற்றான் போகிறது.

தண்டனையாயின் அனுபவிக்கவும்
சோதனையாயின் பொறுமையுடன்
எதிர்கொண்டு வெல்லவும்
வலுகொள்கிறது மனது.

உறுதியாக எனக்குத் தெரியும்
நான் வீழ்ந்துவிடவில்லையென்று
அறியாத உலகம் பழிக்கும்
எல்லாம் உயிர் கொண்டெழுகையில்
எல்லாமும் மாறும்

நானும்
வெறிகொண்ட மூர்க்கமான யுத்தவீரனாய்

நியாயப்படுத்தலின் தாக்கம்



நம்பிக்கை தொலை தூரமாகிப் போக
நான் குழம்பிப் போகிறேன்
யார் வார்த்தைகளை நம்புவது?
எல்லோருமே உறுதியோடுதான் சொல்கிறார்கள்
தங்களை மட்டும் நியாயப்படுத்தியபடி
எல்லோர் வார்த்தைகளும்
தடங்கலின்றியே ஒலிக்கின்றன

எல்லோரும் நியாயப்படுத்த
தவறுகளே இல்லையென்றானது
தாயும் புனிதமாகிறாள்
மனைவியும் புனிதமாகிறாள்
உறவுகளும் நண்பர்களும் கூட

உணர்ச்சிவசப்பட்டபோது
அவர்கள் வெளிப்படுத்திய
கொடூரமான வார்த்தைகள் அனைத்தையும்
அமைதி கொண்டபோது
மறந்துவிட்டார்கள்

தங்களையே நியாயப்படுத்தும்
அனைவருக்கும் மத்தியில்
புன்னகைத்தபடி இருக்கவும்
பொறுமையோடு அனைத்தையும்
செவிமடுக்கவும் பழகிக் கொண்டேன்

விரைவில் ஒரு நாள்
உண்iமைகள் தெளிவாகிட
எனது கணிப்புக்களும் சரியாக இருக்கும்
அப்போதும் நான்
புன்னகைக்கப் பழகிக் கொள்ள வேண்டும்

மகா கொலைகாரன்



எனக்கு ஒரு துப்பாக்கி வேண்டும்
அதில் பல்லாயிரம் குண்டுகள் இருக்க வேண்டும்
சமூகத்தின் பெயரால் வாழும்
அயோக்கியர்களையும் தலைவர்களையும்
பகிரங்கமாகச் சுட்டுக் கொன்று
நடுவீதியில் வீச வேண்டும்

மற்றவன் கண்ணீரில் வாழ்பவனும்
மாற்றான் மனைவியைத் தீண்டுபவனும்
மதபோதகராய் வேசமிட்டு
சிறுவர்களுன் சேர்க்கை செய்யும்
மார்க்கம் போதிப்பதாய் ஓலமிடும் ஆசாமிகளையும்

தலைவன் எனச் சொல்லிக் கொண்டு
தான்தோன்றித் தனமாய் வாழும்
குடிகாரத் தறுதலைகளையும்
எனது கையால் கொல்ல வேண்டும்

உத்தம வேசம் போட்ட வீர புருஷர்களையும்
களவானிப் பயல் கூட்டத்தையும்
எல்லோரையும்
எல்லோரையும்

கனவொன்று கண்டேன்
துப்பாக்கி வீரனாகவும்
வாள்வீரனாகவும்
போர்வீரனாகவும்
வலம் வருவது போல

அடுத்த தலைமுறையிலேனும்
தென்றல் வீசட்டும்.